திங்கள், 21 செப்டம்பர், 2015

இணைந்து அளவளாவல், கூட்டு வாழ்வு, தோழமை வாழ்வு (டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் )– ஆன்மநேயக் காதலா.

டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் – ஆன்மநேயக் காதலா.

”கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வழி வழி வந்திருக்கு அது வாழ்வும் தந்திருக்கு டேக் இட் ஈஸி” என்று சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் 70 களில் ஆடிய கமலஹாசன் 90 களிலேயோ ”கல்யாணம் கச்சேரி கால்கட்டு எல்லாமே ரயில் ஏறிப் போயாச்சுடி.” என்று அவ்வை ஷண்முகியில் ஆடி இருப்பார். அது உண்மைதான்.

104 வது சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருளாக ஐநா அறிவித்துள்ள – தீம் - ”மகளிரை மேம்படுத்துவது மனிதத்தன்மையை மேம்படுத்துவதாகும் . இதை நினைவில்கொள்ளுங்கள்.” இதுதான்.  Empowering Women, Empowering Humanity: Picture it!


ஒவ்வொரு பெண்ணிடமும் உள்ள தெய்வத் தன்மைக்கு மதிப்புக் கொடுங்கள் என்று பூஜா பேடியும் கூறுகிறார். க்ருஹலெக்ஷ்மி என்கிறோம். ஆனால் பணம் மட்டுமே கொடுக்கும் லெக்ஷ்மியாகக் கருதும் நாம் எல்லா முடிவுகளையும் நம் கட்டுப்பாட்டில் வைத்து அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்கிறார்.  

கல்வி கற்கவே விடாத நாம் காதலிக்கவா விடப்போகிறோம். வெளியுலகமே தெரியாமல் வளர்க்கப்படும்பெண்கள்மட்டுமே உணர்வுபூர்வமாகத் தவறான முடிவெடுப்பதில்லை. பல்வேறு துறையிலும் கொடிகட்டிப் பறக்கும் மகளிர் கூட சரியான வழிகாட்டல் இல்லாமல் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் முடிவெடுக்க முடியாமல் திணறிவிடுகிறார்கள். பல சமயங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் உணர்வு சார்ந்தவையாக அமைந்து அவர்கள் வாழ்வுக்கு உலை வைத்து விடுகிறது.


லக்னோவில் உள்ள அலிகார் முஸ்லீம் யூனிவர்சிட்டி மாணவிகள் துப்பட்டா அணிவதைக் கட்டாயமாக்கி இருந்தது . மேலும் இரு செல்ஃபோன்கள் வைத்திருப்பதையும் தடை செய்திருந்தது. அவுட்டிங் செல்வதையும் வெளியே உணவருந்துவதையும் தடை செய்திருந்தது. ’அப்படி யூனிஃபார்ம் ட்ரெஸ் கோட் இருந்தால் இரு பாலருக்கும் அது கட்டாயமாக்கப்படவேண்டும். ஆனால் ஆனால் இது பெண்களை மட்டுறுத்துவதாக இருக்கிறது’ என்று 1300 ஹாஸ்டல் மாணவிகள் ’கலாசார போலீசார்’ என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதை அடுத்து அந்த ஆர்டரை வாபஸ் வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

இப்படி உடை உடுத்துபவர்கள் கெட்டுப்போவார்கள் அப்படி இல்லாதவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள் என்று பல்கலைக் கழகங்கள் ஒரு கூறப்படாத தீர்ப்பை எழுதி வைத்துள்ளன. இதே போல் சேலத்தில் ஒரு கல்லூரியில் வகுப்புக்கு வகுப்பு சர்வயலன்ஸ் காமிராவால் கண்காணிப்பார்கள். இப்படி மிரட்டி மாணவர்களை மட்டுறுத்த முடியுமா. வெளி உலகையும் வயதையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே பயனளிக்கும்.

