புதன், 9 டிசம்பர், 2015

மீன்கொத்தியின் மீள் உரு

பரந்து நெளிந்தோடும்
கண்ணாடி வளையல்களில்
தாழப்பறந்து மீன்கொத்தி
அபூர்வம் உய்யும்வேளை
சேணம் செக்கெதற்கு
மீன்கொத்திகள்
புரவிகளாகுங்கணம் சேணமும்
அசைபோடுங்கணம் செக்கும்
ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
சில
கொக்குகளாகவோ
வலசைப்பறவைகளாகவோ
கடக்குந்தொலைவுகள் விழுங்கி
மரிக்கவும் கூடும்.

மீண்டும் மீண்டும் மீனுன்ன
இறகுகள் உதிர்த்து
பென்குவின்களாகவோ
வால்ரஸுகளாகவோ
மீள் உருவெடுக்கவும் கூடும்.

5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)