வெளியெறியும் மின் போக்கிவழி
கரேலென்று உள்நுழைந்து
தொலைக்காட்சி அட்டைமேல்
சுருண்டு துயிலும் அது.
தடைபட்ட மின்சாரம் வேர்வையூற்ற
சமையலறை இருளில்
தாகமடக்க நீர்விழுங்கி
மல்லாந்திருக்கும் போது
படபடவெனப் பதட்டமூட்டும்.
என்னசைவு கண்டு வெருண்டு
உருண்டு புரண்டு அட்டை சரசரக்க
மின் இறகசைத்து நுழைந்து
வெளிப்பறக்கும் கருமூட்டையாய் அது.
வரவு தடுக்க வெண்குழல் எரித்தும்
வந்த மின்சாரம் பிடித்து விசிறியசைத்தும்
விழித்து விழித்து நான் காணும் சொப்பனத்தில்
எத்தனையோ கடவு தாண்டியும்
பதுங்கிப் பதுங்கி இருக்குமந்த
கறுப்புப் பூனை.டிஸ்கி :- இந்தக் கவிதை மார்ச் 16 - 31 , 2015 சொல்வனம் மின்னிதழில் வெளியானது.
பூவையின் எண்ணங்களுக்கு வந்து கருத்துப் பதிவு செய்ததற்கு நன்றி gmb writes வலைப்பதிவுக்கு வருகை தாருங்களேன் வலைப் பதிவர் நட்பு வளர எழுதி உள்ளீர்கள் . என் எண்ணங்கள் பதிவாக விரைவில்.
பதிலளிநீக்குகனவில் கண்ட கறுப்புப் பூனையினை வர்ணித்து எழுதியுள்ளது மிகவும் அருமை!
பதிலளிநீக்குசொல்வனம் மின் இதழில் வெளியானது பெருமை!! பாராட்டுகள்.
எழுத்துலகில் தங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்ட வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
சொப்பனப்பூனை வாசிக்கும்போதே பதற்றம் உண்டாக்குகிறது. அருமை தேனம்மை.
பதிலளிநீக்குகனவில் தூங்கும் பூனை. வெய்யிலில் வரும் மயக்கப் பூனையா. வெகு அருமை தேன்
பதிலளிநீக்குபூனைச் சொப்பனம் நன்றாகவே பலித்து விட்டது! சகோ!
பதிலளிநீக்குஇது மியாவ்! மியாவ் பூனை மட்டுமல்ல!
பார்த்தவர் மனதை விட்டு நீங்காத அழகு பூனை
சொப்பன வாழ்வில் மகிழும் மகத்தான பூனை!
அருமை!
நட்புடன்,
புதுவை வேலு
திகில் பூனை!
பதிலளிநீக்குமின்னும் இரட்டை வைரங்கள்.....
பதிலளிநீக்குநல்ல கற்பனை. பாராட்டுகள்.
பதிவு அருமை ஜி எம் பி சார்
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
நன்றி கீதா
ஆமா வல்லிம்மா
நன்றி யாதவன் நம்பி சகோ
ஆம் ஸ்ரீராம் :)
நன்றி தனபாலன் சகோ
நன்றி வெங்கட் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!