வெள்ளி, 16 மார்ச், 2012

மூட மறந்த பக்கங்கள்.. உயிரோசையில் ..

ஒரு கதவு சட்டென மூட
இன்னொரு ஜன்னல் திறக்க
அடைபட்டுக் கிடந்த காற்று
விரைந்து தப்பித்து ஓட

அசையும் அசையா
சொத்துக்களுக்கெல்லாம்
வாரிசுகள் கையெழுத்திட்டு
சான்றிதழ்கள் சாட்சியோடு


உடைத்து விற்று.
பங்கு போட்டு
உருவி எடுத்து
உலைத்துச் சென்றபின்

மிச்சமாகக் கிடக்கிறது
இணையத்தில்
தொடங்கிய முகப்புத்தகம்
வீட்டுக்காரனற்று..

யார்யாரோ தேடிவந்து
எழுதிப் போக
கடவுச்சொல் இழந்த
ஒற்றைச் சுவரும்

காணவில்லையே
என்று தேடித்தேடி
பக்கம் பக்கமாய் அலையும்
இதயங்களும் சேர்த்து

இதையாவது சம்பாதித்தோமென
மறுஜென்மமாய்
அவ்வப்போது உயிர்த்தெழுகிறது
மூட மறந்த பக்கங்கள்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 மே முதல் வார உயிரோசையில் வெளிவந்தது.

8 கருத்துகள்:

  1. இதையாவது சம்பாதித்தோனே என நானும் சில சமயங்களில் ஆறுதல் பட்டுக் கொண்டதுண்டு. மனரை உரசிச் சென்ற கவிதை. பிரமாதம் அக்கா...

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சை தொட்ட வரிகள்

    அருமையான கவிதை தோழி

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சை தொட்ட வரிகள்

    அருமையான கவிதை தோழி

    பதிலளிநீக்கு
  4. //இதையாவது சம்பாதித்தோமென
    மறுஜென்மமாய்
    அவ்வப்போது உயிர்த்தெழுகிறது
    மூட மறந்த பக்கங்கள்..//

    அருமை தேனக்கா.. உயிர்ப்பிக்கப் படுவதால்தான் நாமும் அவ்வப்போது உயிர்த்தெழுகிறோமோ :-))

    பதிலளிநீக்கு
  5. மனம் நெகிழ்த்திய வரிகள். பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  7. நன்றி கணேஷ்

    நன்றி செய்தாலி

    நன்றி சாந்தி

    நன்றி கீதமஞ்சரி

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)