புதன், 15 ஜூன், 2016

ஒற்றை வரி விஷம்.

////ஒரு ஹீரோவும் ஐந்து ஸீரோக்களும் - இலக்கியப் பிலிம் காட்டல் //// - இதுதான் அது. என் முகநூல் நண்பர் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களின் ட்விட்டர் கருத்து.




////இலக்கியச்செயல்பாடு எது...?
ஒரு நூல். அது படைப்பிலக்கியமோ,மொழிபெயர்ப்போ..அதை முழுவதுமாக வாசிக்காமலோ, அல்லது வாசித்தும் அதன் குறை நிறை பற்றி அலசி ஆராயாமலோ போகிற போக்கில் கருத்துச்சொல்லும் பரபரப்புத் தன்மை இணைய ஊடகங்களில் பெருகி வருகிறது.
விவேக் ஷன்பேக் ,ஞானபீடம் பெற்ற திரு யூ ஆர் அனந்தமூர்த்தியின் மருமகன் என்பதோடு [ஜடாயுவின் திருத்தத்துக்கு நன்றி] கன்னட இலக்கிய எழுத்தாளர். ஆங்கிலவழி அவரது சிறு கதைகளை மொழியாக்கும் முயற்சியை ஜெயமோகன் மேற்கொண்டபோது அந்தப்பணியில் நாங்கள் ஐந்து நண்பர்கள் அவரோடு எங்களை இணைத்துக்கொண்டோம்.அதுவே வேங்கை சவாரி, அதில் உள்ளடக்கத்திலோ நாங்கள் மொழிபெயர்த்த போக்கிலோ குறை இருந்தால் உரிய முறையில் கண்ணியத்தோடு சுட்டிக்காட்டுவதே இலக்கிய ஆர்வலர் அல்லது விமரிசகராக இருப்போர் செய்யக்கூடியது.அதை எப்போதும் ஏற்கத் தயார்; அதை விடுத்து மூத்த எழுத்தாளராகிய திரு விமலாதித்த மாமல்லன் ஸீரோ என்றும் இலக்கிய பிலிம் காட்டலென்றும் எழுதி இருப்பது எந்த வகையிலும் ஓர் இலக்கியச்செயல்பாடு அல்ல.////

///இன்றைய தமிழ்இந்துவின் நடுப்பக்கத்தில் திரு ஜெயமோகனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் மொழிபெயர்த்திருக்கும் விவேக் ஷன்பேக்கின் ’’வேங்கை சவாரி’’ பற்றி ஒருபகீர்ப்பதிவு என்ற தலைப்பில்’ஒரு ஹீரோவும் ஐந்து ஸீரோவும்’’ என விமலாதித்த மாமல்லன்‘ எழுதியதாக வெளியிட்டிருக்கிறார்கள்.ஆனால் .அவர் அப்படி சொல்வதற்கான காரணம் எதுவும் அதில் இல்லை. விளக்கம் விமரிசனம் எதுவும் இல்லாத வெற்று ட்வீட் மட்டுமே அது. அந்த ஐந்து ஸீரோக்களில் நானும் ஒருத்தி என்பதற்காக இதைச் சொல்லவில்லை.ஆனால்...பத்திரிகை பரபரப்புக்கு நான் மிகவும் மதிக்கும் சிறப்பான நாளிதழ் தமிழ் இந்துவும் ஆளாவதா?மனம் மிக வருத்தமாய் இருக்கிறது.///

-- எங்கள் தமிழன்னை சுசீலாம்மாவின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுத்துப் போட்டுள்ளேன்.

சுசீலாம்மா எங்கள் தமிழன்னை என்ற ப்ரேமையில் மட்டுமல்ல அவரது தமிழ்ப் புலமையிலும் மொழிபெயர்ப்பின் சுவையிலும் மயங்கி இருப்பதால் இதை அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டது. முழுமையாகப் படித்து விமர்சிப்பதை விட ஃபாஸ்ட்ஃபுட் கலாச்சாரம் போல மேலோட்டப் பார்வையில்  இப்படி ஐவரையும் விமர்சித்திருக்கும் பாணி ஏற்கத்தக்கதல்ல.

விமலாதித்த மாமல்லன் நான் மதிக்கும் எழுத்தாளர் எனினும் ஒற்றை வரியில் விஷத்தைப் பாய்ச்சி இருப்பது வருத்தம் தருகிறது. எங்களின் கண்டனத்துக்குரியது அம்மா.


5 கருத்துகள்:

  1. நன்றி தேனம்ம்மை.படித்து விட்டுக்குற்றம் சொன்னால் தாராளமாய் ஏற்கலாம்

    பதிலளிநீக்கு
  2. எதுவும் புரியவில்லை... மேலதிக விளக்கம் முடிந்தால் தரவும் ... https://ethilumpudhumai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  3. ஹ்ம்ம் அம்மா

    முகநூல் பக்கத்தில் பாருங்கள் ஸ்ரீமலையப்பன் சகோ

    ஆம் வெங்கட் சகோ ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)