தனிமை, கவனிப்பு இன்மை, திடீரென கிடைக்கும் பொருளாதார சுதந்திரம். பள்ளியில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் குடும்பத்தினரின் அதிகப்படியான கட்டுப் பெட்டித்தனம், ஒரு வேளை படிக்கும் வயதிலோ, வேலை செய்யும் வயதிலோ கூட வேலை செய்பவரைக் காதலித்தால் அல்லது மணந்துகொள்ள விரும்பினால் ஜாதி மத இன ரீதியான தடைகளை குடும்பத்தார் மற்றும் சமூகம் உருவாக்குவது, படிப்பு வேலை சம்பந்தமாக அதிக நேரம் ஒன்றிணைந்து இருக்க நேர்வது , பரஸ்பர, ஒத்த சிந்தனை போன்றவைதான் இவர்களை இம்மாதிரி டேட்டிங், லிவிங் டுகெதர் கலாசாரத்துக்குத் தள்ளுகின்றன. 

இப்படி இவர்கள் எடுக்கும் முடிவுகள் சில சமயம் சாதகமாய் முடிந்தாலும் பல சமயம் பாதகமாகி அவர்களையும் குடும்பத்தாரையும் சிக்கலிலும் அவமானத்திலும் ஆழ்த்துகிறது. வெளிநாடுகளில் உள்ள கலாச்சாரம் டேட்டிங். இது ஒரு தமிழ்ப் படத்தில் ரஜனி சொல்வதைப்போல ’வாங்க பழகலாம்’ கலாச்சாரம். சங்ககாலப் பாடல்களில் சொல்வதைப் போல உடன் போக்கு.. ஒத்த வயதை உடைய இருவர் சந்தித்து தங்களைத் தாங்களே புரிந்துகொள்வது தான் டேட்டிங். இது ஆன்மநேயக் காதல் மாதிரியும் ஆகும். ஆனால் வயதுக் கவர்ச்சி காரணமாக இதன் எல்லை மீறப்படும்போது பாலியல் வல்லுறவில் முடிந்து பெண்ணுக்கு வினையாகும்.

திருமணத்துக்கு முந்திய உடலுறவு முறைகேடானது என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. திருமணம் செய்வதாக உறுதி அளித்து அதன் பின் நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவு கற்பழிப்புக்கு ஈடானது என்றும் நன்கு படித்து வேலைக்குச் செல்லும் பெண் தன்னுடைய அலுவலக நண்பர் அல்லது நட்பு பாராட்டிப் பழகிய ஒருவருடன் திருமணம் செய்துகொள்வதாக வழங்கப்படும் உறுதிமொழியை நம்பி உறவு கொள்வது தவறு என்றும் இம்மாதிரியான திருமணத்துக்கு முன்னான உடலுறவை உலக அளவிலும் எந்த மதச் சிந்தாந்தங்களும் ஒப்புக்கொள்வதில்லை என்றும் நீதிபதி வீரேந்தர் பட் தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வாறான உறவில் திருமணம் செய்வதாக உறுதி கொடுத்து உறவு கொள்ளும் ஆண் உறவின் மூலம் பெண் கர்ப்பமடைந்தது தெரிந்ததும் மணம் செய்துகொள்ள வலியுறுத்துகிறாள். ஆனால் ஆணோ அபார்ஷன் செய்யும்படிச் சொல்லித் தப்பித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.


ஆனால் இத்தீர்ப்பு குறித்து அனிதா நாயர் என்னும் எழுத்தாளர் இது மனிதர்களின் தனிப்பட்ட விஷயம். யாரைக் காதலிப்பது. யாருடன் உறவு கொள்வது யாரை மணந்துகொள்வது அல்லது மணந்து கொள்ளாமல் இருப்பது என்பதில் நீதி மன்றம் தலையிடுவது தவறு என்று வாதிடுகிறார்.  பரஸ்பர சம்மதமில்லாமல் பாலியல் சுரண்டல் அல்லது பாலியல் துஷ்ப்ரயோகம் நடக்காதபோது அது தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்க விஷயமாகும்போது அதில் யாரும் கருத்து சொல்ல முடியாது என்கிறார்.

