செவ்வாய், 9 அக்டோபர், 2012

இல்லத்தரசிகள் பற்றிய மனோபாவம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் நீங்க என்னவா இருக்கீங்க என்று கேட்டால் நான் வெறும் ஹவுஸ் வைஃபாதாங்க இருக்கேன். என சொல்லி இருக்கிறேன் . அது என்ன ஹவுஸ் வைஃப். சில வீடுகளில் தற்போது பெண்கள் நல்ல ப்ரொஃபஷனில் இருக்க அவர்கள் துணைவர்கள் எழுத்தாளர்களாகவோ அல்லது திரைத்துறையில் வெற்றி காணும் முயற்சியிலோ ஈடு பட்டு இருக்காங்க. மனைவி அலுவலகம் செல்ல அவங்க துணையா இருக்காங்க இது அவர்களின் சுய தேவையின் பொருட்டே. அவங்க கிட்ட நீங்க என்ன செய்கிறீங்கன்னு கேட்டா நான் தற்போதைக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டா இருக்கேங்க என சொல்வதில்லை. மாறாக என்ன செய்ய அல்லது என்னவாக ஆக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விலாவாரியாக சொல்வார்கள்.

ஹவுஸ் வைஃபாக மட்டும் இருப்பது ரொம்ப சுலபமான காரியமா என்ன.?


ஒரு மனைவி அல்லது தாய் அல்லது அந்த வீட்டின் மூத்த உறுப்பினரான பாட்டி உங்க பாஷையில் சொல்லணும்னா ஹவுஸ் வைஃப் என்னென்ன கடமைகளை நிறைவேற்றுகிறாங்க. ஒரு இல்லத்தை இனிய இல்லமா உருவாக்குறவங்க இவங்கதான். இவங்க நிழல்லதான் நீங்க எல்லாரும் வளர்ந்திருப்பீங்க வளர்ந்து வருவீங்க. மனைவி கூட கணவரை குழந்தைகள் போலத்தான் வளர்த்துகிட்டு இருக்காங்க.

ஒரு அம்மா அல்லது மனைவி குடும்பத்தின் நிர்வாகியா, நல்ல நிதி மந்திரியா, நல்ல உணவு கொடுப்பவரா, உடல்நிலையை கவனிக்கும் தாதியா, வீட்டோட வேலைகளை எல்லாம் செய்யும் வேலைக்காரியா எல்லாப் பரிமாணங்களும் எடுக்கிறாங்க.

அவங்க ஏதோ வெட்டியா வேஸ்டா வீட்டுல உக்காந்துகிட்டு டிவி பாக்குறாங்க . பொழுதைக் கழிக்கிறாங்க. வீண் பேச்சுலயும், வெட்டி வேலைகள்லயும் ஈடுபடுறாங்கன்னு நினைச்சா அந்த எண்ணத்தை முதலில் மாத்திக்குங்க.

முதலில் அவங்களோட நிர்வாகத் திறமை. மேனேஜ்மெண்ட். இதுல உங்க வீட்டோட மேனேஜ்மெண்ட், நிதி நிலை மேனேஜ்மெண்ட், உறவுமுறை மேனேஜ்மெண்ட், குழந்தைகள் மேனேஜ்மெண்ட், ஹெல்த் மேனேஜ்மெண்ட், வீட்டு வேலை செய்பவர்களை மேனேஜ்மெண்ட் , குடும்பத்துக்கான சேவிங்கஸ் என எம்பிஏ எல்லாம் படிக்காமலே எல்லா நிர்வாகத்தையும் திறமையா நடத்து்றாங்க.

