சனி, 1 ஆகஸ்ட், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர் . ஜக்கும்மாவின் ரின் நினைவுகள்.

ஜக்குமா. சகு மேம் என் முகநூல் தோழி. ஒருவரை ஏன் பிடிக்கும் எதுக்குப் பிடிக்கும்னு தெரியாது. ஆனா பார்த்தோடனேயே பிடிக்கும். அவங்கள்ல ஒருத்தர் ஜக்குமா. மிக மிக அன்பானங்க. அதிர்ந்து ஒரு சொல் சொல்லி எழுதி அறியாதவங்க. தன்மையானவங்க. பேசும் , எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும் நூறு முறை யோசித்தபின் எழுதுறவங்க. தன்னையறியாமல் கூட அடுத்தவங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையா இருப்பாங்க. எனக்கு அவரோட பதிவுகள் பிடிக்கும்.அவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காக தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கும்படி கேட்டிருந்தேன். அதுக்கு அவரின் பதில் இங்கே. :)


சகு மேம் எங்களோடு நீங்கள் சொல்ல நினைத்து இதுவரை சொல்லாத நிகழ்வுகள் சிலவற்றைப் பகிர்ந்துக்க வேண்டுகிறேன். 

 முயற்சிக்கறேன்! தேன்! உங்களைப் போலெல்லாம் பத்திரிகை க்காக எல்லாம் நான் எழுதிய அனுபவம் கிடையாதுப்பா! உங்க மதிப்பில் நான் இருப்பது உங்களுக்கே உள்ள அன்பான குணம்! நேரம் கொஞ்சம் சாதகமாக சில நேரங்களில் அமைய மெனக்கிட வேண்டியதாய் போய்விடுகிறது!

////அது ஏங்க நாம யாருக்காவது ஃபோனைப் போட்டு, நலம் விசாரிக்கும் போது, ஒரு குற்ற உணர்ச்சியோடு ''அத ஏன் கேக்கறிங்க, பண்ணணும் பண்ணனும்னு தான் நினப்பு, ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ டென்ஷனாவே போய்கிட்டிருக்கு'' ங்கறாங்க!

இவங்க சொல்றதப் பார்த்தா, அட! நமக்கு எந்தப் ப்ரச்சனையுமே இல்லாமல், வாழ்க்கை ஓடிக் கிட்டு இருக்கு போலன்னு , என்னை நானே மெச்சிக்கிட்டேன்! இருக்கறத அனுபவிக்கறத விட, ஒண்ணுமே இல்லாத மாதிரி நடந்துக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவங்களுக்கு எங்க தெரியப் போவுது?///


/////'அம்மா தோசை ஏம்மா, கொஞ்சம் ஓரத்துல கோணலாப் போச்சு?''

''ஏய்!எதாவது சொல்லிட்டு, நேரமாகலை? ' இரும்மா! '', அப்பா, அழகா ஊத்தித் தரேன்!, உங்கம்மா எதுக்கும் லாயக்கு இல்ல!''

அப்பா.......!.... என்னா.....திது! மாவு.... மாவா,.... இனிமே அம்மாவே, ஊத்தட்டும்! ...நான் சமத்தா சாப்பிட்டுடுவேன்!////

////தூக்கம் வரதே இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், பல சமயங்களில் அது வந்தாலும், எல்லாராலும் உடனே படுத்து விட முடிவதில்லை! வேலை நிமித்தம், பொழுது போக்கு நிமித்தம், வெட்டி அரட்டைக்காக, விருந்தாளிகளை சந்தோஷப் படுத்த, பாசத்துக்குரியவர்கள், படுக்காமல் பணி செய்யும் போது நாம தூங்கறதா? இப்படியாக, எதோ சாக்கு போக்கு சொல்லி நம் தூக்கத்தை நாமே விரட்டுகிறோமோன்னு எனக்கு ஒரு டவுட்?
பல தேவையற்ற கசப்பான, வெறுப்பான விஷயங்களை ரீவைண்ட் பணறதுல வேற வர தூக்கம் அம்பேல்! சரி தானே நாஞ்சொல்றது?////

/////உடல் உழைப்பு ஆரோக்கியமானது. கட்டாயமாய் ஓய்வு தேவை என்ற நிலை இருந்தால் மட்டும் வேலைகளைக் குறைத்துக் கொள்ளலாம். வேலை செய்வதை கௌரவப்ரச்சனையாக நினைக்காமல் வேலை செய்யலாம், தப்பில்லை. வயதானவர்கள் வயதாகிவிட்டது, நாம் ஏன் செய்யணும்னு நினைக்காமல் முடிந்த வேலைகளைச் செய்யலாம். இதனால் நல்ல உடல் பயிற்சி கிடைப்பதால் ஆரோக்கியமும் ஆயுளும் கூடும்./////



/////ரின் நினைவுகள்!

