வெள்ளி, 7 அக்டோபர், 2016

SUMO வும் சவாரியும்.

1041. இரும்பை இணைக்கிறது இதயம்.
இரும்புக்குத் தெரிவதில்லை அது இதயமென்று..

1042. ஒருவாரம் முன்னாடி ..

முனியம்மா :- இதென்ன ரவா உப்புமா.. நீ கடலைப்பருப்பு, பட்டாணி, வேர்க்கடலை தாளிக்கமாட்டியா.

நான் :- அதெல்லாம் போட்டா கிச்சடி . இது உப்புமா.

முனியம்மா:- நாங்க இன்னும் கொடமொளகாய், காரட்டு, பீன்ஸ் எல்லாம் உப்புமால போடுவோம். எண்ணெய் தொட்டா கையில ஒட்டும்.

நான். :- எண்ணெய் அதிகம் சேர்த்தா ஹார்ட்டுக்கு நல்லதில்ல.

இன்னிக்கி:-

முனியம்மா :- என்னா தயிர் சாதம் இது. கடலைப் பருப்பு தாளிக்க மாட்டியா...

நான் :- தயிர்சாதத்துல கடலைப் பருப்பா ?

மைண்ட் வாய்ஸ் :- டூ மச் முனியம்மா . என் புருஷன் பிள்ளைங்களே நான் சமைச்சத கொற சொல்லாம சாப்பிடுவாங்க. என் பொறுமைக்கும் எல்லை இருக்கு. --

மனசாட்சி :- வெயிட் வெயிட் ..பொறுமை பொறுமை யுவர் ஹானர். ஆ .. ஊன்னு சவுண்டு விட்டீங்கன்னா அவ வராம போயிடுவா. அப்புறம் யார் பாத்திரம் எல்லாம் தினம் தேய்ப்பா.

1043. Appada.. thank god. �vayithula puliya karaicha vishayam sambara mariduchu

1044. இதனால் என் தோழமைகளுக்கு அனுப்பும் தகவல் " நான் யாருக்கும் எந்த விதமான வீடியோ தகவல் ஏதும் அனுப்பவில்லை" இருந்தாலும் நான் அனுப்பியதாக அவரவர் பெயர் போட்டு வந்தாலும் திறக்காமல் டெலீட் செய்துவிடுங்கள்...நன்றி

1045. Kavirikkaga kavalapaduratha , kovaikkaga kavalapaduratha..

#Nalla velai nanga thappuchomkiranga pasanga :P

1046. photo edukkarathu easy. Bt orutharukku pidicha innoruthavungalukku pudikirathulla athan kavalaya ukarnthuruken ���

#sunday_sundai �

1047. ரத்தத்தின் நிறம் சிவப்பு. சுவையோ உப்பு

1048. ஆசையே துன்பத்துக்குக் காரணம்.

1049. சீரியல்ல மட்டும் எப்பிடி இப்பிடி நீள நீளமாப் பேசுறாங்க. ஒருத்தர் விழுந்தா தூக்கி விட்டுப் போவாங்க. அவர உக்கார வச்சு வரலாறை விசாரிக்கிறாங்களே. என்னே மனிதாபிமானம்.

1050. Tvn Tvnarayanan Y.day i saw you; said Hello Madam.. but missed to meet you. thanks and lets have some other chance to meet. god bless you and famaily, for longevity prosperity and happy healthy wealthy environs going for hundreds of years, Thenammai Kavithaigal.

