செவ்வாய், 25 செப்டம்பர், 2012

வள்ளல்.

வேலை செய்பவளுக்கு
முதல் தேதியே சம்பளம்..
பிச்சை கேட்பவனுக்கு
ஒற்றை ரூபாய்.
அநாதை ஆசிரமத்துக்கு
பழைய துணிகள்.
உறவினர் குழந்தையின்
கல்விச் செலவில் ஒரு பங்கு

திருமண மாலைக்காய்
காத்திருப்பவளுக்கு
ஒற்றை ஐநூறு
கருணையும் ஈரமும்
உள்ளவளாக நினைக்க
வைத்துச் செல்கிறது
இத்தருணங்கள்..

சந்தர்ப்பம் இருந்தும்
செய்ய மனமிருந்தும்
கூட இருக்கும் யாரோவின்
விருப்பமின்மையாலோ
விரும்பியும் செயல்படுத்த
முடியா சோம்பலாலோ
என்றோ இவைஎல்லாம்
அல்லது இவற்றில் ஒன்றை
மறுக்க நேரும்போது
ஈரம் அற்றுவிட்டதோ
எனும் கேள்வி
அறுத்துச் செல்கிறது
மனசாட்சி என்னும் பெயரில்..
பர்சில் இருக்கும் பணம் சிரிக்கிறது
சந்தர்ப்ப வள்ளலைப் பார்த்து.

டிஸ்கி:- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளிவந்தது

7 கருத்துகள்:

  1. சகோதரி தங்களுடைய கவிதை அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  2. சகோதரி தங்களுடைய கவிதை அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாரல்

    நன்றி குணா

    நன்றி சரவணன்

    நன்றி தனபால்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)