சனி, 9 ஜூன், 2012

இரண்டு மட்டுமே..

இரண்டு மட்டுமே
இருந்தது என நம்புகிறேன்.
 இரண்டில் பலகூடி இருந்தாலும்..

இரண்டாக மட்டுமே
நம்புகிறாய் ஒன்றாக
இருந்தாலும்.

இரண்டும் ஒன்றாவதில்லை
வெவ்வேறு கூறுகளின்
கூட்டணியோடு.


வயிற்றையும்
வாயையும் பிரிக்கிறேன்.
இரண்டாக.

மூளையையும்
இதயத்தையும் பிரிக்கிறாய்
இன்னும் இரண்டாக.

இரட்டைக் கிளவி
இரட்டைப் பிறவி
இரட்டுற மொழிதல்

இரட்டித்துக் கிடப்பவை
இரண்டும் ஒன்றென
நம்பமுயல்கிறேன்.

இருந்தும் எல்லாம்
இரண்டுதான் எப்போதும்
ஒன்றல்ல.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2011, நவம்பர் முதல் வார உயிரோசையில் வெளிவந்தது.

4 கருத்துகள்:

  1. வாசிக்கும் போதே ரசிக்கவும் வியக்கவும் வைப்பதில் தங்களது கவிதைக்கென்று ஒரு தனித்துவம் உண்டு., அதை இந்த கவிதையில் சற்று அதிகமாய் உணர்கிறேன் ..!

    பதிலளிநீக்கு
  2. இரண்டு பார்வைக்கு மட்டுமே அக்கா.இரண்டும் ஒன்றுதான் !

    பதிலளிநீக்கு
  3. நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)