செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வயது ஒரு தடையல்ல..

”மங்களா சிமிண்ட் 100 வாங்கிரு..அப்புறம் கேவீபீ என்ன ஆச்சு.. இன்னைக்கு ஏறுமா.. வைச்சுக்குவோமா வித்திருவோமா..” என்ற குரலுக்குச் சொந்தக்காரர் .. 65 வயதான முத்துக் கருப்பாயி ஆச்சி.. இது பங்குச்சந்தையில் அவர் முதலீடு செய்து ஏறினால் விற்பது.. இறங்கினால் வைத்துக் கொள்வது என்ற பாலிசியில் செய்யும் பங்கு வர்த்தகம்.

எந்த வயதானால் என்ன .. வட்டித்தொழில்., பங்குச்சந்தை என்பது எல்லாம் ரத்தத்திலேயே ஊறி இருக்க வேண்டும்.. இது ரிஸ்கானதாச்சே .. அதை செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்..


பங்குகள் ஏற்றத்தை தினம் NDTV ., CNBC இல் பார்த்து அவ்வபோது ஃபோன் மூலமாக ஆர்டர் கொடுத்து வாங்கி விற்பது.. இதை திறம்படச் செய்து வருகிறார்..போன சில வருடங்களில் நல்ல விலையில் வாங்கிய பங்குகள் இறங்கிய போதும் இற்று விடவில்லை இவர்கள்..பங்குகளை அப்படியே வைத்து அடுத்த ஆண்டுகளில் ஏற்றம் வந்த போது விற்றுப் பணம் பார்த்தார்கள்.. இதுதான் சிறந்த முதலீடு..

இதில் மட்டுமல்ல இவர்கள் ஆன்மீகத்திலும் சிறந்த முதலீட்டாளர்.. நகரத்தார் வழக்கப்படி ( குறிப்பிட்ட வயதில் வானப் ப்ரஸ்தம் ஏகுவது போல் ) உபதேசம் கேட்பது என்பது ஒரு தர்மம் இருக்கிறது.. அதன் படி உபதேசம் கேட்டவர்கள் தினமும் காலையில் நீராடி., இறையருள் வேண்டி மந்திரம் சொல்லி விபூதி தரிப்பார்கள் .. அதன் பின்தான் உணவு எல்லாம்.

கை வேலைகள்., பின்னல்., உடைகளில் அலங்காரம் செய்வது., மணப்பெண் அலங்காரம் செய்வது., மருதாணி இடுவது ., கோல மாவுகளில் பொம்மைகள் செய்வது மற்றும் மயில் யானை பறவைகள் போன்றவற்றையும் கோலங்களில் ரங்கோலியாக வரைவார்கள் .. சமையலும் நளபாகம்தான்.

தோட்டத்தில் வேறு ஆர்வம் அதிகம் .. பலா மரம்., வாழை., கொய்யா., சீதாப்பழம்., மாதுளை., பூக்கள்., கருவேப்பிலை ., பிரண்டை., வல்லாரை., புதினா., சுண்டை, ., பப்பாளி என மருத்துவச்செடிகளும் மரங்களும் வளர்த்து விடு வரும் அனைவருக்கும் காய் கனி., பூ கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

காரைக்குடியில் ”திருவாசகம் முற்றோதல்” என்ற குழுவாக செயல் பட்டு திருவாசகத்தை விரும்புபவர் இல்லங்கள் .,கோயில்கள் ., திருமணம் செய்பவர் அல்லது புதுமனை புகுவோர் வேண்டிக்கொண்டால் அவர்கள் இல்லங்களில் சென்று காலையில் தொடங்கி மாலை வரை ஒவ்வொரு பாடலுக்கும் முடிவில் ஆரத்தி செய்து பூமாரி பொழிந்து முழுமையாக அனைத்துப் பாடல்களையும் பாடி இறையருள் வழங்கி வருவார்கள்..

இது மட்டுமல்ல ஊரில் கோயில் திருவிழாக்கள்., கும்பாபிஷேகங்கள்., சிரமப்படும் மாணாக்கருக்கு கல்வி உதவி., ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி., பிரசவ செலவு உதவி என அனைத்தும் வழங்குவார்கள்..

