புதன், 29 பிப்ரவரி, 2012

ஃப்ளாட் வாங்குவது புத்திசாலித்தனமா..? ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடெண்ட் அருண் குமாரின் ஆலோசனை.


இன்றைய மத்தியதரக் குடும்பத்தின் ஆசைக் கனவுகளில் ஒன்று சொந்த வீடு.. இந்த சொந்த வீடு என்பது இன்றைக்கு இருக்கும் இட விலை உயர்வு., உயர்ந்து வரும் கட்டுமானப்பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு பொறுத்து நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. செலவைக் கட்டுப்படுத்திப் புறநகரிலோ. அல்லது சிறுநகரங்களிலோ இடம் மற்றும் வீடு அல்லது ஃப்ளாட்டுக்களில் முதலீடு செய்ய நினைக்கும்போது இந்த முன்னெச்சரிக்கைகளைப் படித்துவிட்டு முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்நாளுக்கான கனவு இல்லமோ., எக்கனாமிக் ஃஃப்ளாட்டோ., எதாகயிருந்தாலும் தேர்ந்து செய்யும் முதலீடு உங்கள் பிற்கால வாழ்க்கைக்கான சேமிப்பாகும்.


சிறு முதலீடுகள் என்றால்., வங்கி சேமிப்பு., பங்குச்சந்தை., அஞ்சலகம்., ம்யூச்சுவல் பண்டுகள்., இன்சூரன்சுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். தற்போது கையில் நிறைய பணம் இருந்தால் இடம் அல்லது சொந்த வீடு., இவற்றில் முதலீடு செய்வது லாபகரமானது.

இந்தியாவின் மிகப் பிரபல நிறுவனமான ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடண்ட் அருண் அவர்களைத் தொடர்பு கொண்டு சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இடம் ., மனை., வீடு., ஃப்ளாட் வாங்குவது குறித்து ஆலோ்சனை வழங்குமாறு கேட்டோம். ஹனு ரெட்டி ரியால்டர்ஸ்க்கு சென்னை மற்றும் பெங்களூரு., கோவை., பூனே., ஹைதராபாத்., மைசூர்., விசாக்., கலிஃபோர்னியா., ஆகிய இடங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன.

ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடண்ட் அருண் குமார் ., “ ரியல் எஸ்டேட்டில் பொதுமக்கள் இரண்டு விதமான முதலீடுகளைச் செய்யலாம். முதலில் இடம் . இரண்டாவது ஃப்ளாட்.

பெரு நகரங்களில் ப்ளாட்டில் முதலீடு செய்வது லாபகரமானது. ப்ளாட்டுகளின் விலை இப்போது உயர்ந்து கொண்டிருக்கிறது. நல்ல வாடகையும் கிடைக்கும்.இடத்தின் விலையும் ஏறுமுகத்தில்தான். 2000 இல் போயஸ் கார்டனில் ஒரு ஸ்கொயர் ஃபீட் 2,500 ரூபாய். தற்போது 25,000 ரூபாய். கடந்த பத்து வருடங்களில் இடத்தின் விலை 10 லிருந்து 20 மடங்கு உயர்ந்திருக்கிறது.பொதுவாக போயஸ் கார்டன்., போட் க்ளப் போன்ற இடங்களில் சென்னையில் இடம் வீட்டின் விலை அதிகம். புற நகர்ப்பகுதிகளில் மற்றும் செங்கல்பட்டு., மற்றும் வடக்கு சென்னையில் கொஞ்சம் விலை குறைவு. ஏனெனில் நகரின் நடுவில் இடத்துக்கு டிமாண்ட் அதிகம். வாங்குபவர்கள் சிறந்த ஏரியாக்களிலேயே வாங்க விரும்புவதால். மிக அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். எனவே அதிகத் தேவை இருப்பதால் விலை ஏறுகிறது.

வீடு இடம் வாங்குவோர் கைக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அநேகம்.

(1) DTCP-- DIRECTORATE OF TOWN AND COUNTRY PLANNING. APPROVED -- அதாவது டைரக்டரேட் ஆஃப் டவுன் மற்றும் கண்ட்ரி ப்ளானிங்கின் முறையான அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்., வீடு., இவற்றை வாங்கவேண்டும்.