வீட்டில் என்ன இருக்கு, என்ன தேவை, என்னென்ன பொருட்களை எப்படிப் பராமரிப்பது, வீட்டை, தோட்டத்தை, பொருட்களை எப்படிப் பராமரிப்பது என்பதெல்லாம் அவங்களுக்குக் கைவந்த கலை. உணவுப் பொருள் பற்றாக்குறை வராம அவ்வப்போது பார்த்து வாங்கி வச்சிடுவாங்க. வீட்டில் வாங்கிய பொருட்கள் கெட்டுப் போகாம எப்படி டைம் பார்த்து உபயோகப்படுத்துவது. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ( வத்தல் வடகம் ஊறுகாய் போன்ற பொருட்களை ) தானே தயாரிப்பது. இது வீட்டோட மேனேஜ்மெண்ட். ஃபோன்பில், தண்ணீர் பில், கரண்ட் பில், ந்யூஸ்பேப்பர், ஃப்ளாட் அல்லது வீடு மெயிண்டனன்ஸ் கட்டணம், வேலைக்காரி சம்பளம், பால், மளிகை, உடைகள் எல்லாம் கரெக்டா பணத்தை ஒதுக்கி இருப்பாங்க. இப்போ ட்ரெயின் முதல் கரண்ட், தண்ணீர், இன்சூரன்ஸ் வரை இண்டர்நெட் பாங்கிங்கில் மணி ட்ரான்ஷாக்‌ஷன் செய்ய முடிகிறது. எனவே இல்லத்தரசிகளும் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு தங்கள் கணக்கு வழக்குகளை கணினியில் பதிவிட்டு முறையா செய்கிறார்கள்.

நிதி நிலை மேனேஜ்மெண்ட். வேலைக்குப் போற எல்லாரும் பணத்தட்டுப்பாடு இருக்கலாம். ஆனா இல்லத்தரசிகளுக்கு பணத் தட்டுப்பாடே இருக்காது. சொல்லப்போனா சிறுவாட்டுக் காசு, சீட்டுப் பணம் தொடங்கி, இன்சூரன்ஸ், அஞ்சலக சேமிப்பு மற்றும் சிலர் பங்குச் சந்தையில் கூட ஈடுபடுறாங்க. என் அம்மாவுக்கு 65 வயது. அவர் பங்குச் சந்தையில் வெற்றிகரமா முதலீடு செய்து வருகிறார். அவசரம் சமயத்துக்கு உங்ககிட்ட கூட பணம் இருக்காது. ஆனா அஞ்சரைப் பெட்டியிலிருந்தோ தன்னோட சிறுசேமிப்பிலிருந்தோ அவங்க தேவையான தொகையை தந்துதவுவாங்க.

உறவுமுறை மேனேஜ்மெண்ட். இது ரொம்ப முக்கியம் ஆண்கள் ஒரு பெண்ணை மட்டும்தான் மணம்முடிக்கிறாங்க.. ஆனா பெண்கள் தங்களோட கணவரோ வீட்டையே தன்னோடதா மாத்திக்கிறாங்க. 20 வயது வரை வளர்ந்த அம்மா அப்பா உறவுகளை விட்டு இன்னொருத்தரோட குடும்பத்தில் ஒருத்தரா பொருந்துறது ரொம்ப கஷ்டம். மாமியார் மாமனாரை அம்மா அப்பா போலவும், கணவரோட தம்பி தங்கைகளை தன் தம்பி தங்கைகள் போலவும் நினைப்பது மட்டுமல்ல. கணவர் சார்ந்த மற்ற உறவுகளோடயும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கிறாங்க. ஆண்களை விட பெண்களே குடும்பத்தின் எல்லா விஷேஷங்களையும் சிறப்புற செய்யணும்னும்., எல்லா உறவினர்கள் வீட்டு விஷேஷங்களுக்கும் தவறாம போகணும்னு குழந்தைகளை கணவரோடவோ அல்லது தனியாவோ கட்டாயம் போயிட்டு வருவாங்க. போக முடியாட்டா ஃபோன் மூலமோ, ஈ மெயில் மூலமோ, கடிதம்மூலமோ தொடர்பு கொண்டு கட்டாயம் வரமுடியாததற்கு விளக்கம் கொடுத்துடுவாங்க. இன்றைய தலைமுறை குழந்தைகள் நட்பு மட்டுமே போதும் என நினைக்கிறார்கள், ஆனால் உறவுகளின் பெருமையை தாய் சொன்னால் புரிந்துகொள்வார்கள். தாத்தா பாட்டியிடம் குழந்தைகள் நடந்துகொள்ளவேண்டியவிதம் , விடுமுறைகளில் அவர்களோடு இருந்து பண்பாட்டை, அன்பை கற்றுக் கொள்ள அனுப்புதல் என செய்வார்கள்,

