திங்கள், 10 செப்டம்பர், 2012

மல்லிகை மகளில் உலா வரும் முத்தம்..

காலையில் அலுவலகம்
செல்லுமுன்
வாயிலின் பின்புறம்
கணவன் ஒரு முத்தத்தை
மனைவிக்குப் பரிசளித்துச் செல்கிறார்.


மனைவி மதியத்தில்
வீடு வரும் குழந்தைகளுக்கு
சாப்பாட்டு மேசையில்
உணவோடு முத்தத்தைப்
பகிர்ந்தளிக்கிறாள்.

மாலைநேரப் பூங்காவில்
சறுக்கு மரம் வழுக்கியதும்
கைபிடித்த பாட்டிக்கு
இரட்டை முத்தங்களைக்
குழந்தைகள் பங்களிக்கின்றன.

இரவு படுக்குமுன்
ஞாபகமாய் மருந்தோடு
அந்த முத்தங்களையும்
பாட்டி தாத்தாவுக்கு
அணைத்துப் போர்த்துகிறாள்.

களைத்துத் தூங்கும் முத்தம்
தினம் விடியலுக்காய்
காத்திருக்கிறது அந்தவீட்டின்
வாயில் கதவோரம்
அடுத்த சுற்று உலா வர..

டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 2011 மல்லிகை மகளில் வெளிவந்துள்ளது.


4 கருத்துகள்:

  1. சிறு பிள்ளையின் முத்தம் போல் தித்திப்பாக இருக்கிறது கவிதை, வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)