அச்சுப் பிழை இல்லை! மலரின் நினைவுகள் தான்! நான் இந்த ஜக்குமா வூட்டுக்கு வராது முன்பே எனக்காக ஏங்கனவங்க அவங்க! பார்த்தாங்க, அவ்வளவு தான்! எங்கம்மாவை நட்டு, அன்பையே உரமாக இட்டு,அக்கறையாக உயிர்த் தண்ணீர் ஊற்றி நான் எப்ப, எட்டிப் பார்ப்பேன்னு காத்திருந்தாங்க!

மொக்கு விட்டதும் ஆனந்தமோ ஆனந்தம்1 சூரியன் எப்படா உதயமாவான்னு, ஓடோடி வந்துட்டாங்களே! நான் மெதுவா கண்ணை திறந்து, இந்த உலகத்தைப் பார்க்கிறப்போ எனக்கு எதிரில் இன்னொரு அழகான பூ பூத்திருக்கு! அட! ஜக்குமா சிரிப் பூ! அன்னிக்கு கண்ணுலயே படம் பிடிச்சு, இதயத்துக்குள்ள வச்சவங்க தான்! என் ஆயுசு,முடியல! அவங்களைப் பொருத்தவரை! இதயத்துல பொத்திகிட்டாங்க என்னை!/////
 
டிஸ்கி :- அசத்திட்டீங்க ஜக்குமா. சகு மேம். :) 

ஆமா நாம ஃபோன் பண்ணாத்தான் அவங்களுக்கு நம்ம ஞாபகமே வரும். :)

தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை.. ஹாஹா சரிதான். :)

தூக்கம் பத்தி சரியா சொன்னீங்க. , துக்கப்படாம இருந்தா நிம்மதியா தூங்கலாம்னு :) 

வயதானவர்களின் ப்ரச்சனையையும் அழகா சொல்லிட்டீங்க. மேலே நாஞ்சொல்ல எதுவுமே இல்லை :) 

ரின் நினைவுகள் அசத்தலோ அசத்தல் போங்க. அஹா அஹா உங்க சிரிப்பூவைப் பார்த்து சிலிர்த்த பூவும் எங்கள் கண்ணில். அருமையா எழுதி இருக்கீங்க மேம். எங்க சாட்டர்டே போஸ்டை உங்க ரின் நினைவுகளால் சிறப்பித்தமைக்கு நன்றி :)


10 கருத்துகள்:

  1. அருமையான சுவாரஸ்யமான
    அதே சமயம் அழுத்தமான நிறைவான
    அறிமுகமும் கூட
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இருவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. .// தன்மையானவங்க. பேசும் , எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும் நூறு முறை யோசித்தபின் எழுதுறவங்க. தன்னையறியாமல் கூட அடுத்தவங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையா இருப்பாங்க. //

    அருமை

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி ரமணி சகோ

    நன்றி ஜலீலா

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி குமார் தம்பி :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான அறிமுகம். அம்மாவைப் பற்றி அறிந்த்தில் மகிழ்ச்சி! வாழ்த்துகள் ! இருவருக்கும்!!

    கீதா பயணத்தில் இருப்பதால் வலைப்பக்கம் வ்ர இயலவில்லை...சகோதரி...6 ஆம் தேதியிலிருந்து வலைப்பக்கம் வந்துவிடுவோம்...எங்கள் வலைப் பதிவுகள் ஏற்கனவே செட் செய்திருப்பதால் வந்துவிடும்.. நன்றி...

    பதிலளிநீக்கு
  7. அஹா வெல்கம் வெல்கம் கீத்ஸ் & துளசி சகோ :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)