கோர்ட்டோ திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தபின் இருவருக்கிடையே நிகழும் உடலுறவு கற்பழிப்பு ஆகாது என்றும் ஆனால் உறுதி கொடுத்து மணம் செய்துகொள்ள மறுத்தால் அது நிச்சயம் கற்பழிப்புதான் என்றும் கூறி இருக்கிறது.

லிவிங் டுகெதர் கலாச்சாரத்தில் ஒத்த சிந்தனை உடைய இருவர் பரஸ்பரம் தம்மீதுள்ள நம்பிக்கையால் சேர்ந்து வாழ முடிவெடுத்து ஒரே இல்லத்தில் தங்குவதில் ஆரம்பிக்கும் உறவு சில இடங்களில் பல ஆண்டுகள் நீடித்து பெற்றோர் ஏற்படுத்தித் தரும் திருமண பந்தத்தை விட உறுதியாக இருக்கிறது.

பொதுவாக லிவிங் டுகெதர் என்றால் வெளியூர்களில் வெளிநாடுகளில் வசிக்கும் பல கல்லூரிப் பெண்களும் அல்லது வேலை செய்யும் பெண்களும் ஒரே வீடு எடுத்துத் தங்கி வாழ்வதும் உண்டு. இது அவர்களின் தனிமையை மறக்க உதவுகிறது. சில சமயம் ஆண் பெண் நண்பர்கள் இணைந்து பொருளாதார ரீதியாக உள்ள சுமையைச் சமாளிக்கவும் பரஸ்பரம் ஒரே நாடு ஒரே மொழி என்ற ரீதியிலும் நட்பு பாராட்டி ஒரே வீட்டில் தங்குவதுண்டு.

அமெரிக்காவில் கல்விச் செலவு அதிகம் என்பதால் ( ஆண்டுக் கட்டணமே பல லட்ச ரூபாய்கள் ) கல்விக் கடன் வாங்கிப் படிக்கும் மாணவர்கள் டார்ம் ( டார்மிட்டரி) எனப்படும் பல படுக்கைகள் கொண்ட ஒரே வீட்டில்/ஒரே அறையில் வசிப்பார்கள்.

வீட்டை விட்டு வெளியுலகத்தை எதிர்கொள்ளவும், தங்களுக்குக் கிடைக்கும்  ஸ்காலர்ஷிப், வீட்டில் வழங்கப்படும் செலவுத் தொகை, கல்விக்கடன் இதற்குள் படிக்கக் கற்கவும், சேமிக்கவும், சொந்தக் காலில் நிற்பது , மற்றவர்களுடன் பழகுவது, விதம் விதமான மனிதர்களைப் புரிந்து கொள்வது, அவர்களின் பழக்க வழக்கங்கள் ஒப்புமை இல்லாவிட்டாலும் சகிப்புத் தன்மையோடு ஏற்றுக் கொள்ளுதல், தங்களையும் தங்கள் பொருட்களையும் பராமரிப்பது , தங்கள் பட்ஜெட்டுக்குள் செலவழிப்பது,சமையல், சுத்தமாக்குதல், துணி துவைத்தல் , பாத்ரூம் சுத்தப்படுத்துதல்,கடைக்குப் போய் சாமான் வாங்குதல், வங்கிக்குச் சென்று மாதாமாதம் பணம் பெறுதல் போன்றவை பழக்கத்துக்கு வந்து பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவி செய்து சேர்ந்து வாழக் கற்பது, உடம்பு சரியில்லை என்றால் ஒருவரை கவனித்துக் கொள்வது அதே சமயம் போட்டி போட்டு நன்கு படிப்பது ஆகிய நற்பலன்கள் இதன் மூலம் ஏற்படுவதால் பெற்றோர்களே இதை வரவேற்கிறார்கள் .

ஆனால் இந்த டார்ம் பெரும்பாலும் ஒன்று ஆண்கள் அல்லது பெண்கள் மட்டுமே கொண்ட டார்மிட்டரியாக அமையும். இந்தியாவில் பிஜி என்று சொல்லப்படும் பேயிங்க் கெஸ்ட் கலாச்சாரம் போல. பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் மென்பொறியியல் துறையில் பணிபுரியும் அநேகர் வீட்டில் திருமணம் நிச்சயிக்கும் வரை இப்படித்தான் ஷேரிங்கில் வாழ்கிறார்கள். இதைப் போல் பலர் கலந்து வாழும்போதுதான் சில காதலிலும் சில வேதனையிலும் பிரிவிலும் முடிகின்றன.