குழந்தைகள் மேனேஜ்மெண்ட். வீட்டில் கைக்குழந்தைகளை வைத்துக் கொள்பவர் அம்மாதான். கொஞ்சம் பெரிதானால் மட்டுமே அப்பா பார்த்துக் கொள்வார். இருந்தும் குழந்தைகளை பராமரிப்பது, பழக்க வழக்கங்களை சொல்லித்தருவது, இறைபக்தி, படிக்க வைப்பது, குழந்தைகள் உடல்நலன், நட்புவட்டம், வேலைவட்டம், வாழ்க்கைத் துணை எல்லாவற்றிலும் குழந்தைகளை வழிகாட்டி அழைத்துச் செல்வது பெரும்பகுது அம்மாவின் பணிதான். குழந்தைகளிடம் இருக்கும் நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பது, தீய பழக்கங்கள் அல்லது நட்புவட்டத்தை உடனே அறிந்து களைவது எல்லாம் அம்மாதான், இன்றைய மாடர்ன் க்ரெச்சுகள் குழந்தைக் காப்பகங்கள் மட்டுமே. ஆனால் ஒரு குழந்தையை பண்படுத்துவது இல்லத்தில் இருக்கும் தாய்தான்.எந்த வெளிநாட்டில் இருந்தாலும் குழந்தைகளுக்கு முதலில் தேடிவருவது தாய்தான். பின்தான் தகப்பன். அம்மாவின் அரவணைப்பு என்பது நாமெல்லாம் மறக்கவோ மறுக்கவோ கூடியதா என்ன?

பிள்ளைகளுக்கு இரவு நேரக் கதைகள், நீதிநெறிக் கதைகள், எல்லாம் சொல்வது, தைரியம் தன்னம்பிக்கை ஊட்டுதல், எந்த சூழ்நிலையிலும் இருக்க குழந்தைகளைப் பழக்குதல், இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்கக் கற்பித்தல், மற்றவர்களோடு நல்ல உறவுமுறையைப் பேணுதல், நல்ல குடிமகன்களாக, பேர்சொல்லும் பிள்ளைகளாக உருவாக்குதல், அவங்க குறைகள் ( உடற்குறைகள் ) நிறைகளைக் கண்டு ஊக்குவித்தல், உடற்குறை இருந்தா அதைப் போக்க போராடுதல் எல்லாம் அம்மா மட்டுமே செய்ய முடியும்.

ஹெல்த் மேனேஜ்மெண்ட். குழந்தைகளுக்கு பாஸ்டா பிடிக்கும்., மாமா மாமிக்கு நன்கு கு்ழைந்த உணவுகள் கொடுக்கணும். இதுக்கு பாரதிதாசன் பாடல் ஒண்ணுஇருக்கு.


“ கொண்டவர்க்கெது பிடிக்கும்
குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்கதென்ன?
உண்பதில் அவர் உடம்புக்கு
எது ஒவ்வாது என்பதைக்
கண்டறிந்து கொண்டனள்
வழங்கியே அன்பைத் தந்தாள்..”

அவரவர்க்குத் தக்கதை செய்தாளாம் இல்லத்தரசி. அதுபடி வீட்டில் அடிக்கடி பாஸ்டாஸ் நூடில்ஸ், ஃபாஸ்ட் ஃபுட் ப்ரியர்களாக பிள்ளைகள் விளங்கினால் காய்கறி, பழங்கள், நார்ச்சத்துக்கள் விட்டமின்கள் தேவையை வலியுறுத்தி குழந்தைகளுக்கு நல்ல ஹெல்த்தை பராமரிப்பவள் அம்மாதான்.

