திங்கள், 21 மார்ச், 2016

விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். !


PLANT MORE TREES.! SAVE WILD LIFE. ! - 2016 ( THEME FOR FOREST DAY. )

விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். ! இதுதான் 2016 க்கான வனநாள் கருப்பொருள். 

குஜராத், கேரளா, கோவா, பெங்களூரு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

விந்திய சாத்புரா மலைகள் மற்ற மலைகளிலும் உள்ள வனக்காடுகளை ஓரளவுதான் எடுக்க முடிந்தது ( வேகமான ரயில் பயணத்தின் ஊடே ) ,

வனங்களின் மூலம் ரப்பர், ரேயான், மரம், மூங்கில், பழங்கள், எண்ணெய் வித்துகள், மற்றும் உணவுப் பொருட்களும், மூலிகைப் பொருட்களும் எரிபொருட்களும் கிடைக்கின்றன.  

விலங்குகளுக்கான மேய்ச்சல் நிலமாகவும், வன உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், இயற்கைப் பேரிடர் ஏற்படா வண்ணம் மண் அரிப்பைத் தடுக்கவும் மழைப் பொழிவை அதிகமாக்கவும் உதவும்  விருட்சங்களை நடுவோம். வன வாழ்வியல் காப்போம்.


குஜராத்தில் வெராவலில் இருந்து போர்பந்தர் செல்லும் வழியில்.
பெங்களூருக்கு அருகில் உள்ள ஹோசூருக்கு முன்னால்.
விந்திய சாத்புரா காடுகள்.







கேரளா.


கோவா. 


டிஸ்கி :- வன வாழ்வியலைக் காப்போம். நமது பங்களிப்பாக வனங்களைக் கடக்க  நேரும்போதெல்லாம். ( நகரம் தாண்டிய புறம்போக்கு நிலங்களில் கூட ) நாம் உபயோகப்படுத்திய பழங்களின் விதைகளைச் சேமித்து ( சிறிது சாம்பலில் புரட்டி வைத்தால் போதும் ). அவற்றை அங்கே சென்று தூவிச் சென்றால் இயற்கையாகக் கிடைக்கும் மழை வெய்யில் கொண்டு அவை விருட்சமாக உருவெடுக்கும்.  இப்போதெல்லாம் பிறந்த நாட்களில் மரக் கன்றுகள் கொடுப்பது வழக்கமாகி வருகின்றது. கோயில்களில் ஸ்தல விருட்சங்கள் நடுவதும் சிறந்த பரிகாரமாகி வருகின்றது.

மாத்தூர்க் கோயிலில் நட்சத்திர விருட்சங்கள் என வளர்க்கப்படுகின்றன. எனவே விருட்சங்களை நடுவோம். வனங்களை (யும் நம்மையும் :) காப்போம்.!


9 கருத்துகள்:

  1. வனங்களைக் காப்போம்..... நல்ல விஷயம் இது.

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. படங்களிலும்
    பதிவினிலும்
    பசுமை.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. உலக வனபாதுகாப்பு நாளில் அருமையான பதிவு.
    நானும் பெருஞ்சேரி என்னும் இடத்தில் உள்ள நட்சத்திர கோவில் பற்றி எழுதி இருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள்.


    http://mathysblog.blogspot.com/2014/03/1.html

    பதிலளிநீக்கு
  4. வன நாளுக்கான சிறப்புப் பதிவு
    வெகு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வன நாள் பதிவும் படங்களும் ...அருமை

    பதிலளிநீக்கு
  6. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி விஜிகே சார்

    நன்றி கோமதி மேம். படித்தேன் ரசித்தேன் பின்னூட்டமிட்டிருக்கிறேன் :)

    நன்றி ரமணி சார்

    நன்றி அனு :)

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. வனங்களைக் காப்போம் அருமை அதிலும் நீங்கள் சொல்லியிருக்கும் இந்த ஐடியாதான் ஹைலைட் சகோ/தேனு......மிக மிக ரசித்தோம் வியந்தோம் செம ஐடியால்ல என்று இந்த ஐடியாவை. உங்களுக்குப் பாராட்டுகளும்

    //நாம் உபயோகப்படுத்திய பழங்களின் விதைகளைச் சேமித்து ( சிறிது சாம்பலில் புரட்டி வைத்தால் போதும் ). அவற்றை அங்கே சென்று தூவிச் சென்றால் இயற்கையாகக் கிடைக்கும் மழை வெய்யில் கொண்டு அவை விருட்சமாக உருவெடுக்கும். // எங்கேயோ போய்ட்டீங்கப்பா...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)