(2) வீடு கட்டும் முன்பு கரெக்ட் டாக்குமெண்ட்களை அட்வகேட்டிடம் காண்பித்து முறைப்படி எல்லாம் இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும். அட்வகேட் ஃபீசை மிச்சம் செய்யலாம் என நினைத்து இந்தத் தவறைசெய்யக் கூடாது. எந்த ப்ராப்பர்ட்டியானாலும் இந்த அப்ரூவல் முக்கியம்.

(3) டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கணும். முக்கியமா. பேரண்டல் டாக்குமெண்ட்ஸ். பல கை மாறி இந்த இடம்அல்லது வீடு வந்திருக்கும். அதன் மூலம் கட்டாயம் வேண்டும். வில்லங்க சர்டிஃபிகேட்., இடம் ., வீடு., வீட்டு மனைக்கான ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் முறைப்படி இருக்க வேண்டும். இதை எல்லாம் ஒரு லாயரிடம் காண்பித்து சரிடிஃபிகேட் வாங்கிக் கொள்ள வேண்டும். டி டி சி பி சர்டிஃபிகேட் லாங் டைம் பெனிஃபிட் உள்ளது. எல்லாம் சரியா இருந்தால் நாம் விற்கும் போதும் நமக்கு தொந்தரவு இல்லாமல் விற்கலாம்.

ரெகுலர் இன்கம் வரவேண்டுமென்றால் ப்ளாட்டிலும்., நீண்டகால முதலீடு என்றால் இடத்திலும் முதலீடு செய்யலாம். ப்ளாட்டுக்களில் செய்யும் முதலீடு அதிக சிக்கலில்லாதது. புறநகர்ப்பகுதிகளில் இடங்களில் முதலீடு செய்தால் அது ஆக்கிரமிக்கப்படலம். பின் ஆக்கிரமிப்பாளர்களைக் காலி செய்ய வைக்க வேறு பணம் தேவைப்படும்.

பொதுவாக வீட்டு வசதித்துறையின் மூலம் வாங்கும் வீடும் இடமும் கூட பாதுகாப்பானது. எல்லா சர்டிஃபிகேட்டுகளும் முறையாக இருக்கும். விற்கும் போதும் அந்த சேல் டீட்., பட்டா., அது சம்பந்தப்பட்ட பேப்பர்கள் கட்டாயம் கிடைப்பதால் மிக எளிது. ப்ளூ பிரிண்ட் படி வீடு இருக்கும்.

வீடு அல்லது ப்ளாட்டாக வாங்கும் போது அந்த ப்ரமோட்டர்கள் முன் அனுபவம் உள்ளவர்களா., முன் உள்ள ஸ்கீமை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்களா. சொன்ன தேதியில் கட்டி முடிப்பார்களா. எனத் தெரிந்து முதலீடு செய்வது உத்தமம். நாம் பாடு வங்கி லோன்., கையிருப்பு., நகை ., டெப்பாசிட்டுகள் எல்லாவற்றையும் போட்டு முதலீடு செய்து குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நம் கையில் வீடு கிடைக்கா விட்டால் வாடகை வீட்டுக்கான வாடகை வேறு நம் கையைக் கடிக்கும். எனவே ப்ரமோட்டர் அல்லது பில்டர்களின் முன் அனுபவமும் முக்கியம்.

சில பில்டர்கள் ஜிம்., ஸ்விம்மிங் க்ளப்., கார்பார்க்கிங் எல்லாம் இருக்கிறது என சொல்லி விளம்பரப்படுத்துவார்கள் பின்பு கார் பார்க்கிங் ., அது ., இது என சார்ஜ் செய்வார்கள். இதைத்தவிர்க்க உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என்பதை நீங்கள் எழுத்துபூர்வமாக முன்பே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஊர்க்கோடியில் இருக்கும் இடத்தை நடுவில் இருப்பது போல் பக்கம்தான் என சொல்வார்கள். எதற்கும் ஒரு முறை இடத்துக்கு அல்லது வீடு கட்டும் சைட்டுக்கு விசிட் செய்து விட்டு வாங்குவது உத்தமம்.