என் உறவினரின் ஒருவரின் பையன் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியபோதும் சரி, வேலைக்காக பேயிங்க் கெஸ்டாக தங்கிய போதும் சரி. அம்மாவின் உணவுக்காய் வாராவாரம் வீட்டுக்கு ஓடி வருவான். வீட்டில் இருந்தபோது ஒழுங்காக உண்ணாத பிள்ளைக்கு வீட்டை விட்டு சென்றபின்தான் வீட்டு உணவின் அருமை புரிந்திருக்கிறது. அம்மா செய்யும் சாம்பார், பொரியல், கூட்டிலேயேயும் ஆவியில் வேகவைக்கப்படும் இட்டிலி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றிலும் நம் உடம்புக்கு தேவையான சத்து இருக்கிறது.

உடம்பு சரியில்லை என்றால் கேட்கவே வேண்டாம். அம்மா பார்த்துக் கொண்டால் 2 நாளில் எழுந்து அமரலாம். ரசம்சாதம், ப்ரெட், பால், பார்லி கஞ்சி, உடைகஞ்சி என கொடுத்து பிள்ளை எழுந்து ஆக்டிவாக ஆனால்தான் அம்மாக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

வீட்டு வேலை செய்பவர்கள் மேனேஜ் செய்வதுதான் முக்கியமான பிரச்சனை. நிறைய உறவினர்கள் வந்திருக்கும்போது லீவு போடுவார்கள், நாமொன்று நினைத்து சொல்ல அவர்கள் ஒன்று செய்து வைப்பார்கள். அவர்களுக்கு வேலை கற்றுக் கொடுத்து அவர்கள் கவலையில் பங்கெடுத்து அம்மாவின் ஆலோசனைகளை அவர்கள் நாடும் அளவு வைத்திருப்பார்கள் அம்மா. மேலும் அவர்களையும் குடும்பத்தில் ஒருவராக கருதி நாள் கிழமைகளில் உடை, உணவு, பணம் கொடுத்து விடுமுறை கொடுத்து வேலை செய்பவர்களின் மனதிலும் அம்மாவுக்கு ஒரு நல்ல இடம் கிடைத்திருக்கும்.

நிதி நிலையை திறம்பட நிர்வகிப்பது மனைவி என்றால் மிகையாகாது. ஒரு மகள் பிறந்துவிட்டால் போதும் சேமிப்பு சேமிப்பு சேமிப்புதான். அவளை நன்கு படிக்கவைத்து வேலைக்கு அனுப்பவும் அம்மா உறுதுணையாக இருந்தாலும் திருமணம் என்றால் வேணுமே என்று போனஸ் பணம் வந்தால் ஃபிக்சட் டெப்பாசிட்டில் போடுவது , மாதாந்திர நகை பாத்திரச் சீட்டு கட்டி விதம் விதமான நகைகள் பாத்திரங்கள் வாங்கி வைப்பது. பிற்கால வாழ்க்கைக்காக இன்சூரன்ஸில் போடுவது. இடம் வீடு மனைகளில் சேமிக்க கணவனை வற்புறுத்துவது என எல்லாம் மனைவிகள்தான். எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள எல்லாரின் கணவன்மார்களும் வெளிநாடுகளில் சொற்ப சம்பளத்திற்கோ , அதிக சம்பளத்திற்கோ வேலை செய்கி்றார்கள். ஆனால் அவர்கள் மனைவியர் இங்கே அவர்கள் கட்டிய வீட்டில் பிள்ளைகளைப் படிக்கவைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கணவன் அனுப்பும் பணத்தை இன்சூரன்ஸ் செய்வது, ஃபிக்சட் டெப்பாசிட்டில் போடுவது மட்டுமல்ல. வீட்டுத் தோட்டத்தில் விளைந்தவற்றையும் விற்றுக் காசாக்குவார்கள். அவர்களில் ப்ளஸ்டூ படித்த பெண்ணும் அடக்கம். டிகிரி படித்த பெண்ணும் அடக்கம். ஏனெனில் குழந்தை வளர்ப்பிற்காக வேலைக்கு செல்ல முடியாது. இல்லத்தாரும் அந்தப் பெண் வேலைக்குச் செல்வதை விரும்புவதில்லை. புருஷன் சம்பாதிப்பதே போதும் என வீட்டில்முடக்கிப் போட்டு விடுகிறார்கள். மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை செய்தும் தற்போது தன் குழந்தைகளுக்காக வேலையை விட்டு வீட்டில் இருக்கும் அம்மாக்களையும் அறிவேன்.

