திங்கள், 22 ஜூன், 2015

ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்

281. சுகத்துல வாழ்த்தவும் சோகத்துல பங்கெடுத்துக்கவும் நமக்குன்னு மக்கள் இருக்காங்கன்னு முகநூல்ல பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு மக்காஸ் வாழ்க வளமுடன். :)

282. ஒரே ஒரு தரம் 250 லைக் எல்லாம் வந்ததும் see more,see more nu  க்ளிக் பண்ணிப் பார்க்க முடியலையே. 1000, 2000 லைக்ஸ் வாங்குறவங்க எல்லாம் பொறுமைசாலிதான். :)

283. ட்விட்டர்ல இன்னிக்கு 45 நோட்டிஃபிகேஷன் ஓ மை கடவுளே.. நன்றி மக்காஸ். நம்மள யாருமே படிக்கிறதில்லையோன்னு நினைச்சு சோகமா இருந்தேன். :)

284. எழுத்தாளரே இப்பவெல்லாம் நாளானா மதம் பத்திதான் எழுதுறாங்க. துறவிகள் என்ற நினைப்பில். :)

285. அச்சோ ஃபேஸ்புக் மாதிரி ட்விட்டரும் என்ன விடாது போலிருக்கே. சுவாரசியமான ட்வீட்ஸ். சீக்கிரம் லாகவுட் பண்ணனும்.. :) # விடாது கருப்பு. :)


286. வாக்காளர் அடையாள அட்டையில் புது ஃபோட்டோ இணைக்க வசதி

# எப்பிடி இணைச்சா என்ன ஏதோ கோஸ்ட் மாதிரிதான் ப்ரிண்ட் ஆகும். :)

287. ஆர்டி ந்னா ரி ட்வீட் போல . ஏதோ ஆர்டி எக்ஸ் அளவுக்கு அதப் பார்த்து பயந்திருந்தேன். அர்ஜெண்டா ஒரு வெப் டிக்‌ஷ்னரி போட்டு வைச்சுக்கணும் :)

288. காலங்கார்த்தால ஒரு அக்கவுண்டை ப்ளாக் பண்ணவேண்டியதா போச்சு.ட்விட்டர்லயுமா இப்பிடி மோசமான படங்கள்.

ஏண்டா ஏன்... மொக்க போஸ்ட்போடுற என்ன  ஏண்டா ஃபாலோ பண்ற..

289. நண்பராகும் வரைக்கும் லைக்கோ லைக் மழைபொழிகிறார்கள். நண்பராய் ஆனதும் காணாமல் போய்விடுகிறார்கள். ஹாஹா இதுதான் பேஸ்புக் உலகமடா. :)

‪#‎ஃப்ரெண்ட்ஷிப்_புக்‬

290.ஹார்லிக்ஸ் பூஸ்ட் ல ஏதோ கெடுதல்னு யாரோ ஷேர் பண்ணி இருந்தாங்க ஃபேஸ்புக்குல. சோ தேடினா ஹார்லிக்ஸ் பூஸ்ட் நு பேர் வைச்சிட்டு பல ஐடி இருக்குப்பா ஹாஹாஹா.

291. ஒரு புக்குக்கு கோலம் போடுறதுக்காக கருப்பர் நு இமேஜ் தேடினேன். இமேஜஸ்ல கருப்பர் சிலை வடிவில் கடைசியாதான் வந்தார் ஆனா
,
*
,மார்டின் லூதர் கிங், மண்டேலா , ஒபாமா, வில் ஸ்மித், எட்டி மர்ஃபி  எல்லாரும் முன்னாடி வந்தாங்க. ஒரு நிமிஷம் மிரண்டு அடுத்த நிமிடம் சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.

நம்ம மனசுல இருக்கத கண்டுபிடிக்கிற அளவுக்கு கூகுள் இன்னும் வளரலப்பா.. :)1. 

292. 
--பாஸ்வேர்டு ஞாபகம் வச்சிக்க கஷ்டமா இருக்கு
 
---உன் பேர்ல பாதிய போட்டு ஏதாவது நம்பர்ஸ் வச்சுக்க
----டிவிட்டர், ஃபேஸ்புக், ஜிமெயில் எல்லாத்துலயும் என்ன நம்பர் போட்டோம்னு மறந்திருது.
--ரொம்ப ஈஸியா ஒண்ணு சொல்றேன். twitter.com, facebook.com, gmail.com அப்பிடின்னு பாஸ்வேர்டு வச்சுக்க லாகின் பண்ணும்போது மறக்காது.
----அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

293 . வங்கியில்.
**என்னது க்யூலேருந்து ரொம்ப வேகமா வெளியே போறாரு பாஸ்புக்கை காணமா..
**இல்லீங்க ஃபேஸ்புக்கை காணோமாம். உள்ளே நெட் வரலையாம்.!

294 . **டிஜிட்டல் லாக்கர் அறிமுகப்படுத்தி இருக்கோமே. என்ன கொரீஸ் எல்லாம் வந்திருக்கு. 
**டிஜிட்டல் லாக்கர்னா பாஸ்வேர்ட் எல்லாம் சேமிச்சு வைக்கலாமான்னு ஒரு க்ளையண்ட் கேட்டுருக்காரு.!. 