#Tvn Tvnarayanan அதனாலென்ன பரவாயில்லை.. நாம் சந்திக்க வேண்டும்..பொருத்தமான ஒரு புத்தக விழாவில் அவை நிறை வேறுமெனக் காத்துக்கொண்டிருந்தேன். புத்தக வெளியீட்டு வெள்ளி விழாவில் சந்தித்து விட்டோம்.. நானும் லேணாதமிழ்வாணனும் சந்தித்துப் பேசிக்கொண்டோம்..நெடுநாளைய நட்பு , அவர்கள் அப்பா காலத்திரிலிர்ந்தே.. உங்களைப் பற்றி அன்றைய மேடையில் ஒரு சில வார்த்தை சொல்ல விழைந்திருந்தேன்.. இனியொரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. உங்கள் கைபேசி எண்ணை என் இன்பாக்ஸில் தெரிவியுங்கள்..இன்று இரவு, பேசுகிறே. நீங்கள் தகுதியான பரிசை , தகுதியானவரிடமிருந்தும், குழிமியிருந்த தமிழ் பெருந்ததைக்கள், வள்ளல் பெருமக்களிடையே ஆசி பெற்று அப் பரிசை ஏற்புரை செய்தது எல்லாம் ,
ஒரு மகளின் புகழில் ஒரு தந்தை எப்படி மகிழ்ச்சியில் திளைப்பாரோ , அத்தகைய தருணத்தை எனக்கும் தந்திருக்கிறீர்கள்..

#தாங்களும் குடும்பமும் என்றும் நலமுடனும், வளமுடனும் ,நோய் நொடி யற்ற ஆயுராரோக்ய மங்கள ஸெளபாக்யங்களுடன், நல் வாழ்வு வாழவேண்டுமென்று எங்களின் அன்றாட இறை பிரார்த்தனைகளில், உங்களுக்காவும் வேண்டிக்
கொண்டு வருகிறோம்..இது தொடரும்!

#நன்றி..நலம் ஆளட்டும். வளம் சேரட்டும். வாழ்க, வளர்க, வெல்க!

#தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் ---- பெருமதிப்பிற்குரிய தந்தைக்கு நன்றி. இந்த அன்புக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்.

1051. #தொடர்_ஸ்டேடஸ்

கேள்விகள்... நாம சொல்ற கருத்தை எத்தனை பேர் ஆமோதிக்கிறாங்கன்னு பார்க்கவும் கேட்கப்படுது

1052.தேன் பாடல்கள் - 119.
சிவாஜியைப் பார்க்கும்போது எனக்கு என் ஐயா ஞாபகம் வரும். என் பிள்ளைகளுக்கு என் அப்பாவின் ஞாபகம் வருகிறது. அன்பான மனிதர்களை மறக்க முடியாதுதானே.. அவர் நினைவாக..

http://www.youtube.com/watch?v=qEQkE4_FLgk&sns=fb

1053. கூட்டத்துல கோஷம் போட்டவங்கள விட்டு ஓரமா வேடிக்கை பார்த்துட்டு நடந்ந்துபோயிட்டு இருந்தவங்கள போலீஸ் பிடிச்சுப் போட்டு நொறுக்கிறமாதிரி இருக்கு.

- ஃபேஸ்புக்குல எதேச்சையா ஒரு பெரிய விவாதத்துல ஒரே ஒரு கமெண்டுக்கு லைக் போட்டவங்களோட நிலைமை.

1054. ப்ராப்தம்September 24, 2016 at 9:59 AM

கோபால்ஜி நமஸ்காரம்.... பையனுக்கு எக்ஸாம் நடக்குது. அதுதான் லேட்.. சிறப்பான அறிமுகம் இந்த பதிவுல திருமதி தேனம்மை அவர்களின் சாதனைகள் பற்றி சொல்லி இருக்கீங்க.. மாதாமாதம் மங்கையர் மலர்னு ஒரு புக் வாங்கிட்டு இருக்கேன்.. அந்த புக் கூட இலவச இணைப்பாக எப்பவுமே ஒரு குட்டி புக் கொடுப்பாங்க.. பெரும்பாலும் ரெஸிப்பி புக்கா தான் இருக்கும். அப்பாவும் மகனும் வெரைட்டி யா சாப்பாடு பண்ணினா விரும்பி சாப்பிடுவாங்க.. இதல்லாம் எதுக்கு இங்க சொல்றேன்னு தோணுதா... இந்த பதிவில் தேனம்மை அவர்களின் போட்டோ பார்த்ததும் வேர எங்கியோ இந்த போட்டோ முகம் பார்த்த நினைவு வந்தது. கவிதை..கட்டுரை..கதைகள் எழுதுவதில் மட்டும் திறமையானவங்கில்ல..சமையல் கலையிலும் திறமையானவங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 16---31--டிஸம்பர் மங்கையர் மலருடன் இவர் எழுதியிருந்த செட்டிநாட்டு காரசார சமையல் புக் இலவச இணைப்பாக கிடைத்தது. சமையல் குறிப்புகள் தெளிவாக விளக்கமாக வித்தியாசமாக இருந்திச்சி சில ஐட்டங்கள ட்ரை பண்ணி பார்த்தேன். நல்லா டேஸ்டா இருந்திச்சி..தேனம்மை மேடம் தாங்க்ஸ் திறமைசாலிகளை பாராட்டி நாங்களும் அவர்களின் திறமைகளை அறிந்து கொள்ள கோபால்ஜி அறிமுகப்படுத்தி வர்றாங்க. படிக்கவே சந்தேஷமா இருக்கு...