இது எல்லாரும் செய்வதுதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவர்களைப் பற்றித் தெரிந்தால் நீங்களும் என்னோடு சேர்ந்து பாராட்டுவீர்கள்.. சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது டான்சில்லால் சிரமம் ஏற்பட்ட போது செய்த ஆப்பரேஷன் காது நரம்புகளைப் பாதித்து கேட்கும் திறனில் குறைவு ஏற்பட்டது.. அதன் பிறகு காதுக்கு இரண்டு முறை ஆப்பரேஷன் செய்து சரிவரவில்லை.. அதனால் எல்லாம் குறைவுமில்லாமல் தன்னம்பிக்கையோடு செயல் படுவார்கள்..

பேச்சும் சொல்லும் அழுத்தம் திருத்தமாக இருக்கும்.. தன்னைத் தாழ்வாக எப்போதுமே எடை போட்டதில்லை.. எப்போதும் கம்பீரம்தான்.. காது கேட்கும் கருவியை பொருத்தியபின் இன்னும் தன்னம்பிக்கை அதிகமாகி விட்டது..

கவிதை எழுதும் ஆற்றல் அதிகமாக இருப்பதால் இறைவன் துதிப்பாடல்கள்., மரபுக்கவிதைகள்., திருமண வாழ்த்துப்பாக்கள் எழுதுவார்கள்..

தற்போது லாப்டாப் ஒன்று வாங்கி வலைத்தளம் தொடங்கி இருக்கிறார்கள்.. சும்மாவின் அம்மா என்பது அதன் பெயர்..:) தற்போது முகப்புத்தகத்திலும் புகுந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.. கூடிய விரைவில் இவர்களின் கவிதைகளை தொகுப்பாக நீங்கள் எதிர்பார்க்கலாம்..

எல்லாம் நன்றாக அமைந்தவர் இவர் .. இன்னும் தன் குறையைக்கூட பொருட்படுத்தாமல் ., முடங்கிப் போய் விடாமல் எல்லாவற்றையும் நன்றாக அமைத்துக்கொண்டவர்.. என்பது தகும்..

டிஸ்கி:- சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம் பிடித்த 17 ஆவது சாதனையாளர் இவர். 

7 கருத்துகள்:

  1. நூலில் வாசித்திருக்கிறேன். சும்மாவின் அம்மாவுக்கு என் அன்பான வணக்கங்கள்:)!

    பதிலளிநீக்கு
  2. சாதனை அரசிக்கு வாழ்த்துக்கள்.
    சும்மாவின் அம்மவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தேனம்மை!
    தன் குறையையும் மீறி சாதிக்கும் திருமதி முத்துக் கருப்பாயி ஆச்சி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
    60 வயதை எட்டிப் பிடிக்கப் போகும் நானும், 80 வயதான காமாட்சி அம்மாளும் 25.9.2012 அவள் விகடன் இதழில் அறிமுகம் ஆகி இருக்கிறோம்.
    என் வலைத்தளம்:
    ranjaninarayanan.wordpress.com
    திருமதி காமாட்சி அம்மா chollukireen.wordpress.com -இல் எழுதிவருகிறார்.

    உங்கள் கட்டுரை எங்களைப்போன்றவர்களுக்கு உற்சாக தேநீர்!

    பதிலளிநீக்கு
  4. ஆச்சியின் சுறுசுறுப்பில் ,புத்தி பக்குவத்தில்,ஒரு சுண்டைக்காயளவு,
    ஆசீர்வதித்தாலே ,நாம் விளங்கிவிடுவோம் போலிருக்கே ..நன்றி தேனம்மை..
    அவர்களிடம் என் வணக்கங்களைப் பகிரவும்

    பதிலளிநீக்கு
  5. ரஞ்சனிம்மா ,உங்க வலைப்பூவின் பிளாஸ்டிக் குறித்த ஆக்கத்தை முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்
    நீங்கள் எல்லாம் எங்களுக்கு அருமையான வழிகாட்டிகள் !

    பதிலளிநீக்கு
  6. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி கோமதி அரசு

    நன்றி ரஞ்சனி அவர்களே..

    நன்றி சக்தி

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)