இந்த லிவிங் டுகெதர் கலாசாரத்தில் ஒரு நல்லெண்ண ஒப்பந்த அடிப்படையில் ஆண் பெண் தம்பதிகளாக இணையும்போது பல்வேறு குழப்பத்தைச் சந்திக்கிறார்கள். சமூக மதிப்பு,குடும்ப அந்தஸ்து ஆகியவற்றோடு எத்தனை நாள் தாம் இவ்வாறு வாழ இயலும் ஒரு குழந்தை என்று ஆகிவிட்டால் கமிட்மெண்ட் ஆகிவிடுமே, மேலும் அது இல்லீகல் சைல்ட் ஆகிவிடுமே, பின் வீடு மனை சொத்து என்று வாங்கினால் யார் பெயரில் எழுதி வைப்பது என்ற பல்வேறு குழப்பங்களும் பிரச்சனைகளும் அடுத்தடுத்து அணிவகுக்கின்றன. இவர்களுக்கு ரேஷன் கார்டும் கிடைப்பதில்லை.

இணைந்து வாழத் துவங்குபோதே சமூக சேவைக்காக அல்லது ஏதேனும் தொண்டுக்காகத் தம்மைப் பரஸ்பரம் அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் சில சமயம் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. ஹாலிவுட் நடிகர் நடிகையர் இவ்வாறான இணைந்து வாழும் நிலையிலோ அல்லது மறுமணம் செய்துகொள்ளுமுன்போ தங்கள் இருவரின் சொத்துக்களைப் பற்றியும் என்ன என்ன செய்யவேண்டும் என்று உயில் எழுதி வைத்து விடுவது உண்டு.

ஆனால் ஒரு முக்கிய விஷயம் நம்மூரில் இம்மாதிரி லிவிங் டுகெதர் உறவுகளை சட்டம் அங்கீகரிப்பது இல்லை. சில மேலை நாடுகளில் இருப்பது போல ப்ரிமேரிட்டல் காண்ட்ராக்ட் போட்டுக் கொள்வதும் முடியாது.  போட்டாலும் செல்லாது. அவரவர்களின் பரஸ்பர நம்பிக்கையிலேயே இவ்வாறான உறவுகள் தொடர்கின்றன.

வாழ்க்கையை எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம். காதலிக்க வயது ஒரு தடையேயில்லை. ஐம்பது வயதாகிவிட்டால் என்ன நீங்கள் தனியாளென்றால் திரும்ப காதலிக்கலாம். என்கிறது வீணா முல்யா அமுல்யா சேவா என்ற சீனியர் சிட்டிசன்களுக்கான திருமண அமைப்பு. திருமணம் ஆகாத, விவாகரத்தான, மனைவி/கணவனை இழந்தவர்களுக்கு தங்கள் மிச்ச வாழ்நாளைக் கழிக்க ஒரு ஆப்த நண்பரைத் தேடிக்கொடுக்குது இந்த அமைப்பு. வருடாவருடம் சீனியர் சிட்டிசன்களும் தங்களுக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஜீவன் சாத்தி சம்மேளன் நடத்தி வருகிறது.


வயதானால் கட்டாயம் துணை தேவைதான். தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள , தங்களைப் போன்றே சிந்திக்கக் கூட தங்கள் வயதை ஒத்த, தங்களுடன் கூட இருக்க. சேர்ந்து வாழ, ஒரு தகுதியான சிறப்பான துணை தேவை என்று நினைப்பவர்களுக்கு இதன் மூலம் வாழ்வை மறுசீரமைப்பு செய்கிறோம் என்கிறார் இதன் அமைப்பாளர்களில் ஒருவரான படேல். புர்ஜ் பூகம்பத்தில் இவ்வாறு துணை இழந்து தவித்தவர்களைப் பார்த்து அவர்களின் கையறு நிலை பொறுக்க முடியாமல் இவ்வமைப்பை ஏற்படுத்தியதாக சொல்கிறார். 

