சனி, 17 மார்ச், 2012

10 குறுங்கவிதைகள்.. திண்ணையில்.

கண்வழி நுழைந்தாய்..
உறுத்தல் அதிகம்தான்..
கண்ணீராய் வெளியேறினாய்..

******************************************************

முதுகில் இருக்கும் ஓடு
அவ்வப்போது ஒளிந்துகொள்ள..
சுமையாய் இருந்தாலும்
சுமைகள் ஏறாமலிருக்க ..
******************************************************


உலாவிகளில் உலாவி
நான் உன்னிடத்திலும்
நீ என்னிடத்திலும்..
யதாஸ்தானம் அடைந்தபின்
விரும்பிய விருப்பங்களில்
தெரிந்தது தேடியலைந்தது..

****************************************************


குடும்ப ஓடுகளை உடைத்து
வெளிவந்தேன்
நட்பு ஓடுகளை சுமக்க அல்ல..

****************************************************

மலை இருட்டில் உதைத்து
பாதாளத்தில் விழுந்தேன்
நல்ல வேளை .. கனவு..
தாய்வயிற்றுக்குள்.
மீண்டெழுந்தேன்..

***********************************************

இலைச் சிறகுகளை
அசைத்துப் பறக்கிறது
மரம்..

**********************************************

முட்களும்., கொம்புகளும்
கவசத்தை தேர்ந்தெடுக்கின்றன
ஒளியப் பிடித்தபடி பின்னே நான்..

*********************************************

குத்தினாய்..
கிளறினாய்..
தோண்டினாய்..

காய்ந்து போய்
எண்ண விதைகளால்
என்னை மூடினேன்..

மழையும்
வெய்யிலும்
தங்களைத் தெளித்துப் போக

வேர்பிடித்து விளைந்து
வெடித்திருக்கும் என்னை
இனிய கனி என்கிறாய்..

***************************************************

விரைவில் சந்திப்போம்
என்று கூறி
விடை பெற்றுக் கொண்டிருப்பாய்..

****************************************************

பழுத்துக் கொண்டிருந்தாலும்
பயணப்பட்டுக் கொண்டிருப்போம்
பழுதாகி தேங்காமல்..

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் ஏப்ரல் 30 2011 திண்ணையில் வெளிவந்தவை.

9 கருத்துகள்:

  1. எதைச் சொல்ல... எதை விட? ஒன்றையொன்று மிஞ்சுகிறதே தேனக்கா... அருமை!

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்
    அருமையான கவிதைகள்
    கவிக் குயிலுக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பழுத்துக் கொண்டிருந்தாலும்
    பயணப்பட்டுக் கொண்டிருப்போம்
    பழுதாகி தேங்காமல்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தினமணி "சிவப்புப் பட்டுக் கயிறு'க்கு வாழ்த்துகள். ஆயிரம் ரூபாயை செலவழித்து விட்டீர்களா...! :))

    பதிலளிநீக்கு
  5. அனைத்துமே அருமை.
    // இலைச் சிறகுகளை
    அசைத்துப் பறக்கிறது
    மரம்.. //
    அழகிய கற்பனை.

    பதிலளிநீக்கு
  6. நன்றி கணேஷ்

    நன்றி ஆசியா

    நன்றி செய்தாலி

    நன்றி தீபிகா

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி சாந்தி

    நன்றி பாலன்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)