செவ்வாய், 9 செப்டம்பர், 2014

மேகவிரலும் மழைத் தீண்டலும்.

வலிநீங்க வன்மையாய்
சுழற்றிச் செல்கிறது
காட்டாறு.
வலித்தவை
முண்டுமுடிச்சாய்த் தேங்க
அடுத்த சுழற்சிக்குத் தயாராய்ப்
பதுங்கிக் கிடக்கிறது..

நுரைபொங்க ஆவிபறக்க
ருசியாய்ப் பாய்கிறது
அருவி.
கோரம்பாய்க் கோடுகளாய்
வெய்யிலில் மின்னுகிறது
அருவிகளற்ற தடம்.



நாட்டியம் முடிந்த
சலங்கைப் பட்டையாய்
சலனமற்றிருக்கிறது குளம்.
சூரியன் உறிஞ்சிக் குடிக்க
ஈசானியக் கிணற்றில்
ஒளித்துக் கொள்கிறது முகம்.

மஞ்சள் வெளிச்சங்களால்
கூசிக் கிடக்கிறது
கூழாங்கல்.
மேகவிரல் மழையாய்
நீண்டு தீண்டும்
அடுத்த தடவலுக்காய்க் காத்து.

டிஸ்கி :- ஜூன் 6, 2014 , அதீதத்தில் வெளியானது. 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)