புதன், 9 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

நிறைய சொல் வழக்குகள் வழக்கொழிந்து போய் விட்டன.. மிச்சமிருக்கும் இவற்றை பதிவு செய்யவே இது..

261. மக்களுக்கு அப்பச்சி - கணவரைக் குறிப்பிடுவது. என் மக்களுக்கு ( பிள்ளைகளுக்கு அப்பா ) அப்பச்சி என்று அடுத்தவரிடம் சொல்லும்போது குறிப்பிடுவது. கணவர் வெளியில் சென்றிருக்கும்போது ஏதும் தாக்கல் சொல்லவேண்டி  யாரும் வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களிடம் ”எம் மக்களுக்கு அப்பச்சி வந்ததும் சொல்றேன் ”என்பார்கள் இல்லத்தரசிகள். ( மனைவி )

262. நாச்சியா மகன் - இதுவும் கணவரைக் குறிப்பிடுவது. நாச்சியா என்று மாமியாரைக் குறிப்பிடுவது. பிள்ளைகள் சேட்டை செய்தால் ”சேட்டை கொறையலையே. வரட்டும் நாச்சியா மகன் “ என்று பிள்ளைகளை அன்பாக மிரட்டுவார்கள். வெளியே சென்றிருக்கும் கணவர் வந்ததும் சொல்லி மாட்டிக் கொடுப்பதாக அர்த்தம். :)

263. சோறு உண்ணு/சோத்தை உண்ணுட்டுப் போ   -  சோற்றை உண்பது. உண்ணுதல் என சாப்பிடுவதைக் குறிக்கிறது. மென்று சாப்பிடுதல் எனவும் சொல்லலாம்.

264. வெஞ்சனம் - காய்கறி. குழம்பில் இருக்கும் காய், பொரியல் , கூட்டு, பிரட்டல், மசாலை மண்டி வறுவல் , துவட்டல் போன்ற சமைத்த காய்கறிகள். இன்னைக்கு என்ன வெஞ்சனம் சமைச்சே என்று விசாரிப்பதுண்டு. இன்னிக்கு என்ன வெஞ்சனம் வைக்க என்று கணவரிடம் கேட்டுக் கேட்டு மனைவியர் சமைப்பதுண்டு. :)

265. லோட்டா - டம்ளர், தண்ணீர் அருந்தும் குவளை.


266. உணக்கை - வாய்க்கு ருசியாக. உணக்கையாக உப்பு உரைப்பு காரம் போட்டுச் சமைத்தல்.” நல்லா ஒணக்கையா வம்பு பேசுவா ”என்று சிலரையும் கிண்டலடிப்பதுண்டு.

267. பூசரம் பூத்தல்  - ஃபங்கஸ் படர்ந்த பொருள்.தயிர், பால், மாவு போன்றவற்றின் மேல் பூசரம் பூத்திருக்கு என்பார்கள். பொதுவாக தானியம், உலர் மாவில் இருந்தால் அது பூசரம் பூத்தல். சுவரிலும் மழை ஈரம் காத்தல் காரணமாகப் பூசரம் பூப்பதுண்டு.

268. ஆம்பப்பூத்தல் - ஆம்பப் பூத்தலும் இதேதான் . ஒரு பொருளின் மேல் ஆடையாக அல்லது கருப்பாக ஃபங்கஸ் , பாக்டீரியா  போன்ற கிருமிகள் படர்ந்து இருப்பதைக் குறிப்பது. குறிப்பாக உணவுப் பொருட்களின் மீது. மாவு ஆம்பப் பூத்திருச்சு எனச் சொல்வது உண்டு. நன்கு காயவைக்காமல் எடுத்து வைத்தால் ஈரம் காத்து ஆம்பல் பூப்பது உண்டு.

269. சிலாத்துவது - சுளகில்/முறத்தில் சலிப்பது. புடைப்பது. தட்டுவது குறித்துச் சொல்வது. உமியைத் தட்டுவதையும் சிலாத்துவது என்று சொல்வதுண்டு. மாவை சலிப்பதையும் சிலாத்துவது என்று கூறுவதுண்டு.
 
270. சாடை பேசுறது.- புரணி பேசுதல். ஒருவர் பக்கம் இருக்குபோதே அவரைப் பற்றிச் சாடையாகப் பேசுதல்/ கேலிசெய்தல்/கிண்டல் செய்தல். நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்லாமல்/சொல்ல தைரியமில்லாமல் சாடையாகத் திட்டுதல்.

271. வாய்க்கிலட்டா - சுத்தமாக எதற்கும் ஆகாத பொருளைக் குறிப்பிடுவது. பொதுவாக உணவுப் பொருள். சில சமயம் மனிதர்களையும் அழகு என்ற அளவு கோலால் அளந்து குறிப்பிடுவது. வாயால எடுப்பது போன்றிருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம் ( பார்த்தாலே வாந்தி வருது என்போமல்லவா ) . அவள/அவனப் பார்த்தாலே வாய்க்கிலட்டா இருக்கு என்றோ. ருசிக் குறைச்சலான குறிப்பிட்ட உணவுப் பொருளையோ,  ஒருவர் சமையலையோ குறைகூற உபயோகப்படும் வார்த்தை. 

