சனி, 30 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சாந்தி மாரியப்பன் -- மலைத்தேனும் மாத்தேரனும்.

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட. 

வலை உலக சகோதரிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சகோதரி அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. அவர்கிட்ட சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

///உங்க கணவரோட போன ஊர்ல மறக்க முடியாத ஊர் எது.? ஏன் ?///

யக்கோவ்.. எதைச்சொல்ல எதை விட . ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதத்துல மறக்க முடியாததுதான்னாலும் மாத்தேரன் சம்திங் ஸ்பெஷல்.. நாலஞ்சு இடுகையாவது வர்ற அளவுக்கு எளுதுவேன். அக்கா பாவமாச்சேன்னு சுருக்கிட்டேன். ப்ளாகில் போட்டோ வேண்டாமே ப்ளீஸ்..
அன்புடன், சாந்தி மாரியப்பன்.

வியாழன், 28 நவம்பர், 2013

பாக்யாவின் “ மக்கள் மனசு “ பகுதியில்.


வரும் வார பாக்யா 'மக்கள் மனசு' பகுதிக்கான கேள்வி:
----------------------------------------------------
இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?...

செவ்வாய், 26 நவம்பர், 2013

கருவறைப் புழுக்கம்.

இமை மதகுகள் வடிக்கும் நீர்
கூந்தல் வேர்கள் தழுவிச் செல்லும்.

விழி விதைகள் விழுந்த இடம்
அன்புச் செடியோடு கோபக் களைகளும்..

வாரிச் செல்லும் காற்றில்
வாழ்க்கைக் குப்பைகளும் சுழலும்

திங்கள், 25 நவம்பர், 2013

முத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இதழில் எழுதிய கவிதைகள் தொகுப்புக்கான அணிந்துரை.


ஆதிமனிதனின் விலாவிலிருந்து செதுக்கப்பட்டவள் பெண். ஆப்பிளைக் கொடுத்து மனிதனுக்குள் காதலை இழைத்தவள் பெண். கர்ப்பத்தில் உதித்து கர்ப்பக்கிரகத்தில் அடைத்தாலும் கர்ப்பம் சுமந்து காத்து ரட்சிப்பவள் பெண். அம்மா, சகோதரி தோழி எனப் பல பரிமாணங்களில் இருந்தாலும் காதலியாகவும் மனைவியாகவும் கொஞ்சியும் கடிந்தும் ஊடல் செய்தும் ஆணைப் பைத்தியமாக்குபவள் பெண்.

சனி, 23 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ஜீவா நந்தனின் நான் வரைந்த ஓவியமே...


கிட்டத்தட்ட 5 வருடங்களாக என் முகநூல் நண்பர் திரு. ஜீவாநந்தன்.  நகைச்சுவை இவரின் கூடப் பிறந்தது. திரைச்சீலை என்ற இவரது புத்தகத்துக்கு நான் விமர்சனம் எழுதியுள்ளேன்.  

இவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

/////நீங்க ரசிச்சு வரைஞ்ச ஓவியம் எது. ?///

செவ்வாய், 19 நவம்பர், 2013

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் போட்டி.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப்போட்டிக்கான அறிவிப்பை எனது மாமா லயன் வெங்கட் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள்.

திங்கள், 18 நவம்பர், 2013

பகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன்.

புதிய தலைமுறையின் ஆசிரியர் பெ கருணாகரன் எழுதிய “அமேசான் காடுகளும் சகாரா பாலைவனங்களும்” புத்தகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருதும் , எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ஜி யூ போப் விருதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 16 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், பத்மா இளங்கோவின் காதலுக்கு ( பெரியவங்களுக்கு ) மரியாதை.

முகநூலில் சில நட்புக்களில்  கணவன் மனைவி இருவருமே  எனக்கு நல்ல நண்பர்களாக வாய்ப்பதுண்டு.அவர்களில் ஒரு ஜோடிதான் இளங்கோ & பத்மா இவர்கள். இவர்களை இன்னும் சில பத்ரிக்கைகளில் பேட்டி எடுத்தும் போட்டிருக்கேன். என் புத்தக வெளியீட்டுக்கு தம்பதி சமேதரா வந்து வாழ்த்தினாங்க. என் இரண்டாவது புத்தகத்தைப் படிச்சு அதுக்கும் பத்மா அழகா விமர்சனம் செய்ததை இளங்கோ அனுப்பி இருந்தார். எங்கே இருந்தாலும் ஏதோ ஒரு கணம் போன் செய்து இருவரும் நலம் விசாரிப்பாங்க. ஹ்ம்ம் இம்மாதிரி சில நட்புக்கள் கிடைக்க நாமும் தவம் செய்திருக்கிறோம்தான். அவங்ககிட்ட சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி.

 ////உங்க மனைவியை எங்க சந்திச்சீங்க. அந்தத் தருணம் எப்படி இருந்தது. ?/////

வியாழன், 14 நவம்பர், 2013

புஜ்ஜியும் பொம்மைகளும். :-

1. அட்டைப்பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்..
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை..

புதன், 13 நவம்பர், 2013

பரிசில்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் முகநூல் நண்பர்கள், சகோதரிகள் , சகோதரர்கள் நம் அன்பாலும் பண்பாலும் எழுத்தாலும் கவரப்பட்டு சந்திக்க அனுப்பிய பரிசுகள் மற்றும் விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும்போது அளிக்கப்பட்ட பரிசுகள் வீட்டில் நிரம்பிக் கிடக்கின்றன அவர்களின் அன்பைப்போல.

அவற்றில் சில இங்கே.

அமீரகம் சென்றிருந்தபோது என் அன்பு சகோ எழுத்தாளர் கவிமதி இந்தக் குவளையையும் ஒரு நகைப்பெட்டியையும் பரிசளித்தார்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

புதிய தலைமுறையில் பெண்கள் டைரிக்காக.

கல்லூரியில் படிக்கும்போது  எடுத்த பாடம் வேதியலாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பாடம் தமிழ்தான். தமிழம்மா அனைவருமே என் பாசத்திற்குரியவர்கள். ஃபாத்திமா மிஸ், பாலாம்பா மிஸ் ஆகியோருடன் நான் இன்றும் அதிகம் நேசிப்பது என்னுடைய சுசீலாம்மாவையே.

சனி, 2 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சித்ராசாலமனின் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..

கொஞ்சம் வெட்டிப் பேச்சு சித்ராசாலமனை வலைப்பதிவர்கள் யாரும் மறக்கவே முடியாது. என் ப்லாகர் தங்கையான இவரைப் பற்றி சித்ராயணம் என்று என் ப்லாகில் எழுதி இருக்கிறேன்.ஒரு காலத்தில் சூப்பர்மேனை விட அதிகமாகப் பறந்து பறந்து பின்னூட்டமிட்டவர். ஏதோ ஒரு அந்நியநாட்டு சதியால் ப்லாக் பக்கமே ரொம்ப வராம இருக்கார். அவரிடம் நம்ம சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.