செவ்வாய், 25 செப்டம்பர், 2012

”சாதனை அரசிகளு”ம், ”ங்கா”வும் மயிலாடுதுறையில்.

”சாதனை அரசிகள்” மற்றும் ”ங்கா” புத்தகங்கள் நன்கு விற்பனை ஆகி வருகின்றன. சாதனை அரசிகள் புத்தகம் வெளிவரும் முன்பே சகோதரர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அதன் முழு விநியோக உரிமை - டிஸ்கவரி புக் பேலஸ் என்று போட்டு வெளியிடவேண்டுமென்று சொன்னார்.


அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றவர்களே அதன் பாதிக்கும் மேலான பிரதிகளை அடிப்படை விலைக்கே பெற்றுக் கொண்டார்கள். முதன் முதல் புத்தகம் வெளியிடுகின்றோமே என்ற அச்சம் என்னை விட்டு அகல அவர்களும் ஒரு காரணம். ஒருவர் 125 புத்தகங்களும், இன்னும் அறுவர் தலா 50 புத்தகங்களும் இன்னும் சிலர் 10, 20 புத்தகங்களும் வாங்கிக் கொண்டார்கள். கிட்டத்தட்ட 700 பிரதிகள் வரை விற்பனையாகியும், பத்ரிக்கைகள் மற்றும் நண்பர்கள் மற்றும் புத்தகங்களில் இடம் பெற்றவர்களுக்கும் கொடுத்தபின் 250 இல் இருந்து 300 காப்பிகளே மிச்சம். புத்தகம் வாங்கியோருக்கு நன்றி.

திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரியில் இருந்தும், புதுக்கோட்டை ஜே ஜே கல்லூரியில் இருந்தும் திருச்சி தினமலர் பதிப்பில் இந்த மகளிர் தினத்தன்று வந்த விமர்சனம் பார்த்து புத்தகத்தின் மாதிரிப் படிவங்கள் அனுப்பக் கோரி இருந்தார்கள். அனுப்பி இருக்கிறேன்.அவர்களுக்கும் நன்றி.

மேலும் என் முகநூல் நண்பர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். புத்தகம் வெளியிடப்பட்ட அன்றே 100 காப்பிகள் வரை விற்பனை ஆகின. என் அழைப்பை ஏற்று அங்கு வந்து புத்தகம் வாங்கி என் சந்தோஷத்தைத் தங்கள் சந்தோஷமாகக் கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஸ்பெஷலாக பொன் பிரபாகருக்கும் கோபால் கண்ணனுக்கும் நன்றி.

இன்னும் சிலரை நான் ஸ்பெஷலாக குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த உதயன். அவர் கரூர் பள்ளி ஒன்றுக்காக 50 பிரதிகள் வாங்கிக்கொண்டார்.

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் முடிவு நாளன்று போட்டியில் பரிசு பெற்றோருக்கும் சிறப்பு விருந்தினருக்கும் என்னுடைய நூல் வழங்கப்பட்டது. 30 புத்தகங்கள் வாங்கிக் கொண்டார்கள். லயன் திரு. வெங்கடாசலம் ( செகரெட்டரி) அவர்களுக்கும் நன்றி.

அஹமதாபாத்தில் வசிக்கும் நண்பர்  5 சாதனை அரசிகள் புத்தகங்களும், 10 இங்கா புத்தகங்களும் வாங்கி அங்கு தமிழ் பயிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

இன் அண்ட் அவுட் சென்னை பத்திரிக்கையின் எடிட்டர் விஜய் புத்தகம்வெளியிட்ட அன்றே 10 பிரதிகள் வாங்கினார்.

சௌதியில் இருந்து சகோ அப்துல் ரஹீம் 5 இங்கா புத்தகமும், 5 சாதனை அரசிகளும் வாங்கி நூலகங்களுக்குக் கொடுத்தார்கள். கொடுக்கும் பொறுப்பை வேடியப்பன் அவர்களிடமே விட்டு விட்டார்கள்.

வேடியப்பன் அவர்களும் அந்த புத்தகங்களை முறையே

1. சிலோனில் ஃபாதர் விஜயேந்திரன் என்பவர் ஒரு நூலகத்துக்காக புத்தகங்கள் வாங்கவந்தபோது ஒன்று கொடுத்திருக்கிறார்.

2. நடிகர் நாசர் அவர்கள் செங்கல்பட்டு கிராமம் ஒன்றின் நூலகத்துக்கு நிறைய புத்தகங்கள் வாங்கியபோது ஒன்று கொடுத்திருக்கிறார்.

3. திருவண்ணாமலையில் உள்ள குக்கு லைப்ரரிக்கு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

4. அசோக் நகர் நூலகத்துக்கு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

5. கே.கே. நகர் கிளை நூலகத்துக்கு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

சகோ அப்துல் ரஹீமுக்கும் நன்றி.

இன்னும் நான் பேச அழைக்கப்படும் பள்ளிகள் , கல்லூரிகளிலும் என் நூல்களை நூலகங்களுக்கு வழங்கி வருகிறேன்.

 ”ங்கா” அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. நன்றிதாமோதர் அண்ணன் அவர்களுக்கு.

என்னை ஊக்குவித்துவரும் முகநூல் நண்பர்களுக்கும், சகோ வேடியப்பனுக்கும் நன்றி.

என்னுடைய புத்தகங்கள் எல்லா புத்தகத் திருவிழாக்களிலும் இடம் பெறுகின்றன. சகோ வேடியப்பன் இந்தப் பொறுப்பைச் செவ்வனே ஏற்று அனைத்து இடங்களிலும் கிடைக்குமாறு  செய்து வருகிறார்.

என்னுடைய புத்தகங்கள் கிடைக்குமிடம்:-

1. டிஸ்கவரி புத்தக நிலையம், சென்னை,

2. மீனாக்ஷி புத்தக நிலையம் ,மதுரை,

3. விஜயா பதிப்பகம் , கோவை,

4. வம்சி புத்தக நிலையம் , திருவண்ணாமலை.

டிஸ்கி:- இப்போது நடந்து கொண்டிருக்கும் மயிலாடுதுறை ( ரோட்டரி ஸ்கூலில் நடக்கும் )புத்தகத்திருவிழாவில் டிஸ்கவரி புத்தக நிலையத்தின் ஒன்றாம் எண் ஸ்டாலில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கின்றன. புத்தங்கள் வாங்கிப் படித்தும் நூலகங்களுக்கு வழங்கியும் ஊக்குவித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.  வாழ்க வளமுடன், நலமுடன்.!!!

5 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் தேனம்மை லக்ஷ்மனன் அவர்களே. வாழ்க வளமுடன், வளர்க திறமுடன்.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் பல சிகரங்களை எட்ட மென்மேலும் வாழ்த்துகள் தேனக்கா..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தேனம்மை - இன்னும் பல புத்தக்ங்கள் வெளி வர - வெற்றிகரமாக வெளி வர - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. நன்றி அமர பாரதி

    நன்றி சாரல்

    நன்றி சீனா சார்/

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)