வெள்ளி, 8 ஜூன், 2012

ஓவியக் காரிகைகள்


ஓவியக் காரிகைகள்.:-
************************

 மீனாக்ஷி மதன் அனுராதா நிகேத்.. இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கும் பெண் ஓவியர்கள். தங்கள் கைவண்ணங்களால் மனம் கவரும் ஓவியங்களைப் படைத்து உலவவிடுவதில் பெண் பிரம்மாக்கள். இதில் மீனாக்ஷி மதன் பூக்களை ஸ்பெஷலாக வரைகிறார். அனுராதா நிகேதின் ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை ஓவியங்கள்.


மீனாக்ஷி மதனின் ஓவியக் கூடத்தின் பெயர் HUES OF HEART STUDIO. இதயம் மீட்டும் வண்ணம் தீட்டுவதால் இந்தப் பெயர். இதில் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி தருகிறார். போஸ்டல் கலர்ஸ், பென்சில் ஸ்கெட்சஸ்., போன்றவற்றில் பயிற்சி அளிக்கிறார். தஞ்சாவூர் பெயிண்டிங்க்ஸ். சிறப்பாக இருக்கிறது.

இவர்கள் இருவரும் இணைந்து போன வருடம் ஆகஸ்ட் இல் அம்பாசிடர் பல்லவா ஹோட்டலில் வண்ணமும் வாசமும் என்ற தலைப்பில் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள். மீனாக்ஷி மதன். தன்னுடைய படங்களில் பூக்களையே தேர்வு செய்கிறார். அவர் வரைந்ததில் அவருக்குப் பிடித்தது அனிச்ச மலரின் ஓவியம் . கிட்டத்தட்ட 25 நாளில் 33 படங்களை வரைந்திருந்தார். அவரின் இன்னொரு படம் IHI .. பேல் விவாஹ் எனப்படும் இந்தப்படமும் ஸ்பெஷலான ஒன்று. நேபாளில் மேவார் வம்சத்தில் பெண்களுக்கு முதலில் வில்வமரத்துடன் பால்யத் திருமணம் நடைபெறும். அதன் பின்தான் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.

இந்த வருடம் பிப்ரவரியில் 4-10 வரை ஆழ்வார் பேட்டை ,எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ பார்வதி ஆர்ட் காலரியில் FIGMENT POTPOURI என்ற தலைப்பில் ஒரு ஓவியக் கண்கட்சியை மீனாக்ஷி மதன், அனுராதா நிகேத், பாலு, மீரா, உதய் சங்கர், லிம்கா சுப்பு ஆகியோர் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்கள். அதில் மீனாக்ஷி மதனின் ஒரு ஓவியம் ஆளுயரமும் தாண்டியது. நடிகை ரோஹிணி குத்து விளக்கேற்றித் துவங்கி வைத்தார். நடிகர் பார்த்திபன் ஒருநாள் அங்கே விசிட் செய்து 3 மணி நேரம் அவர்கள் ஓவியங்களைப் பார்த்து பாராட்டி சில ஓவியங்களையும் வாங்கிச் சென்றுள்ளார்.

மீனாக்ஷி மதனின் அம்மா அவருக்கு வரையும் திறன் இருப்பதைக் கண்டுபிடித்து வரைய ஊக்குவித்தாராம். எனவே உங்க குழந்தைகளும் சுவற்றில் தரையில் வரைந்தால் கிறுக்காதே என கோபிக்காமல் அவருள் ஒரு ஓவியர் இருப்பதை இனம் கண்டு ஊக்குவியுங்கள். பின்னாளில் இவர்களைப் போல பேர் சொல்லும் ஓவியர்களாகலாம்.

 டிஸ்கி:-. இந்த அறிமுகம் பிஃப் 15 - 29 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.


3 கருத்துகள்:

  1. //உங்க குழந்தைகளும் சுவற்றில் தரையில் வரைந்தால் கிறுக்காதே என கோபிக்காமல் அவருள் ஒரு ஓவியர் இருப்பதை இனம் கண்டு ஊக்குவியுங்கள். பின்னாளில் இவர்களைப் போல பேர் சொல்லும் ஓவியர்களாகலாம்.//

    உண்மைதான் தேனக்கா..

    அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஓவியக் காரிகையர் குழைத்தத் தூரிகைவண்ணம் அசத்தல். செழித்தோங்கட்டும் அவர்களது திறமைகள். பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சாரல்

    நன்றி கீதமஞ்சரி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)