திங்கள், 15 டிசம்பர், 2014

அன்பெனும் பேராயுதம்.

101. நீண்டுவிட்ட தொலைதூரப் பயணமும் நீட்சியடையாமல் போய்விட்ட இணையமும் உங்கள் வாழ்த்துகளை என்னால் உரிய நேரத்தில் பார்க்க இயலாமல் செய்துவிட்டது. மிக நன்றி என் அன்பிற்குரிய நட்புகளே.. வாழ்க வளமுடன்.

102. Due to continuous travel and net problem im not able to respond for your wishes my dear friends.. Thank God and facebook for giving me such beautiful and awesome people as my friends :)

103. feeling annoyed·
டெல்லி டு கன்யாகுமரி.. பஸ்ஸிலும் ட்ரெயினிலும் படிக்கட்டுகளில் தொற்றிப் பயணிப்பது தற்கால ஆண்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று..

104. எதனாலும் உன்னால்
வீழ்த்த முடியாது என்னை.
நான் தாங்கி இருப்பது
அன்பெனும் பேராயுதம்..

105.  வாழ்வின் பக்கங்களில்
அர்த்தம் தேடிச் சலிக்கிறது
மனம்



106.வெறுப்புமிழ்ந்து செல்கிறது
மனப்புழு.
உழல்வதன்முன்னும்பின்னும்
கசப்பின் கரகரப்போடு நீள்கிறது
உண்டதன் மிச்சம்.


107. அன்பைத் தேடுமிடத்தில் ஞானமும்
ஞானம் தேடும் இடத்தில் அன்பும் கிடைக்கிறது. 

108. நிகழ்வுகள் மறைகின்றன. நினைவுகள் மரிப்பதில்லை

109.பசிய ரேகைகளாய்
சுருங்கிக்கிடக்கிறது
குளத்தின் வயோதிகம்.


110.  ஏதோ ஒரு படம், ஏதோ ஓரு பெயர், ஏதோ ஒரு ஊர். பொதுப்படையாக ஆன்மீகம் , உணவு, குழந்தை என்று சில படங்கள். இப்பவெல்லாம் ஃபேக் ஐடிய கண்டுபிடிக்கத் தெரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன்.

111. ஸ்மைலிக்கு பதில் ஸ்மைலி என்று நீண்டுகொண்டே போகின்றன சில உள்டப்பித் தகவல்கள். ..

112. TTRRRRRRRRRRRR
இது சோறா.. வயித்துல நேரடியா நெல்லை விதைச்ச மாதிரி இருக்கு. 
#CENTRALRAILWAYFOOD. :)

113. வண்ணச்செதில்களாய்க் கட்டிடங்கள்
இரவில் நீந்திக்கொண்டிருக்கின்றன
கரையோர நீரில். 

114. சூத்திரக் கயிற்றில் சுதாரிக்காதது
நெம்புகோலையும் நிராகரிக்கிறது.
 

115. எந்த ஊர்ல ட்ரெயின் நின்னாலும் ஆண்கள் எல்லாம் இறங்கி ப்ளாட்ஃபாரத்துல நிக்கிறாங்களே ஏன். அப்புறம் ட்ரெயின் கிளம்பி மூவ் ஆகும்போது ஓடிவந்து தொத்திக்கிறாங்க. 

#டார்வினிஸப் பரிணாமம்..?

116. பேண்ட்ரி கார் இருக்கு பஜ்ஜி, கட்லெட், சூப் ஃப்ரெட் சாண்ட்விச், லஞ்ச் எல்லாம் வருது. ஆனா மக்கள் குர்குரே, சிப்ஸ், காஃபி டீ தவிர வேறேதும் வாங்குறதில்லை. அதும் முதல் தரம்தான் நல்லா இருக்கு. அடுத்த தரம் எல்லாம் வெந்நீர் அல்லது கழனித்தண்ணி. அது வேற குட்டியூண்டு கப் 10 ரூ . 

கொள்ளையோ கொள்ளை#ரயிவேஃபுட்-மத்யரயில்வே. 

117. எவ்வளவுதான் பழகி இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனிதர்களின் தந்திரம் மனதுக்குப் புரிவதில்லை

118. எல்லார் கரத்திலும் ஒரு கண்ணாடி
உலகைப் பார்க்க அல்ல
தன்னை மட்டுமே பார்க்க.



119. விளையாடும்போது
சேர்த்துக்கொள்ளும் குழந்தைகள்
வேகப்படும்போது விட்டுவிடுகிறார்கள்.
 

120. பொம்மியின் கைப்பிடியில்
பொம்மை அகப்படும்வரை
நான் அவள் கைப்பொம்மை.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.


4 கருத்துகள்:

  1. 106.வெறுப்புமிழ்ந்து செல்கிறது
    மனப்புழு.
    உழல்வதன்முன்னும்பின்னும்
    கசப்பின் கரகரப்போடு நீள்கிறது
    உண்டதன் மிச்சம். உண்மை.

    பதிலளிநீக்கு
  2. ஆம் அம்மா. நினைவில் கசப்பு மட்டும் எப்போதும் மறப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. அன்பைத் தேடுமிடத்தில் ஞானமும்

    ஞானம் தேடும் இடத்தில் அன்பும் கிடைக்கிறது.

    அறியத் தந்தமைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)