செவ்வாய், 27 மே, 2014

அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் நண்பர் திரு KT. இளங்கோ.

இளங்கோ சாரைப் பற்றிய அறிமுகம்
என்னுடைய முகநூல் நண்பர்களில் குறிப்பிடத் தகுந்தவர் திரு இளங்கோ அவர்கள். அவர் மட்டுமல்ல அவரது மனைவி திருமதி பத்மா கூட என் அன்பிற்குரிய தோழி.

என்னுடைய சாதனை அரசிகள் நூல் வெளியீட்டு விழாவுக்கு தம்பதியராய் வந்து சிறப்பித்தார்கள். அடுத்து வெளியான என் “ங்கா” கவிதைகளை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வந்து வாங்கி அதற்கு விமர்சனமும் எழுதி அனுப்பினார்கள்.


இப்போது அன்னபட்சி வந்த போதும் புத்தகத் திருவிழாவுக்கு வந்து நூலை வாங்கிச் சென்று படித்து மிக அருமையான விமர்சனத்தை அனுப்பி இருந்தார்கள். முன்பே என் கவிதைகள் முகநூலில் வெளியாகும் சமயம். அவ்வப்போது சிறந்த கவிதைகளை ப்ரிண்ட் எடுத்துத் தன்னுடைய கம்பெனியில் ( பொறியாளராய் இருக்கிறார் )  மற்றவர்களும் வாசிக்க நோட்டீஸ் போர்டில் போடுவதாகக் கூறி இருக்கிறார்.

அவரும் அவரது மனைவி தோழி பத்மாவும் சில நாட்கள் படித்து இந்த விமர்சனத்தை அனுப்பியதோடு அல்லாமல் என் புத்தக அறிமுக நிகழ்வு அகநாழிகையில் நடக்கிறது என்று கூறி அழைத்தவுடனே வந்து நானும் பத்மாவும் வர்றோம் நானும் சில கருத்துக்களைச் சொல்கிறேன் மேடம் ஏன்னா நான் தான் முழுமையாகப் படித்திருக்கின்றேன் அன்ன பட்சியை என்றார்.  ரொம்ப சந்தோஷமாக வாங்க என்றேன்.

இந்த நிகழ்வில் கயல்விழி லெட்சுமணன் பேசுவதாக இருந்தது. பின் அவருக்கு வேறு ஒரு முக்கியமான குடும்ப நிகழ்வு இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை. எனவே அவருக்குப் பதில் இவர் என்று தொலைக்காட்சியில் போடுவதுபோல இங்கே கயல்விழிக்குப் பதில் இளங்கோ பேசினார். மேலும் முதலாவதாகப் பேசக் கூப்பிட்டபோது முதல் பேட்ஸ்மேனா.. நோ என்று சொன்னவர் பின் ரெண்டு இன்னிங்ஸும் அவுட் ஆகாமல் மிகச் சிறப்பாக  அடித்து ஆடினார்.

என் நூல்கள் குறித்தும் அன்ன பட்சி குறித்தும் அதன் சொல்லாடல்கள், கவிநயம் குறித்தும் சிலாகித்துப் பேசினார். மிக அருமையானதொரு உரையாக அது இருந்தது. நம் எழுத்தில் குறைகள் இருந்தாலும் நல்ல நண்பர்கள் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டார்கள்தானே. அதைப் போலத்தான் இருந்தது அவர் பேச்சு.

நல்ல நண்பர்கள் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். அவரது மனைவியும், என் தோழியுமான பத்மாவும் அவரோடு சேர்ந்து வந்து இசையோட சேர்ந்த கீதம் போல இயைந்து வந்து இருந்தது இன்னும் சந்தோஷமாக இருந்தது. இரண்டு பேரும் என் நட்பில் அமைந்தது எனக்குக் கிடைத்த பெரும் வரம். வேறென்ன சொல்ல. :) நன்றி இளங்கோ& பத்மா.

டிஸ்கி :- அன்ன பட்சி பற்றி பத்மா  & இளங்கோவின் கருத்துக்கள் இதோ இங்கேயும். 

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள்! எதை முதலில் வாங்குவது என்று யோசிக்கிறேன்..மூன்றையும் படிக்கச் வேண்டும் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)