திங்கள், 15 டிசம்பர், 2014

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

எனது பெருமதிப்பிற்குரிய சுசீலாம்மாவின் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அழைப்பிதழை வெளியிடுவதில் மகிழ்கிறேன். மேலும் விருதுபெற்ற திரு ஞானக்கூத்தனுக்கு வாழ்த்துகள்.

நான் ரசித்த அவருடைய கவிதை ஒன்று.

//// உயர்திரு பாரதியார்

July 30, 2006
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்,



மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு,

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு./////  1971  எழுதியது.



மேலும் வாசிக்க சுசீலாம்மாவின் தளம் :-

http://www.masusila.com/2014/12/2014.html?spref=fb

டிஸ்கி :-  ஒரு சில இலக்கிய ஆளுமைகளின்  ஒரு பக்கக்  கருத்துக்களோடு முரண்பட்டாலும் ஒப்புமை இல்லாவிட்டாலும் அவர்கள் நிகழ்த்தும் எல்லா நல்லா காரியங்களையும் ஒதுக்கிச் செல்லும் மனப்போக்கு என்னிடம் இல்லை. 


எனவே அல்லவை நீக்கி நல்லவற்றைப் பாராட்டுவோம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன். !


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)