வியாழன், 11 அக்டோபர், 2012

காதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..

காதலாகி கசிந்துருகி...................

நம்ம ஹீரோவை முதல் முதல்ல சந்திச்சது என் சித்தியின் வீட்டுலதான்............சித்தியின் குடும்ப நண்பர்ங்க என் கணவர்........ பார்த்தோம் பிடிச்சுது பழகினோம் அப்புறமென்ன அப்புறம் கல்யாணம்தான்..............அதிவேக நிகழ்வுங்க.......காதல் பண்ணவும் கல்யாணத்துக்கும் நடுல ஜஸ்ட் நாலே மாசம்தாங்க.... நோ ஃபைட்,நோ டூயட் நோ சேசிங்....... ஆனா அந்த நாலு மாசத்திலயும் ஒரே ரொமான்ஸ்தான்....



நா பொறந்து வளந்தது எல்லாம் திருப்பூருங்க மிஸ்டர் முரளி அலைஸ் பரமேஸ்வரன் அதாங்க நம்மாளு ஊரு கோயமுத்தூரு. முதன் முதல்ல நாங்க திருப்பூர் சிவன்மலைல சந்திச்சுகிட்டோம்ங்க........கோவைல இருந்து என் காதல் கணவன் என்ன பாக்கிரதுக்கு எஸ்.ஆர்.டி பஸ்ல கிளம்பறேன்னு போன் பண்ணாரு.....அப்ப எல்லாம் இந்த கைபேசி வசதி எங்க ரெண்டு பேருக்குமே இல்ல.......

நான் எங்க வீட்டுல இருந்து கிளம்பி போஸ்ட் ஆபிஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்......நடுல பேந்த பேந்த முழிச்சுகிட்டு யாரும் பாத்த்ருவாங்களோன்னு.... வீட்டுக்கு தெரியாம ஃப்ரெண்டு வீட்டுக்கு படிக்க போறேன்னு சொல்லிட்டு வந்தது இல்ல அதான் பயம்....... அவரும் வந்துட்டார்........ரெண்டு பேரும் ரொம்ப ஆர்வமா ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டே பக்கத்துல நெருங்குறோம் வந்துட்டான் வில்லன்..என் ஃப்ரெண்டுதாங்க அவன் பேரு கோதண்டராம்...அவன் இப்போ திருப்பூர் யூனியன் மில் ரோடில் பல் மருத்துவமனை வச்சுருக்கான்.........

என்ன செய்ய அவனுக்கு முரளிய அறிமுகப்படுத்தி வெச்சுட்டு டேய் யாருக்கும் தெரியாது முக்கியமா நம்ம கூட்டத்துக்கு சொல்லிடாதேன்னு கெஞ்சி கூத்தாடி சொன்னேன்.....

அப்புறம் சிவன் மலைக்கு போனோம்......காலையில போயிட்டு ஈவினிங் ஐஞ்சு மணிக்கு கீழே இறங்கினோம்......நாங்க பேசிக்கிட்ட முதல் வார்த்தை சொல்லிகிட்டது ரெண்டுபேரும் ஒரே நேரத்துல ஐ லவ் யூ தான்....அப்புறம் எந்த நடிகர் பிடிக்கும் எந்த பாட்டு பிடிக்கும் இதாங்க......பெருசா ரசிக்கிற மாதி இல்ல பிகாஸ் இது குழந்தை பருவ காதல் மாதி........எனக்கு பத்தொன்பது வயசு அவருக்கு இருபத்தி ரெண்டு வயசு.... நா அப்போ டிப்ளமோ முதல் வருடம் படிச்சுகிட்டு இருந்தேன்..........இவர மீட் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன் வீட்டு வாசல்ல நம்ம ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட்டம்......(ராம்,ஸ்ரீகாந்த்,சபிதா,வித்யா,முரளி மச்சி,செந்தில்)எல்லாரும் என்னய ஒரு மாதி பாக்கிறமாதியே இருந்துச்சு மனசுக்குள் திக்திக்னு ஒரு படபடப்பு எல்லாருக்கும் தெரிஞ்சுருக்குமோன்னு....நானே போயி என் ஃப்ரெண்டு முரளி (ஃப்ரெண்டு முரளின்னு ஒருத்தன் கொழப்பிக்காதீங்க)கிட்ட டேய் ராம் எதாவாது சொன்னானான்னு கேட்டேன்......அவனும் ஆமா லல்லி நீ பெரிய ஆளு அப்பாவி மாதி இருந்தே பயங்கரமான வேலை செஞ்சுருக்கேன்னு என்னை எல்லாரும் சேர்ந்து ஓட்டினாங்க....... நானும் ஆமாண்டா அவரை மீட் பண்ணப்போனேன்னு நடந்ததெல்லாம் வாக்குமூலம் மாதி குடுத்ததுக்கு அப்புறம் பக்கிங்க அப்டியா நாங்க சும்மா உன்னை போட்டு வாங்கினோம்னு ஊரக்கூட்டி சிரிச்சுதுங்க.

