வெள்ளி, 15 மார்ச், 2013

கும்பகோணம் புத்தகத் திருவிழாவில் ”சாதனை அரசிகளு”ம் ”ங்கா”வும்.

கும்பகோணத்தில் ஃபிப்ரவரி 10, 2013  லிருந்து மார்ச் 10, 2013  வரையில் பவளம் ஹாலில் ( பரணிகா தியேட்டர் அருகில் ), பக்தபுரி தெருவில் புத்தகத் திருவிழா நடைபெற்றது.


அதில் என்னுடைய புத்தகங்கள் ”சாதனை அரசிகளு”ம்  ”ங்கா”வும் இடம் பெற்றன. கவிதை நூல்களுடன் “ங்கா”வும், தன்னம்பிக்கை நூல்களுடன் ( கு. ஞானசம்பந்தன், மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோரின் நூல்களுடன்) என் புத்தகம் சாதனை அரசிகளும் இடம் பெற்றது.

”சாதனை அரசிகள்” 3 புத்தகங்களும் ( தன்னம்பிக்கை நூல்கள் தற்போது விற்பனை ஆகிவிடுவதாக கூறினார்  வி ஏ அபிநயா புக்ஸின் ( சேத்தியாதோப்பு) உரிமையாளர்.) “ங்கா” 6, 7 புத்தகங்களும் விற்பனை ஆகியுள்ளன. 

சுஜாதா நூல்கள் கொட்டிக் கிடந்தன. 5,000 தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களோடு எனது புத்தகமும் இடம் பெற்றது சந்தோஷமளித்தது.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருந்தது. புத்தகங்களைத் தேடிப் பார்க்க ஏதுவாக வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளதாக இருந்தது பவளம் ஹால். ஞாயிற்றுக் கிழமைகளில் ஓரளவு கூட்டமும் மற்ற நாட்களில் அங்கங்கே சிலருமாக இருந்தது மக்கள் வருகை.

நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் வாசகர்களுக்கு நன்றி.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)