 கணவரை அனு்சரித்தல், குழந்தைகளை பண்புள்ளவர்களாக வளர்த்தல், பெரியோரிடம் மரியாதை. அக்கம் பக்கத்தாரோடு நல்லுறவு பேணுதல், வேலை செய்பவர்களை நிர்வகித்தல் பணம் சம்பந்தப்பட்ட செலவுகள் சேமிப்புகள். என தசாவதாரம் எடுக்கும் மனைவியை இனி வெறும் ஹவுஸ் வைஃபென்று சொல்லாமல் இல்லங்களை இதயங்களால் உருவாக்கும் இனிய இல்லத்தரசி என சொல்லுவோம். உங்க இல்லத்தின் எல்லாமே நீங்கதான்.. நீங்கதான் இயங்கும் சக்தி. இயக்கும் சக்தி. இனி உங்ககிட்ட நீங்க யார்? என்ன செய்றீங்கன்னு கேட்டா நான் என் இல்லத்தின் அரசியா இருக்கேங்க என கம்பீரமா சொல்லுங்க.


11 கருத்துகள்:

  1. பாயிண்ட் பாயிண்ட்டா அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க. நம்மை நாம உணரனும். வெட்டியா இருக்கறதா நாமளே நினைச்சுக்கிட்டா அது ரொம்ப தப்பு.

    போன வாரம் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் எழுந்து வேலை செய்யமுடியவில்லை. அதனால வெளியிலேர்ந்து சாப்பாடு கொண்டாந்தாங்க அயித்தான். 3 நேரமும் வெளிச்சாப்பாடு சாப்பிட்டு அடுத்தநாள் ஆஷிஷிற்கு வயிறு சரியில்லாமல் போக வேலை டபிள் ஆச்சு. :((

    நான் எப்பவும் சொல்ற டயலாக் மத்த வேலை பார்க்கறவங்க லீவ் லெட்டர் கொடுத்திட்டு ரெஸ்ட் எடுக்கலாம். இல்லத்தரசிகளுக்கு நோ சான்ஸ். :))

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்ல்வது முற்றிலும் உண்மையே...ஆனால் இப்போ ஒரு சில பேர் தான் இப்படி இருக்கிறார்கள்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  3. வீட்டு முதலாளி என்றும் சொல்லிக்கொள்ளலாம். சுலபமாகப் புரியும். நாங்க எல்லாம் RKD மேனேஜர்கள்.(ரிடைர்டு)

    RKD = Rice Killing Department.

    பதிலளிநீக்கு
  4. நல்லா சொன்னீங்க.

    வருசம் 365 நாள் வேலை. அதுவும் லீப் வருசமுன்னா 366 நாள்.

    ஹோம் எக்சிக்யூட்டிவ்ன்னு சொல்லறதுதான் சரி.

    நம்ம பக்கங்களில் மட்டுமில்லை மேலை நாடுகளிலும் ஹவுஸ் ஒய்ஃப்ன்னா ஒரு காலத்துலே கிண்டல்தான். அந்தக் காலக் கட்டங்களில் வெளிவந்த பாட்டு ஒன்னு இங்கே.