2011 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பில் 40 பேர் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் 12 பேர் சேர்ந்து வாழ்வதாகவும் கூறும் அவர் திருமணமானவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் விவாகரத்து ஆன சர்டிஃபிகேட்டோ அல்லது மனவி/கணவன் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழோ கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண் மணந்து கொள்ள முடிவெடுக்கும் பெண்ணின் பின்னாளைய பாதுகாப்புக்காக அவர் பெயரில் ஒரு வங்கிக்கணக்கு கட்டாயம் துவங்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஒரு அதிசயமான விஷயம் என்னவென்றால் இது போன்ற மேட்ரிமோனிக்கு சுதா என்ற டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகளும் மருமகளுமே சிறுவயதில் வாழ்வை இழந்த அவர் தகுந்த துணையைப் பெற்றுத் தன் வாழ்க்கையைத் திரும்ப வாழவேண்டும் என்று அவருக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள்.

பொதுவாக அநேக இம்மாதிரியான டேட்டிங், லிவிங் டுகெதர் போன்ற உறவுகளில் தனிமை, தன்னைக் கவனிக்க யாருமில்லை என்ற ஏக்கம், தனக்கென ஒருவர் வேண்டும் ஆனால் கமிட்மெண்ட் செய்து கொள்ள, ரிஸ்க் எடுக்க பயம், யார் வாழ்விலோ நடந்த வேண்டாத கெடுதல்கள் ஏற்படுத்திய பயங்கள் ஆகியன பெரும்பாலும் இடம்பிடிக்கின்றன. கம்பானியன் வேண்டும் என்பவர்களுக்கு முதுமையில் ஒற்றையாளாய்ப் போன தனிமையும் வயதான உடல் நிலையும் யாருமில்லை என்ற ஏக்கமும் வாட்ட அதைத் தீர்க்க சோல்மேட் தேவைப்படுகிறார்கள். அதனாலேயே பழகிப் பார்க்கலாம் என்ற டேட்டிங், லிவிங் டுகெதர் கலாசாரமும் கம்பானியன்ஷிப்பும் இந்திய தமிழகக் கலாச்சாரத்துள்ளும் ஊடுருவி வருகிறது.


குழந்தைகளின், வயது வந்தவர்களின், முதியவர்களின் தேவைகள் சரியாக வழங்கப்பட்டாலும் அவர்களுக்கு ஏற்படும் தனிமை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. கூடவே இருப்பது கவனித்துக் கொள்வது தேவைகளை நிறைவேற்றுவது என்று மிக அவசியமான தருணங்களில் நாம் அந்தத் தனிமையைத் தீர்க்கலாம். வயதுவந்த குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற ஆன்மநேயத்துணை கிடைப்பின் முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களிடம் விட்டு விட்டு அவர்கள் தங்களுக்கு ஏற்றவர்களுடன் இணைய விரும்பினால் வாழ்த்தி வரவேற்கலாம். 


--- (1) இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே என்று உறுதிமொழி அளிக்கிறேன். 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் அளிக்கிறேன். .

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் எனது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்புகிறேன். 


4. நிறைவுத் தேதி. 30 - 9. 2015. (வகை-(3) பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி)

5.“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை. 
.

19 கருத்துகள்:

  1. மிக விவரமான கட்டுரை தேன். பல ஆக்க பூர்வமான கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.
    தீர்க்கமான ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறது உங்கள் மொழி. பெண்கள் சக்தி
    ஓங்கட்டும்..

    பதிலளிநீக்கு
  2. பிரச்சினையை நன்கு அலசியுள்ளீர்கள். இந்தப் பிரச்சினைகளை எதிர் கொள்ள இளைஞர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விழிப்புணர்வு கட்டுரைசகோதரியாரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. எங்க இன்னும் உங்க பெயர் வரவில்லையே என நினைத்திருந்தேன். கட்டுரையாக வந்திருப்பது சந்தோசம். விரிவான அலசல் கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துகள் ஆச்சி....

