வெள்ளி, 12 அக்டோபர், 2012

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

வாழுங்கள் வாழ்கையை ..
உணருங்கள் அதன் அற்புதத்தை ..

நல்ல நட்பு காதலாக மாறி இன்று இனிமையான இல்லறம் .. எங்களுடைய நட்பு நம்ம பல்லவன் போக்குவரத்து கழகம் இதில் தான் ஆரம்பித்தது.இது தொடர்ந்து ஒரு ஒன்னரை வருடங்கள் நல்ல நடப்பு பயணித்தது...எனக்கு திருமண பேச்சு ஆரம்பித்த சமயத்தில் எங்களுக்குள் ஒரு மாற்றம் ...இதை ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே பகிர்ந்து கொண்டோம் அப்போது எடுத்த முடிவு தான் எங்கள் திருமணம்..


அவர்கள் வீட்டில் அவர் கடைசி ,அதனால் பிரச்சனை ..எனவே நண்பர்களின் உதவியுடன் பாண்டியில் "மணக்குள விநாயகர் கோயில் லில் எங்கள் திருமணம் "ஆடி மாதம் 2ம் தேதி நடந்தது...எங்கள் திருமணம் கலப்பு திருமணம் தான் ..

திருமணம் செய்து உடனே வீட்டிற்கு வரலாம் என நினைத்தால் எங்கள் வீட்டில் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்கள் ..பெண்ணை யாரோ கடத்தி சென்று விட்டனர் என..அதனால் உடனே திரும்ப முடியாத நிலை ..

பாண்டியிலிருந்து திருநெல்வேலிக்கு அவர்கள் நண்பர்கள் வீட்டில் தங்கினோம் ...ஒரு பதினைந்து நாள் கழித்து registration முடித்து பின் சென்னை திரும்பினோம் ..அங்கு நண்பர்களின் உதவியுடன் எங்கள் வாழ்கை பயணம் ஆரம்பித்தது நான் பிறந்து வளர்ந்த ஊரில் ...எங்கள் வீட்டின் அருகே. .

என் கணவரின் வீட்டினரும் ..எங்கள் வீட்டினரும் இல்லாத துணிச்சலான வாழ்கை ...நான் cent govt (chennaitelephones ) பனி புரிந்தேன் ..அவர்கள் டேம்போரவரியாக ஏர்போர்ட் ல வேலை செய்தாங்க ...எனக்கு என் பிள்ளை பிறந்த சமயம்(கேர்ள்) அவருக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்து ..அவரும அதில்; ட்ரைனிங் முடித்து வேலை சேரும் நேரம் நிறைய பிரச்சனைகள் எனக்கு ..துணை யாருமில்லை நான் மட்டும் பிள்ளையுடன்..அவருக்கு சேலத்தில் training ..ரொம்ப கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள் இரண்டு பேறும் எடுத்த முடிவு யாரவது ஒருவர் govt ..வேலையில் இருப்பது என்றும் ஒருவர் தொழில் செய்வோம் என்றும் ..இந்த நிலையில் என் கணவர் நீ வேலையில் இரு நான் எனக்கு பிடித்த photography செய்கிறேன் என்றும் முடிவெடுத்தார் ..

இப்போது எனக்கு ஒரு மகள் அவங்க இன்ஜினியரிங் படிக்கிறாங்க..என் கணவர் photography மற்றும் சினிமாவில சின்ன சின்ன பாத்திரத்தில நடித்து வருகிறார் ..அன்று நாங்கள் சேர்ந்து எடுத்தட முடிவு இன்று எங்களை மிக்க சந்தோஷத்தில் இருக்க வைத்துள்ளது...

காதல் கல்யாணம் செய்வது தவறில்லை ஆனால் விட்டு கொடுத்து வாழணும்,அதில இருக்கிற நிறைவும் சந்தோசமும் எதிலும் இல்லை .காதலியுங்கள் ..காதலிக்கும் போது தெரியும் நிறைகள் கல்யாணத்திற்கு பிறகும் மாறக்கூடாது .. எந்த நிலையிலும் நாம் நாமாக இருபோமே யானால் காதல் கல்யாணம் என்றென்றும் சுகமே ...

டிஸ்கி:- இந்தக் கட்டுரை இவள் புதியவள் காதலர் தின ஸ்பெஷலில் வெளியானது


7 கருத்துகள்:

  1. உண்மைதான்.. நாம் நாமாக இருந்தால் காதலும் திருமணமும் என்றுமே இனிக்கும்..

    நட்புடன் மணிகண்டவேல்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு, இவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் என்னை கவர்ந்துவிட்டது, காதல் என்றால் கலியாணமும், காமமும் என்ற புரிதலே இன்று பலருக்கு உண்டு, அதனையும் தாண்டி வாழ்ந்து, சாதித்துக் காட்ட வேண்டுமே ! இவர்கள் வாழ்வு நிச்சயம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு

    பதிலளிநீக்கு
  4. விட்டுக் கொடுப்பது தான் வாழ்வை மகிழ்வாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை......

    பதிலளிநீக்கு
  5. அருமை... விட்டுக் கொடுத்தால் வாழ்வு மகிழ்வாகவே அமையும்....

    பதிலளிநீக்கு
  6. விட்டுக்கொடுத்தலே நிஜமான காதல் என்பதற்கு எடுத்துக்காட்டு. வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  7. நன்றி மணிகண்டவேல்

    நன்றி தினபதிவு

    நன்றி நண்பேன் டா

    நன்றி இக்பால் செல்வன்

    நன்றி கிருஷ்ணப்ரியா

    நன்றி ஷாமிமன்வர்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)