செவ்வாய், 26 நவம்பர், 2013

கருவறைப் புழுக்கம்.

இமை மதகுகள் வடிக்கும் நீர்
கூந்தல் வேர்கள் தழுவிச் செல்லும்.

விழி விதைகள் விழுந்த இடம்
அன்புச் செடியோடு கோபக் களைகளும்..

வாரிச் செல்லும் காற்றில்
வாழ்க்கைக் குப்பைகளும் சுழலும்


போர்த்தும் கம்பிளியாய் இறுக்கும் அன்பில்
கதகதப்போடு மூச்சுத் திணறும்.

வாய்ப்பேயில்லை வாய் பேசினாலும்
விடுபடவோ விடைபெறவோ விட்டுச் செல்லவோ.

சாம்பல் பூக்கும்வரை கனலும் கங்கு
தெறித்ததேயில்லை எவர்மீதும்.

குறையொன்றுமில்லையென்று
கொப்புடையாளாய் கோபுரத்தில் சிலை.

கன்னத்தில் போட்டு வணங்கும்
மானுடர்க்குத் தெரிவதில்லை கருவறைப் புழுக்கம்.

டிஸ்கி:- நண்பர் சித்தன் ப்ரசாத் அவர்களின் ஓவியத்துக்காக எழுதப்பட்ட கவிதை இது.


7 கருத்துகள்:

  1. நன்றி தேனம்மை! இந்த ஜுகல்பந்தி நன்றாகவே அமைந்துவிடுகிறது. என்ன? எனக்குத்தான் தொடர்ந்து ஓவியம் தீட்ட சமயம் கிடைப்பதில்லை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி தேனம்மை! இந்த ஜுகல்பந்தி நன்றாகவே அமைந்துவிடுகிறது. ‘சும்மா’ என்பது உங்கள் பிளாக் பெயர் என்பது தெரியாது. தொடரலாம் இந்த இரண்டு கலைகளுக்கிடையேயான வித்தையை! என்ன, எனக்கு தொடர்ந்து ஓவியம் தீட்ட சமயம் கிடைப்பதில்லை. இது எனக்கு இன்னும் உற்சாகமளிக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. ஒவியமும் அதற்கான படமும் அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ

    நன்றி சித்தன் சார். முடியும்போது ஜூகல்பந்தியைத் தொடர்வோம் சார் :)

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)