ஞாயிறு, 21 ஜூன், 2015

உள்ளுணர்வின் மொழிபெயர்ப்பு.



30.3.86.

2. உள்ளுணர்வின்
மொழிபெயர்ப்பு.
*மதிய வெய்யிலின்
அக்கினிப் பொறியாய்
பாலையின்
பாறை வெடிப்பாய்
செடியின்
நாவறண்ட சித்திரையாய்

*பூத்தலும் கிளைத்தலுமில்லாத
சாலையோர மரம்.
கொம்புகளுடன்
கௌரவமாய் அடிமரம்

*கிணற்றடியின் ஓரத்
துவைக்கும் கல்.
தினமும் தோலுரிய
அறைபடும்.

*வியர்வையும் எண்ணெயும் ரத்தமும்.
மனிதாபிமானமில்லாத மானுடம்
பட்டறையில் இழுபடும்.

இருப்பின் மேல் இரும்புச் சுத்தியல்
பொறி அடங்கும்.

6 கருத்துகள்:

  1. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ..... 30.03.1986 லேயே .... சபாஷ் !

    ’உள்ளுணர்வின் மொழிபெயர்ப்பு’ அருமை.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துக் கவிதைகளும் அருமை.
    துவைக்கும் கல்.....மிகவும் ரசித்தேன் சகோ.
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. உணர முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. 86லேயே இப்படி அழகாய் படைத்திட்டீர்களா! க்ரேட் சகோதரி! அருமை!

    பதிலளிநீக்கு
  5. நன்றி டிடி சகோ

    நன்றி விஜிகே சார்,

    நன்றி உமையாள் சகோ

    நன்றி ரமணி சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)