சனி, 23 ஏப்ரல், 2016

சாட்டர்டே போஸ்ட். பெர்மா கல்சரும் கீர்த்தனா ஆரண்யா அல்லியும்


5000 சதுர அடி நிலப்பரப்பு,
பெர்மாகல்ச்சர் சிஸ்டம் அமைக்க செலவு : ரூ 50,000
தின வருமானம்: 250 ரூ.

இப்பிடி ஒரு செய்தியை முகநூலில் என் தோழி ஆரண்யா அல்லியின் பக்கத்தில் பார்த்தேன். ஆர்கானிக் காய்கறி தெரியும் அதென்ன பெர்மா கல்சர் என்ற யோசனையோடு அவரிடம் ஆர்கானிக் ஃபார்மிங் பற்றியும் பெர்மா கல்சர் பற்றியும் விசாரித்தேன்.

மிக மென்மையான சுபாவம் என்று ஒருவரைப் பார்த்தவுடன் கணித்துவிடலாம் என்றால் அதில் ஆரண்யாதான் முதலிடம் வகிப்பார். நிறைய தோட்டம் பற்றியும் வீட்டில் விளைந்த காய்கள் பற்றியும் புகைப்படங்களாக ஹோம் பேஜில் வரும். நிறைய எம்ப்ராய்டரி துணி வகைகள் , புடவை ரகங்களும் அணி வகுக்கும். இது பற்றி எல்லாம் ஒரு நாளில் அவரிடம் இன்பாக்ஸில் விசாரித்திருந்தேன்.


அவரிடம் நான் கேட்ட கேள்வியும் அதற்கான பதிலும் இதோ. ஆனா விவசாயம் பற்றிய கேள்விகளும் பதில்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் போல. :)

அன்புத் தோழி என்னுடைய வலைப்பதிவான சும்மா வில் நான் சனிக்கிழமை தோறும் சாட்டர்டே போஸ்ட் என்ற ஒன்றை வெளியிடுகிறேன். நம் முகநூல் வலைப்பதிவ நண்பர்களிடம்கேள்வி கேட்டு பதில் வாங்கிப் போடுகிறேன். அதற்குத் தாங்கள் பதில் அளிக்க வேண்டுகிறேன். கேள்வி இதுதான். 
///ஆர்கானிக் ஃபார்மிங் பத்தி சொல்லுங்க அப்பிடியே பெர்மா கல்சர்னா என்னன்னும் சொல்லுங்க ///
உரங்களின் கேடு, நாம் சந்தித்து வரும் பின் விளைவுகள்
இதைத் தவிர்ப்பது எப்பிடின்னு சொல்ல வேண்டுகிறேன்
உங்க பதில் ஒரு கட்டுரை அளவில் இருக்கலாம்.
விரிவா அனுப்புவீங்கன்னு எதிர்பார்க்குறேன்.
உங்க புகைப்படம் ஒண்ணும் வேணும்
நிலங்களின் பயிர்களின் புகைப்படங்களையும் அனுப்புங்க.
எதிர் பார்த்துட்டு இருக்கேன். சமயம் வாய்க்கும்போது அனுப்புங்க்
அன்பும் நன்றியும் தேனம்மைலெக்ஷ்மணன்
என் வலைத்தளத்தில் வெளியான பின்பு முக நூலில் இணைப்பு அனுப்புறேன்
உங்க பதிவின் மூலம் இன்றைய உணவு விவசாயம் பத்தி ப் பலரும் அறிய ஏதுவாகும் என்றுதான் கேட்டிருக்கின்றேன்.



