செவ்வாய், 2 டிசம்பர், 2014

பழைய பேப்பர்..:-

பழைய பேப்பர்..:-
****************************
வாசித்தவுடன் அனைத்தும்
வீடடைக்கும் குப்பைகளாகி
எடைக்குப் போடத்
தகுதியானவையாகிவிடுகின்றன.

மொழிவாரியாக
பிரிக்க வேண்டும்.,
மானியத்திற்கல்ல..
விலை கூடக்கிடைக்க..


சிலவற்றின் தாள்கள்
தரம்கூடியவையாய்
இருக்கின்றன வாங்கும்போதும்
துடைத்து வீசும்போதும்.

செம்மொழி வெறும்மொழி
உள்ளுர் செய்தி உளுத்த செய்தி
உலகமயமாக்கல் கிழியும்காகிதத்தில்
பெட்ரோல் எழுத்து வாடையோடு.

வெளியேறியபின்னும்
மொழி ஆட்சி செய்கிறது.,
பழைய புத்தகக்கடையின்
துலாபாரங்களில்.

டிஸ்கி :- இந்தக் கவிதை மார்ச் 1 - 15, 2014, அதீதத்திலும் வெளியானது.

4 கருத்துகள்:

  1. அருமையான கவிதை! செம்மொழி வெறும்மொழி
    உள்ளுர் செய்தி உளுத்த செய்தி
    உலகமயமாக்கல் கிழியும்காகிதத்தில்
    பெட்ரோல் எழுத்து வாடையோடு.//

    அருமை!

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசிதரன் சார்

    நன்றி கோமதி மேம்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)