இவரு எனக்கு தெனமும் லெட்டர் போடுவாருங்க கொரியர்லதான் .......காலையில போட்டா நெக்ஸ்ட் நாள் காலையில வரும் ஒடனே பதில நா போடுவேன் இந்த மாதி தொடர்ந்து....ரெண்டுபேரும் உருகி உருகி எழுதிப்போம் :)) ஒரு க்ரீட்டிங் கார்டும் ஒரு ஃபைவ்ஸ்டார் சாக்லேட்டும் வச்சு அனுப்புவாரு.....இதுல ஒரு கொடுமை லெட்டரும் கார்டும்தாங்க எனக்கு கிடைக்கும்..நா சொன்னனே என் ஃப்ரெண்ட்ஸ்ங்க அதுங்க எடுத்து மொக்குங்க..........குடுக்காட்டி லெட்டரை தரமாட்டோம்னு பிடுங்கிக்குங்க.....கொரியர்காரன் வரதுக்கு முன்னாடியே என் வீட்டு முன்னாடி ரவுண்டு கட்டி நிக்குங்க.....பட் என் உலகமே என் ஃப்ரெண்ட்ஸ்தாங்க..........(சபிதா,ஸ்ரீகாந்த்,முரளிமச்சி, ராம், ரமேஷ், திலீப், சத்யா, வித்யா, காயூ, ஸ்ரீதேவி, ஷ்யாம், ஆனந்த், ஜோதி, சிவக்குமார், கால்னி செந்தில், ராணி, மயூர்) எனக்கு முன்னாடி கொரியர்காரன்கிட்ட நிப்பாங்க:))........

மொத்தமாவே நாலுதடவைதாங்க மீட் பண்ணோம்.........எல்லாமே லெட்டர்ஸ்தான்.........ஒரு முறை எனக்கு ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிசன் எக்ஸாம்...... அதுக்கு நா கோவைல கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல எழுத வந்தேன்..........அப்டின்னு வீட்டுல சொல்லிட்டு ஹால் டிக்கெட்ட கிழிச்சு போட்டுட்டேன்...... அவரும் ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டு வந்தாரு.......ரெண்டு பேரும் அந்த காலேஜ்ல க்ரவுண்ட்லயே மொக்கைய போட்டோம் வெளில சுத்த பயம்......கரெக்ட்டா சாயந்திரம் கே.ஜி. அண்ணாபூர்ல டிஃபன் சாப்பிட்டு காபிய குடிச்சுட்டு என்னய பஸ் ஏத்தி விட்டாரு.

அதுல பாருங்க அங்க என் ஃப்ரெண்டும் எழுத வந்துருக்கா..........வீட்டுக்கு நா போறதுக்கு முன்னால ஆப்பு முன்னாடி நிக்குது எனக்கு...எக்சாம் எழுத வந்த என் ஃப்ரெண்டு நா ஏன் வரலன்னு விசாரிக்க என் வீட்டு க்கு வந்துருக்கா வந்தவ வாய மூடிகிட்டு இருக்காம எங்க அன்ணன்கிட்ட கேட்டுபுட்டா...... அப்புறமென்ன நீங்க நினைக்கிற மாதி சண்டை அடி தடி வெட்டு குத்து வீட்டுலயே சிறை எதுவும் இல்ல......பரபரப்பா அவங்க குடும்பத்த விசாரிச்சாங்க வேலய பத்தி விசாரிச்சாங்க.... அவ்ளோதாங்க ....ஒரு அளவுக்கு மேல எழுத முடியாதுங்க சில விஷயமெல்லாம்.....அடிக்கடி எங்களுக்குமட்டுமே இருக்கிற நேரத்தில பேசிக்கவும் ரசிக்கவும் வேண்டியவைகள்...... நவம்பர் ல எங்க கல்யாணம் நடந்துச்சு...........கிட்டத்தட்ட 20 வருஷம் முடிஞ்சுது.....ஆனா ஒன்னுங்க இப்பவும் முதல்ல எப்படி இருந்தமோ அதே அன்பும்,காதலும்,எல்லாமே இருக்கு குறையாம இருக்கு... சண்டையும் வரும் ஆனா வந்த சுவடே தெரியாம போயிடும்........

நல்ல காதலனாகவும்,கணவனாகவும் முரளி எனக்கு கிடைச்சதுக்கு நா ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கேன்......காதலனே கணவனாகிறது ஒரு பெரிய மேட்டரே இல்லங்க......... காதலாகிய கணவன் நண்பனா இருக்கிறதுதான் பெரிய விஷயம் .... எங்களுக்கு அழகே உருவாய் இரு தேவதைகள் என் வீட்டு இளவரசிகளாய்

டிஸ்கி:- இவள் புதியவள் காதலர் தின ஸ்பெஷலில் வெளிவந்த பகிர்வு இது.:) லலிதா ..ஒரு அற்புதமான எழுத்தாற்றல் இருக்கிறது உன்னிடம்.. இன்னும் நிறைய எழுது..:)


6 கருத்துகள்:

  1. அவரு தான் இவரா !

    அப்பாவி யா போஸ் கொடுக்கிறாரே !!
    ஒரு வேளை
    உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே அப்படின்னு பாடியிருப்பாரே அத நினைச்சுக்கினு இருக்காரோ என்று
    என் மேனகையைக் கேட்டேன்.

    அதெல்லாம் சும்மா .. இது தான் பாடியிருப்பாங்க.. அப்படிங்குது எங்க வூட்டுக்கிழம்.

    http://youtu.be/z_bn2cJENa4

    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. டிஸ்கி-க்கு முன் சொன்னீர்களே... அது தான் முக்கியம்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வலைப்பூவரசிக்கு வாழ்த்துகக்ள்!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள்....

    எனது நினைவுகளை கிண்டிவிட்ட பதிவு... :)

    பதிலளிநீக்கு
  5. நன்றி சுப்பு

    நன்றி தனபால்

    நன்றி ஸாதிகா..:)

    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)