272. கடுகடுன்னு - கோபமாக இருத்தல், கோபமாகப் பேசுதல், கோபமாகப் பார்த்தல். மூஞ்சியைக் கடுப்பாக வைத்துக்  கொள்ளுதல்.

273. வலுசாறு - பொல்லாத மனிதரைக் குறிப்பிடுவது. பொதுவாக பெண்கள் அல்லது பெண் குழந்தைகளைத்தான் குறிப்பிடப் பயன்படுவது. அது ரொம்ப வலுசாறு. பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளையும் குறிப்பிடுவார்கள். “ அது ரொம்ப வலுசாறு, நெனைச்சதச் சாதிக்கும் “ என்று.

274.கோணங்கி - கிறுக்குத்தனமாகச் செயல் செய்பவரைக் குறிப்பிடுவது. பொதுவாக ஆணைக் குறிப்பிடுவது. அவன் ஒரு கோணங்கிப் பய என்று.

275. குசும்பு - குறும்பு மிக அதிகமானால் அது குசும்பு எனக் கொள்ளப்படும். வம்பு என்றும் பொருள். வம்படியாகப் பேசுவதையும் குசும்பு என்பார்கள்.

276.தெளியாது - ஒரு விஷயத்தில் மனம் தெளியாமல் இருப்பதைத் தெளியாது என்பார்கள். அடுத்தவருக்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்கு மனம் ஒப்பாதவரையும் தெளியாது என்பார்கள்.

277. பிசினாரி/கசம்/தைக்கசம் - கஞ்சம் பிடித்தவரைக் குறிப்பது. யாருக்கும் எதையும் கொடுக்க மனமில்லாதவர். தனக்கே எதையும் மனசாரச் செய்துகொள்ளாதவரையும் பிசினாரி , கஞ்சப் பிசினாரி எனச் சொல்வதுண்டு. உலோபி என்றும் சொல்லலாம். ”அதுவா தைக் கசம் என்பார்கள். தைக் கசம் என்றால் ”அய அது ஒரு கஞ்சம் ”என்று அர்த்தம்

278.தைக்கருமம் - தைக்கசம் என்பது போலத்தான் தைக் கருமமும். அய்ய கருமம் பிடிச்சது என்பதைக் குறிப்பிடுவது. ஒரு விஷயம் மனதுக்கு ஒப்பவில்லை என்றால் தைக்கருமம் எனச் சொல்வார்கள். பிடிக்காத ஒருவரை “தைக் கருமம் அது ஒரு சர்வ பாடாவதி” எனச் சொல்வதுண்டு.

279. கொணக்கேடு - குணக் கேடு. குணத்தால் திரிந்தவரைச் சொல்வது. ஒரு சமயம் அன்பாகவும் ஒரு சமயம் வம்பாகவும் சண்டைக் கோழியாகவும் நடந்து கொள்பவரைக் குறிப்பது.

280.எண்ணச்சுத்தம் இல்லாதது - நல்ல எண்ணம் இல்லாதவரைக் குறிப்பது. எதையும் யாருக்கும் வழங்க யோசிப்பவரை, - கொடுக்க மனம் இல்லாதவரை - அது ரொம்ப எண்ணச் சுத்தம் இல்லாதது என்பார்கள்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

 

8 கருத்துகள்:

  1. அருமையான தகவல்கள். ஏதோ 30 to 40% சொற்கள் மட்டும் ஏற்கனவே தெரிந்தது. மீதியெல்லாம் இன்று இந்தப்பதிவின் மூலம் புதிதாகத் தெரியவந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமை தேன். பாதிக்கு மேல் ஊரில் புழங்கும்போது கேட்ட
    சொற்கள். மீதிபுதுசு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி. இதை புத்தகமாக எவரேனும் வெளியிட்டால் நல்லது. வாங்கிக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  4. பெரும்பாலான சொற்கள் கொங்கு நாட்டு பேச்சு வழக்கில் உள்ள சொற்கள்

    பதிலளிநீக்கு
  5. ஒரு சில தவிர மற்றவை எல்லாம் உங்கள் பதிவிலிருந்துதான்...பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  6. நன்றி விஜிகே சார்

    நன்றி வல்லிம்மா

    நன்றி பாஸ்கர். முயற்சி செய்கிறேன். புத்தகமாக்கம் செய்ய.

    நன்றி பெயரில்லா. அப்பிடியா ??!!

    நன்றி துளசி சகோ. & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. சில சொற்கள் இன்னும் வழக்கில் உள்ளது.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)