295. உன்னதமான உத்யோகம், கலாசார சீர்கேடு, வயசு வித்யாசம் எல்லாம் சொல்ல வரல. ஆனா நியாயம் எதுன்னு தெரியாதவங்க எல்லாம் ஆசிரியரா பாடம் கற்பிச்சா அடுத்த தலைமுறை என்ன ஆகும்.

296. எல்லார் வீட்டு பூஜையறையும் இன்று ஃபேஸ்புக்குக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. ஏகப்பட்ட சாமியைக் கும்பிட்டாச்சு. எல்லாரும் கூரியர்ல ப்ரசாதத்தை அனுப்பிடுங்க மறக்காம. :)

297. தூக்கம் வராட்டி எட்டிப் பார்த்து போஸ்ட் போட ஃபேஸ்புக் இருக்கு. இதுக்கெல்லாம் தனித்தனியா காசு வச்சீங்கன்னா ஃபீஸ் போன பல்ப் ஆகிடுவோம்.ஸ்டாண்டர்டா ஸ்கைப், வாட்ஸப் ஃபேஸ்புக், ஜிமெயில் எல்லாத்துக்கும் பழையபடியே மெயிண்டெயின் பண்ணினா என்ன. ?

ஃபேஸ்புக், ஜி மெயில் ப்லாக் மட்டும் உபயோக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் ஏன் தனித்தனி கட்டணம் போடுறீங்க.

நெனைச்சோடனே எழுதி போஸ்ட் பண்ண ப்லாக் இருக்கு. எந்த பப்ளிஷரும் வேண்டாம். புக்கும் வேண்டாம்.

ப்லாகுக்கும் காசு கொடுத்துப் பார்க்கணும்னா...

அச்சோ என்ன கொடுமை சரவணா இது.. படிக்க வர்ற கூட்டத்தையும் விரட்டிடுவீங்க போலிருக்கே.

தயவுசெய்து இணைய கட்டணத்தை ஒரே மாதிரியா மெயிண்டெயின் பண்ணுங்க.

‪#‎நெட்_நியூட்ராலிட்டி_இன்சோம்னியா‬.

298. சின்னக் குழந்தையாயிருந்தபோது என்னைத் தூக்கி வைத்திருந்த அம்சு அக்காவை காரைக்குடியில் ஒரு நாள் சந்தித்தேன். தேனுக்கண்ணு என்று கூறி கட்டிப்பிடித்துக் கொஞ்சி முத்தமிட்டார்கள். அந்த இனிப்போடு ஒரு புகைப்படம் எடுத்தேன். இப்போது பஜ்ஜிக்கடை நடத்தி வரும் தம்பிக்கு உதவியாக இருக்கிறார்கள். சிகப்பி அக்கா, அம்சு அக்கா, பாக்கியம் அக்கா ராமாயி அக்கா, கனகு அக்கா இவர்களெல்லாம் எங்கிருந்தோ வந்த கண்ணன் போன்றவர்கள். இந்த அன்பைப் பெற என்ன தவம் செய்துவிட்டோம்..

299. சுய வெறுப்பைக் கடப்பதெப்படி.

300. மட்டுப்படுத்தப்பட்ட எண்ணங்கள் குறிக்கோளை எட்டவிடுவதில்லை. எண்ணங்களாகவே நின்று போகின்றன.

அதிலும் வெகு மூளியாக உருவாக்க முயன்ற நாமே கண்டு வெட்கப்படுமளவு.

அதன் நிர்வாணம் வெருட்டுகிறது.

அழிக்கவும் இயலாமல் ஆக்கவும் இயலாமல் குறைப்பிரசவங்கள் எதற்கு.

நானும் ஒரு படைப்பாளி என்று எள்ளி நகையாடிக்கொள்ளவா.

போன்ஸாய்களாக வளர்க்கப்பட்டு விட்டோம். வேலியாய் அமுக்கும் வீட்டையும் அசையவொட்டாமல் பிடித்திருக்கும் பாத்திரத்தையும் விட்டு  வேறெங்கும் நகர முடியுமா என்ன..

டிஸ்கி :- நேற்றைய ஸ்பெஷலுக்காக இன்று .. :)

தந்தையர் தினக் கவிதை. :)
http://honeylaksh.blogspot.in/2010/06/blog-post_20.html

யோகாவும் தியானமும். for Yoga day !!! :)
http://honeylaksh.blogspot.in/2013/09/blog-post_2.html

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


4 கருத்துகள்:

  1. பேஸ்புக் உலகத்தை அறிந்தேன் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கின்றன...

    போன்ஸாய்களாக வளர்க்கப்பட்டு விட்டோம். வேலியாய் அமுக்கும் வீட்டையும் அசையவொட்டாமல் பிடித்திருக்கும் பாத்திரத்தையும் விட்டு வேறெங்கும் நகர முடியுமா என்ன..// அருமை....

    பதிலளிநீக்கு
  3. நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)