ஞாயிறு, 17 மார்ச், 2013

யாருக்காக..

முகநூல் முழுவதும் சுற்றி வந்தும் யாருக்காக மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றார்களோ அவர்களிடமிருந்து ஒரு ஆதரவும் காணமுடியவில்லை என்று ஒரே குரலில் கருத்துக்கள் வழிமொழியப்பட்டிருக்கின்றன.

”வகுப்பைப் புறக்கணிக்கலாம். மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடலாம். உண்ணாவிரதம் வேண்டாமே. மயங்கி இருப்பவர்களைப் பார்த்தால் ஒரு அம்மாவா கஷ்டமா இருக்கு” என்று என்னுடைய நிலைத்தகவலாக நேற்று பகிர்ந்திருந்தேன்.



அதற்கு ”வகுப்பைப் புறக்கணித்தால் அட்டெண்டண்ஸ் போய்விடும். மனிதச் சங்கிலிப் போராட்டம் செய்தால் பொது அமைதிக்குக் குந்தகம் வந்துவிடும் என்று கட்டுப்படுத்தப் படலாம்” என்று சகோதரி லாவண்யா கூறி இருந்தார்.

வெளியூரில், வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகள் கட்டாயம் காலை உணவை உண்பதில்லை. மதியமும் சரிவர உண்பதில்லை.  இரவு மட்டுமே உண்கின்றார்கள் என்று பெற்றோராகிய நாம் கவலைப்படுவதுண்டு. சில நாட்கள் உணவு இல்லாமல் மயங்கி கிடக்கும் பிள்ளைகளைப் பார்த்தால் பரிதவிப்பாய் இருக்கிறது.

எதற்குப் போராடுகிறோமோ, யாருக்குப் போராடுகிறோமோ  அவர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் . இதற்கு அவர்கள் ஆதரவு உண்டா என ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும். 

இல்லாவிட்டால் பட்ட துன்பம் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.


6 கருத்துகள்:

  1. http://www.yarl.com/forum3/index.php?act=idx

    வணக்கம் உங்கள் பதிவு ஓர் அப்பட்டமான பொய். நான்மேலே தந்துள்ள லிங்கை அழுத்துங்கள் .புலம் பெயர் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் . நாங்கள் உங்களுக்காக எமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும்பொழுது . இந்தப் பதிவு மிகவும் கண்டிக்கத்தக்கது

    நேசமுடன் கோமகன்

    பதிலளிநீக்கு
  2. இரண்டு பக்கம் திரும்பிய கேள்விக்கு விடை இது-

    ஒன்று-
    தமிழீழ மக்கள் பக்கமும் அவர்கள் சார்ந்தவர்களையும் சாடும் தெளிவான கேள்வி-

    இன்னொன்று-
    பட்டினி என்பது இந்திய இறையாண்மையின் காந்திய மண்ணில் வெற்றி பெறும் என்பது-அளவு கடந்த நம்பிக்கையே ஆகும்-

    அதில் மாற்றம் தற்காலத்தில் தான் உள்ளது என்பதை காலம் உணர்த்துகின்றது-

    எனினும்…
    பட்டினி கிடந்து இந்த தமிழீழத்தை வென்று கொள்ள முடியும் என்பது சரியான தீர்வு இல்லை என்பது மனிதாபினம் பார்க்காத நாட்டிற்கு பொருந்தும் முற்றுப் பெற வேண்டியபதிலாகும்.

    அடுத்தது..
    இதில்-
    புறக்கணிப்பு என்ற பெயரில் பல விடையங்கள் செய்யலாம் தானே..?-
    அதனால் நீதியின் கதவுகள் திறக்கப்படுமா.?

    என்றும் இல்லை-
    இதனால் இந்த நாட்டிற்கு என்ன ஏற்படும் என்பது பற்றி எந்தக்கவலையும் இல்லை-
    அப்படி இருந்தால்.?
    இன்று வரை நடக்கும் அறவழிப்போர்களுக்குப் பதில் கொடுத்திருப்பார்கள்.

    இந்த வீதிப்போர் சரி புறக்கணிப்பு போர் சரி அத்தனையும்-
    மனிதாபின எண்ணங்கள் கொண்ட நடு நிலையான அரசுக்குத்தான் புரிந்து உணர்ந்து தீர்வு கொடுக்கத்தெரியும் அல்லவா.?.