    பதிலளிநீக்கு
  6. மிகச்சிறப்பாக வந்திருக்கிறது! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அட!!! என்ன்ன டீடைல்ஸ் !!! என்ன விவரிப்பு!!! செம!!!
    வெற்றிபெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள் சகோ!!

    பதிலளிநீக்கு
  8. நன்றி வல்லிம்மா :)

    நன்றி கந்தசாமி சார். இந்தக் கட்டுரை ஓரிரு இடங்கள் தவிர்த்து இருபாலாருக்கும் பொருந்தும்.

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி கோபி சகோ :)

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி மைதிலி.. :)

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. விரிவான தகவல்கள் அக்கா..வெற்றிபெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. அன்புச் சகோதரிக்கு வணக்கம். கட்டுரை நன்றாக உள்ளது. உள்ளடக்கம் பற்றிக் கருத்துக்கூறுவது படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். அந்தத் தவற்றினை நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால், கட்டுரைத் தலைப்பே முழுக்க முழுக்க ஆங்கிலச் சொற்களாக இருப்பதைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாமா சகோதரி? இது எங்கள் தனிப்பட்ட கருத்துத்தான். நடுவர்களின் கருத்தல்ல.. மற்றபடி தங்கள் கட்டுரை பற்றிய தங்கள் முடிவே இறுதியானது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். நன்றி

    பதிலளிநீக்கு
  12. நாட்டின் இன்றைய சூழலையும் பெண்களின் நிலையையும் மிக அழகாகப் பிரதிபலிக்கும் ஆழ்ந்த அலசலுடனான கட்டுரை. பாராட்டுகள் தேனம்மை. வெற்றி பெற இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல கட்டுரை வாழ்த்துகள்மா.

    பதிலளிநீக்கு
  14. புரையோடிக் கிடக்கும் புண்மையினை அறுவை சிகிக்சை செய்யும் ஆழ்ந்த கட்டுரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. செம கலக்கல் தேனக்கா ! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  16. அருமையான கட்டுரை வெற்றி உனதே --- சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  17. மரியாதைக்குரியவரே,
    வணக்கம். தங்களது படைப்பில் , ''கல்வி கற்கவே விடாத நாம் காதலிக்கவா விடப்போகிறோம்''. என்று எழுதி என்னைப்போன்றோருக்கு சூடு வைக்கிறீரே!. காதல் என்பது தற்போதைய சூழலில் நம்பகத்தகுந்தவையாக இல்லை என்பதே எனது வாதம்.ஆண் என்ன?பெண் என்ன? என்று இல்லறம் புகுந்து பிறந்த குழந்தையோ பெண் என்றபிறகு அவளை போற்றி வளர்த்து இன்னோரு வாரிசு ஈன்றால் முதலவளுக்கு பாதிப்பு என்று கருதி ஒன்றே போதும்!,உயர்வாக வாழ வைப்போம் என உறுதிப்பாட்டோடு வாழ்கின்றோம். இருப்பினும் தங்களது கட்டுரைக்கு வாழ்த்துக்கள் என வாழ்த்தும் அன்பன்,
    C. பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம் -638402

    பதிலளிநீக்கு
  18. நன்றி தேன்மதுரத்தமிழ் க்ரேஸ் :)

    நன்றி வலைப்பதிவர் குழுமம். மாற்றிவிட்டேன் :)

    நன்றி கீதமஞ்சரி

    நன்றி கீதா

    நன்றி பாவலர் சகோ

    நன்றி ஏஞ்சல்

    நன்றி சரஸ் மேம்

    நன்றி பரமேஸ் சார். தாங்கள் கூறியுள்ளது யதார்த்தம். அருமை

    மிக்க நன்றி வலைப்பதிவர் சந்திப்பு ( புதுக்கோட்டை ) குழுமம். :)


    பதிலளிநீக்கு
  19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)