-- மனம் நிறைந்த நன்றிகள் ப்ராப்தம்.!!!

1055. துவைத்தபின்
காசு தருகிறது..
.
.
வாஷிங் மெஷின்..

-- எவ்வளவுதான் செக் பண்ணாலும் ஏதோ ஒரு காயின் அப்போ அப்போ மாட்டிக்கிது


1056. தேனான தேனுவுக்கு ................

  என் இனிய சிநேகிதியே முதல் முதலாக உன்னை பார்த்தபோது என்னை கவர்ந்தது உன் சிரிப்புதான்...தினமும் உன் எழுத்துக்களையும் உன் புகைப்படத்தையும் பார்க்காமல் என் நாள் நிறைவு பெறாது .......யாருடைய கண் பட்டதோ உன் எழுத்துக்களின்மேல் .........உன் கையில் புண்பட்டு விட்டது......உன் கை கட்டை பார்த்ததும் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் .............என் அன்பு தோழியே ......விகல்பம் இல்லாத என் இனிய சிநேகிதியே........ நீ சீக்கிரம் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன்.நலமுடன்........உன் அன்பு ஜம்மு .......

1057. கே ஆர் புரத்துக்குப் போனமாதம் போயிருந்தபோது ஒரு தெருவின் முக்கில் ஒரு பாதாள சாக்கடை ( pothole ) திறந்திருந்தது. இரண்டு மூன்று பேர் பெங்களூருவின் சில இடங்களில் பாட் ஹோலில் வண்டியிலிருந்து விழுந்து ரொம்ப மோசமா ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கு. Arnita saini ., என்பவர் அதுல ஒருத்தர்.

நகரத்தின் சுத்தத்தில் காமிக்கும் அக்கறையை பாதாள சாக்கடை மூடுவதிலும் காண்பித்து இருக்கலாம். இன்னும் 20 நாளில் எல்லாவற்றையும் சரி செய்து விடுவோம் என்கிறார்கள். அதுவரை டூவீலரில் செல்பவர்கள் எல்லாரும் பார்த்து பத்திரமா போங்க.


1058. குதிரை வாங்கிட்டேன்னு பெருமைப்பட்டுக்கலாம். கொள்ளுத் தின்ன வைச்சுட்டேன்னு பெருமைப்பட்டுக்க முடியுமா... அது இஷ்டத்துக்கு திங்குதா, நம்ம இஷ்டத்துக்கு கட்டுப்பட்டு திங்குதான்னு ஒரே ஃபீலிங்க்ஸ்.. இதப் படிச்சிட்டு ..நோ நோ யாருக்கும் கொலை வெறி வேண்டாம் ப்ளீஸ்..

1059. SUMO..

oru Japanese psychological advice ithu.. shut up and move on.. ithuthan..


1060. சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ.. அந்தக் காரில்பின்புறம் பாட்டையாவின் மடியில் அமர்ந்திருப்பது எனது பாட்டியார் ( ஆயா )


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.
 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)