வெள்ளி, 31 ஜூலை, 2015

அவங்கதான் இவங்களா..

81 - 84 வரையிலான குமுதம் விகடன் அட்டைப்படங்கள். என்னுடைய சேமிப்பில் இருந்து கண்டெடுத்தேன். அட அட அட கொள்ளை அழகுக் குழந்தைகள். ஆமா இப்ப எல்லாம் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து அட்டைப்படம் போட்டா யாரும் பார்க்கிறதில்லையா. இல்லாட்டி  பெத்தவங்க ஒப்புக்கிறதில்லையா. என்னவோ போங்க.. இவங்க எல்லாம் இப்ப வளர்ந்துருப்பாங்க.,

ஒரு வேளை அவங்கதான் இவங்களா :) :) :)


அப்பக் கூட குமுதம் குறும்பைப் பாருங்க. :)
ஏதோ சினிமா ஸ்டில்

இப்ப இந்த அழகுப் பாப்பு எங்க இருக்காங்களோ..

யப்பா விளையாடி விளையாடி கொட்டாவியா வருது. :)
சிங். சாங். க்வாங்.சுகாங். :)
இது மட்டும் நல்லா தெரியும். புரந்தரதாசர். :)
விலை குமுதம் 80 பைசா - 90 பைசாதான்.

விகடன் ஒரு ரூபாய்,  1.50/- தான். :)

பக்தி மணக்கும் அட்டைப்படங்கள், வெளிநாட்டுக் குழந்தைகள், உள்நாட்டுக் குழந்தைகளை அட்டைப்படத்துல போட்டா இப்பவும் நாங்க புக் வாங்குவோம்னு சொல்லத்தான் நினைக்கிறேன். :)


9 கருத்துகள்:

  1. அழகான படங்கள்... அன்றைய அழகிய ரசனை... இன்று - என்னத்த சொல்ல... ம்...

    பதிலளிநீக்கு
  2. 80-81குமுதம் என்கிட்டேயும் இருக்கு ஆனாலும் ஒரு சந்தேகம் எப்படி புதுசாவே இருக்கு அட்டை படங்கள் தேன்கிட்ட மட்டும்னு-----சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  3. அந்த கால குமுதமும் ஆனந்த விகடனும் இப்போது இல்லை! அதான் நான் வாங்குவதும் இல்லை!

    பதிலளிநீக்கு
  4. இப்போது எங்கும் சினிமா நட்சத்திரங்கள்.... :(

    பதிலளிநீக்கு
  5. இப்பல்லாம் ஒரு பக்கம் மட்டும்தான் அட்டைப்படம்...
    மறுபக்கம்... விளம்பரம்...

    பதிலளிநீக்கு
  6. நன்றி டிடி சகோ

    நன்றி சரஸ் மேம். இது ஃபைல்ல இருந்துச்சு. :)

    ஆம் சுரேஷ் சகோ

    ஹ்ம்ம் ஆம் வெங்கட் சகோ

    ஆம் நிஜாம் சகோ

    நன்றி பாலன் :)

    பதிலளிநீக்கு
  7. எவ்வளவு ரசனை மிக்க அட்டைப்படங்கள்! இப்போதெல்லாம் இது போன்று வருவதில்லை. தரமும் குறைந்துவிட்டது போல் உள்ளது...

    பதிலளிநீக்கு

  8. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)