    சரி-
    அப்படி புரிந்து உணர்ந்திருந்தால்.?
    இப்படியான மாணவர்கள் போராட்டம் இன்று வெடித்திருக்காது-

    இது இயலாமையின் முடிவும்-காந்திய மண்ணில் வைத்த அளவு கடந்த மரியாதையுள்ள நம்பிக்கையே பட்டினிக்கு கொண்டு போனது ஒரு மகுந்த அவமான செய்ல்பாடே ஆகும்-

    எனினும்-

    இரண்டு பாதிலுக்கும் அப்பால்.?
    இந்தப்போராட்டத்தை எப்படி உடனே சரி செய்து தீர்வு கொடுப்பது.?

    இன்றே இந்த விநாடியே முற்றுக்கு கொண்டு வரலாம்.
    எப்படி..?
    அவர்கள் கருத்து சரியானது அல்ல என்றால்.?
    அதை அடக்கி முடுக்கி விடலாம் அதற்கு கை தேர்ந்த இராணுவமும் காவல்துறையும் உங்களிடமே உள்ளது-
    அவை என்றும்
    தப்பே இல்லை-

    அவர்கள் கோரும் கேள்விக்கு பதில்.?
    நீதி உள்ளது என்றால்..?

    இன்றே விடுதலைக்கான முற்றுப்புள்ளியை வைக்கலாம் அல்லவா.?

    இந்த இரண்டு தீர்வுக்கும் ஒரு விநாடியே தீர்ப்பு-
    பல நாட்கள் சென்ற கஞ்சி இது என மறைக்கும் எண்ணம் தான் கொடி தப்பும் வன்மை எண்ணமும் ஆகும்.

    எவை எப்படியோ.?
    ஒட்டு மொத்த மனித இனம் தவறு செய்த குற்றத்தை சரி செய்யவேண்டும்-

    தவறும் தருணத்தில் இப்படியான நிலை வரும் என்பதை கற்று அறிந்த அறவாளர்களுக்கு ஏன் அனுபவம் காட்டிக்கொடுக்கவில்லை-?
    இது என்ன புதிதாய் தோன்று போராட்டமா….?

    எனினும்.
    அதை தடுப்பதா.?
    அல்லது அதற்கு நீதி கொடுப்பதா.?
    என்ற கேள்விக்கு சட்டன விடை எடுக்க முடியவில்லை என்றால்.?
    இந்த நாடு காந்திய நாடு என்று பட்டினி கிடப்பதை தவிர்த்து -அடுத்த கட்ட போருக்கு வழி வகுத்துக்கொள்ள வேண்டியது தான்.-

    எனினும் இந்த நாடு -
    அன்பின் வழியது உயர் நிலை அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு என்ற -குறள் பெற்ற நாட்டிற்கு நாம் புத்தி புகட்டுவது நல்லதல்ல..

    ஏனோ..?
    அயல் நாட்டில்-
    நான் தம்பி என்றால்.?
    உங்கள் நாட்டில் எனக்கு அண்ணன் என்று தானே உறவு முறை கொள்வேன்..?
    நாங்கள் உங்கள் சுற்றம் என்ற தொப்புள் கொடிக்கு பதில்-
    பட்டினி அல்ல-
    இதனால் இறையாண்மை என்ற அறவழி விடுதலை தரப்போவதில்லை-

    ஒரு சான்று-
    தியாகத்தீபம் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துத்தான் வீரச்சாவை அடைந்தான்-
    அவர் விட்டுச்சென்ற தீ-
    வேறு வடிவங்களால் மாற்றம் பெற்றதை அனைவரும் அறிய வேண்டும்-
    பட்டினி வெறும் உண்டிக்கு வலியாகத்தான் முடியும்-
    உணர்ச்சிகளுக்கு அல்ல-
    இது மனிதாபினம் இல்லாத நாடு கற்பித்த அனுபவப்பாடமாகும்.

    எனினும்–
    எல்லாக்கேள்விக்கும் பதில்-
    புரிந்து நடக்க வேண்டிய அதிகாரத்துவர்கள் புரிந்தால்.?
    விடை விடுதலையாக முற்றுப்பெறும்-.!!!

    பதிலளிநீக்கு
  3. ஆம் உண்மைதான் அந்த பிள்ளைகளை பார்க்கும் போது வயிறு சுருண்டு விடுகிறது புரிந்து செய்தால் சரியாக வரும்தான் எதுவும் விழலுக்கு வார்த்த நீர் போல் ஆகிவிட கூடாது என்பது மிகவும் சரி

    பதிலளிநீக்கு
  4. தியாகராஜா சார் நான் முகநூலில் அநேகர் இதே விதமாக கருத்துப் பகிர்ந்திருந்ததையே தெரிவித்தேன்.

    நன்றி யாழகிலா அறியத்தந்தமைக்கு.

    நன்றி சீனி

    நன்றி மலர் பாலன்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)