என் பெயர் அல்லி. வயது 50+ . ஊர் சேலம். பிறந்து வளர்ந்தது தொப்பப்பட்டி எனும் குக் குக் கிராமத்தில். ஒரு மைல் நடந்து சென்று பள்ளி. அந்த மண் பாதை நடைதான் என்னை இவ்வாறு வடிவமைத்திருக்கக் கூடும். காலேஜ் தொட்டதும் கல்யாணம். அடுத்தடுத்து இரு குழந்தைகள். கிராமத்தில் இருந்து சேலம் குடியேற்றம். பணம், அச்சடிக்கப்பட்ட ஒரு விதமான காகிதம். அவ்வளவுதானா!!! வயது 21அல்லது 22. அதுவரை எனக்கென்று ஒரு பர்ஸ் இல்லை. ஆனால் இரு குழந்தைகள் தாயாக பல தேவைகள் இருந்தது. அப்புறம் தையல் பழகி, ஒற்றை மெஷினில் தைத்து, ஒரு உதவியாளர் தொடங்கி, சின்ன கடை, பெரிய கடை என்று 23 வருட சரித்திரம் அது. இன்று உள்ள கீர்த்தனா லேடீஸ் டெய்லரிங், 10, ஜெ.ஜெயரத்தினா காம்ப்ளக்ஸ், 5. ரோட், சேலம். 4 என்ற விலாசம் 17 வருடம் கையில் இருக்கு.

பெண் உடைகள் அனைத்தும் கால மாற்றத்திற்கு ஏற்ப, சுடிதார்ஸ் விற்பனை உண்டு. காலேஜ் போக அன்றாட உடைகள் எங்கள் ஸ்பெஷல்.

எம்பிராய்டரி .. ஹேண்ட்& மெஷின் இரண்டும் உண்டு. பட்ஜெட் சொன்னால் போதும், டிசைன் எங்கள் சாய்ஸ் . என்பது வாடிக்கையாளர் எங்கள் பேரில் வைத்திருக்கும் நம்பிக்கை.

விவசாய குடும்பம் என்பதால் இயல்பாகவே தொட்டிச்செடிகள். அது காய்கறிகள் கீரைகள் பூச்செடிகள் என்று. அந்தப் பச்சை தான் மன அழுத்தம் குறைக்கும் மாமருந்து.




செடி வளர்ப்பு அக்கம்பக்கம், தோழிகள் என பரவி அவங்களுக்கு ஆலோசனை சொல்லி, அப்படியே வீட்டுத்தோட்ட அமைப்பாளரா மாறிட்டேன்


கூடவே ஏன் விவசாயம் என்பது இலாபகரமான வேலை யாக இல்லை என்று கேள்வி. தண்ணீர் குறைவால் என்பது நேரடி பதில். ஆனால் அது சரியல்லவே. நாம் செய்வது என்ன? இந்த நிலை தொடர்ந்தால் அதன் முடிவு என்ன? சில புத்தகங்கள், நம்மாழ்வார், பில் மொலிசன், ஃபுகாக்கோ, பாலேகர் போன்ற மகான்களின் கட்டுரைகள் வேறு செய்திகளைச் சொன்னது. இந்தக் குருமார்கள் சொன்னதுதான் " பெர்மாகல்ச்சர் " . பெர்மனண்ட் அக்ரிகல்ச்சர்.

" நிரந்தர வேளாண்மை.
ஹர்ஷிதா விதைக்கும் விதை. :)

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது::: என பழமொழி. நானும் குமார் அம்பாயிரமும் சொல்வது " உழாதவன் கணக்கு ". குமார் அம்பாயிரம் எழுத்தாளர், டிஜிடுருடு எனும் ஆஸ்திரேலிய அபாரிஜினல் வாத்தியம் வாசிப்பவர், இயற்கை ஆர்வலர், நம்மாழ்வாரின் மாணவர். ஐயாவின் வானகம் வீட்டை கட்டியவர். சமூக ஆர்வலர். எனக்கு இலக்கியம் மூலம் நீண்ட கால நண்பர்.

அவரின் விருப்பமும் விவசாய நலனே என்பதால் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற தொடங்கினோம்.
இது தான் " ஆரண்யா ஆர்கானிக் ஃபார்மிங்" தோன்றிய கதை.😋😋😋

பெர்மாகல்ச்சர் என்பது விவசாயம் சார்ந்த ஒற்றை நோக்கம் கொண்டதல்ல. அது சமூகம் சார்ந்த பரந்துபட்ட பல்வேறு நோக்கங்கள் கொண்டது

பருவம், இடம், காலம் அனைத்தையும் ஒருங்கே இணைத்து பயன்படுத்துவது.