வீடு அல்லது ப்ளாட்டும் அதிகமாகவோ., தேவையற்றோ ப்ளான்படி இல்லாமல் கட்டப்பட்டிருந்தால் இடிக்கப்படச் சாத்தியக்கூறு அதிகம். கவர்ன்மெண்ட் அப்ரூவல்படிதான் கட்டப்பட வேண்டும்.FSI -- FLOOR SPACE INDEX.. இது நிலத்தில் இவ்வளவு இடத்தில்தான் கட்டிடம் கட்டப்படவேண்டும் என குறிக்கப்பட்ட அளவு. இதற்குமேல் கட்டக்கூடாது. அதுபோல் ரோட்டின் அகலத்தைப் பொறுத்துத்தான் இரண்டாம்., மூன்றாம் மாடிகள் கட்டப்படவேண்டும். சிறிய இடத்தில் கோபுரம் போல 3 மாடி ., 4 மாடி அப்ரூவல் இல்லாமல் கட்டக்கூடாது. சுற்றி இடம் விட்டுக் கட்டவேண்டும் என்றால் சுற்றி இடம் விட்டுத்தான் கட்ட வேண்டும்.

ஹவுசிங் போர்டுகளில் உள்ள ரோ ஹவுசஸ் சில சமயம் ரீ மாடல் செய்யும் போது சேர்த்துக் கட்டப்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.அனுமதிக்கப்பட்ட உயரம்., அகலம்தான் கட்ட வேண்டும்.

புற நகரங்களில் வீடு கட்டும் போது வீட்டுக்கான கட்டுமானச் செலவு அதேதான் என்றாலும். இடத்துக்கான விலை கணிசமாகக் குறைகிறது. மத்தியதர மக்கள் அதிகம் படையெடுப்பது இங்குதான்.

CRISIL RATING-- க்ரைசில் ரேட்டிங் இது கம்பெனிகளைப் பற்றிய ரேட்டிங். உங்களுக்குக் வீடு அல்லது ப்ளாட்டுகள் கட்டித்தரும் நிறுவனம் இதில் சிறப்பு இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த அறிக்கையை அந்தக் கம்பெனிகளிடம் கேட்டு வாங்கலாம். அப்போதுதான் உங்க முதலீடு சிக்கலில்லாமல் சேமிக்கப்பட்டிருக்கிறது என நிம்மதியா இருக்கலாம்.


பொதுவாக என் ஆர் ஐக்கள் வீடுகளிலும் இடங்களிலும் முதலீடு செய்யலாம். தேவையான சரியான ஆவணங்கள்., பத்திரங்கள் முறைப்படி இரு்க்கிறது. என உறுதி செய்து கொள்வது மட்டுமே முக்கியம். அப்படி என்றால் அது அவர்கள் தாய் நாட்டில் செட்டிலாகும்போது சிறந்த முதலீடாக இருக்கும். ரீசேல் வால்யூவும் அதிகம். சரியான சேல் டீட்., பட்டா வில்லங்கப் பத்திரம் வைத்திருக்கவேண்டும்.

மத்திய தர மக்களும் தங்கள் பணத்துக்கு சரியான பில்டர்களை அணுகி இடம் வீட்டில் முதலீடு செய்யலாம். நகரின் சில இடங்களிலும் நல்ல வீடுகள் சரியான விலைக்கு தரமான பில்டர்களால் கட்டித்தரப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம். சரியான பில்டர்களை அணுகி உங்கள் கனவு இல்லத்தை அமைத்துக் கொள்வதுதான். அதுக்கு நீங்க உங்ககிட்ட ரேஷன் கார்டு., ட்ரைவிங் லைசன்ஸ்., பான் கார்டு போன்ற ஐடி ப்ரூஃபை வைத்திருக்க வேண்டும். நீங்களும் சரியான தேவையான ஐடி ப்ரூஃபுகள்., பண ஏற்பாடுகள் செய்துவிட்டு உங்க கனவு இல்லத்தை அமைக்கும் பொறுப்பை சரியான பில்டரிடம் விட்டு விட்டு நீங்க ஹாயா இருக்கலாம்.

எங்கே கிளம்பிட்டீங்க.. உங்க பட்ஜெட்டுக்குள்ள முறையான வீடு கட்டித்தரும் பில்டர்கள்., ப்ரமோட்டர்களை எதிர்நோக்கியா.. சீக்கிரம் பலிக்கட்டும் உங்க ஆசைக் கனவு. !!!

டிஸ்கி:- இந்தக் கட்டுரை நவம்பர் 2011 இவள் புதியவளில் வெளிவந்தது.


3 கருத்துகள்:

  1. நல்ல பயனளிக்கும் + மனதுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)