    நீண்ட பின்னூட்டத்துக்கு மாப்ஸ்.

    All I am is just a housewife
    Nothing special, nothing great
    What I do is kinda boring
    If you'd rather, it can wait
    All I am is someone's mother
    All I am is someone's wife
    All of which seems unimportant
    All it is is
    Just my life

    Do the laundry, wash the dishes
    Take the dog out, clean the house
    Shop for groceries, look for specials
    God it sounds so, Mickey Mouse
    Drop the kids off, pick the shirts up
    Try to lose weight, try again
    Keep the troops fed, pick their things up
    Lose your patience, count to ten

    (2..3..4..5..6..7..8..9..10
    4..5..6..7..8..9..)

    All I am is just a housewife
    Just a housewife, nothing great
    What I do is "out of fashion"
    What I feel is out of date
    All I am is someone's mother
    Right away I'm not too bright
    What I do is unfulfulling
    So the T.V. talk-shows tell me every night

    I don't mean to complain at all
    But they make you feel like you're two feet tall
    When you're just a wife
    (Just a housewife)
    All they see are the pots and pans
    And the Pepsi cans of a person's life
    (My life)
    You're a "whiz" if you go to work
    But you're just a jerk if you say you won't
    (Just a housewife)
    People say that they think it's fine
    If the choice is mine
    But you know they don't
    What I do, what I choose to do
    May be dumb to you
    But it's not to me
    Is it dumb that they need me there?
    Is it dumb to care?
    Cause I do, you see
    And I mean, Did ya ever think,
    Really stop and think
    What a job it was-
    Doing all the things
    That a housewife does?

    I'm afraid it's unimpressive
    (All I am is someone's mother
    nothing special)
    What I do is
    (What I do is)
    Unexciting
    (Kinda dull)
    Take the kids here,
    Take the kids there
    ("Mommy..."
    I don't mean to complain at all
    (All I am is...
    All I am is...)
    Busy, busy...
    (Everyday
    All I am is...)
    Like my mother...
    (All I am is...)
    Just a housewife

    பதிலளிநீக்கு
  5. எக்ஸலண்ட். நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் மிகச் சரியே. வீட்டில் இருக்கும் பெண்ணின் பங்கை குறைத்து மதிப்பிடுதல் மடமை. பாரதிதாசன் பாடலும் அருமை. ஹோம் எக்ஸிக்யூடிவ்னு துளசி டீச்சர் சொல்லியிருக்கற வார்த்தையும் அருமை. சூப்பர்க்கா.

    பதிலளிநீக்கு
  6. அழகாய் சொல்லியுள்ளீர்கள் தேனம்மை.

    @ துளசி மேடம்,

    ஹோம் மேக்கர் விட ஹோம் எக்ஸிக்யூட்டிவ் நல்லாருக்கே! பகிர்ந்த ஆங்கிலப் பாடல் அருமை.

    பதிலளிநீக்கு
  7. அழகான கட்டுரை. ஒரு house-ஐ 'home'-ஆக மாற்றுவதால், “ஹோம் மேக்கர்”!!

    ‘ஹோம் எக்ஸிக்யூட்டிவ்” கேக்க நல்லாருந்தாலும், பொதுவா எக்ஸிக்யூட்டிவ்களுக்கு தன் கீழ் பணிபுரிபவர்களிடம் வேலையைப் பிரித்துக் கொடுத்து, மேற்பார்வை செய்வது மட்டும்தான் வேலை. நாம அப்படியா என்ன? :-)))))

    பதிலளிநீக்கு
  8. நன்றி தென்றல்

    நன்றி செய்தாலி

    நன்றி மலர்

    நன்றி கந்தசாமி சார்..! :)

    நன்றி துளசி பாட்டு அருமை

    நன்றி கணேஷ்

    நன்றி சாரல்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ஹுசைனம்மா..

    ஆகக்கூடி நாமதான் எல்லாம்..!!! :)

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)