தண்ணீர் பாய ஸ்ப்ரிங்ளர் ஸிஸ்டம். அரை ஏக்கருக்கு இரு பெண் வேலையாட்கள் போதும். இனி உழவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இயற்கை இடுபொருட்களே போதுமானது. சராசரி மாத வருமானம் 25 ஆயிரம் ஈட்ட முடியும். செலவுபோக 12ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மிகச் சுலபமாக சம்பாதிக்கலாம்.


 Ks Rajan Cdk நம் வேளாண் வித்தகர் நம்மாழ்வார் அய்யா அவர்களின் இயற்கை வேளாண்மை மற்றும் சமீபத்தில் மத்திய அரசின் விருது பெற்ற பாலேக்கரின் இயற்கை விவசாயத்திலிருந்தும் "பெர்மகல்சர் " வேளாண்முறை மாறுபட்டுள்ளதா அல்லது ஒத்துள்ளதா என்பதற்கு தாங்கள் ஒரு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். மேலும் "ஒற்றை வைக்கோல் புரட்சி " தந்த மசானபு ஃபுகோகா வின் வேளாண் யுக்திக்கும் மேற்குறிப்பிட்ட வேளாண் யுக்திகளுக்கும் உள்ள ஒத்திசைவு என்ன? நம் மண்ணிற்கும் தற்கால விவசாய முறைக்கும் ஒத்துப்போகக்கூடிய வேளாண் யுக்தி இதில் எது என்பதையும் சுருங்க. பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

Aaranya Alli . மேலும் விரிவாக பதிவிடுகிறேன் சார். ஆலோசனை க்கு நன்றி.


டிஸ்கி :- ஆரண்யா அல்லியின் முகநூல் பக்கத்திலிருந்தும் இந்தக் கேள்வியையும் பதிலையும் எடுத்துக் கொண்டிருக்கின்றேன். ஏனெனில்  விவசாயம் என்பது நம் மக்களின் உயிர் மூச்சு. அது புரட்சி என்ற பெயரில் உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் உண்டு எப்படி மாறுபாடு அடைந்து மக்கள் நலனைக் குலைக்கும் நஞ்சை உற்பத்தி செய்து வந்தது என்றும், இவற்றால் விளைந்த நோய்கள் பற்றியும் அறிவோம். தற்போது அதிகரித்து வரும் இயற்கை வேளாண்மை பற்றியும் வேளாண் ஒத்திசைவு பற்றியும் இன்னும் இன்னும் அல்லி மேடத்தின் முகநூல் பக்கத்தில் இருந்து அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.  

சேலத்தில் சிலகாலம் இருந்தும் கீர்த்தனாவுக்கு வந்ததில்லை. அடுத்தமுறை வந்தால் கட்டாயம் உங்களைச் சந்திப்பேன் மேடம். ஏன்னா வீட்டுத் தோட்டத்தில் எனக்கும் ஒரு காலத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதைப் புதுப்பித்துக் கொள்ளணும். :) நிரந்தர வேளாண்மை பற்றிய உங்கள் அருமையான விளக்கத்துக்கு மிக்க நன்றி மேம். :) வாழ்க வளமுடன். வாழ்க வையகம். வளரட்டும் உங்கள் வேளாண் தொண்டு.  
 

8 கருத்துகள்:

  1. நாட்டுல என்னவெல்லாம் நடக்குது?! சுவாரஸ்யமாக இருக்கு தேனம்மை மேடம்!

    பதிலளிநீக்கு
  2. சாப்பாடு என்ற பெயரில் சிலபல குப்பைகளைத் தின்றுகொண்டிருக்கிறோம்... இம்மாதிரியான வேளாண் உக்திகள் பாராட்டப்படவேண்டியவை...

    பதிலளிநீக்கு
  3. அருமையான கட்டுரை. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அற்புத பெண் அல்லி அவர்கள். தையல் தொழிலோடு விவசாயத்திலும் ஈடுபடுவது. உற்சாகம் தருகிறது. பகிர்வுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  4. அருமையான சாட்டர்டே ஸ்பெஷல்...இது எல்லோரையும் சென்றடைய வேண்டும். அல்லி எனும் தையல் தையல் தொழில் ஒரு புறம் பெர்மனென்ட் விவசாயம் மறுபுறம் அட போட வைக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  5. ஆமாம். ! நன்றி மோகன் ஜி

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ

    உண்மை ஸ்கூல் பையன்

    நன்றி செந்தில் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)