செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இவள் புதியவளில் டிப்ஸ்..7.



1.குக்கரில் சாதம் வைக்கும் போது வெளியில் தண்ணீரில் எலுமிச்சை தோல் அல்லது புளி போட்டு வைத்தால் குக்கர் கருக்காது.

2. ஹிந்தி, கைவேலைப்பாடுகள், ஸ்லோகம் தெரிந்தவர்கள் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்கலாம். படிக்க சிரமப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்.




3. வயிற்றைக் காயப்போட்டு காலை உணவுக்கு பதிலாக ஜூஸ் அருந்துவதும், இரவு பஃபேக்களில் அதிகப்படி உண்பதும் தவறு. காலை உணவை எப்போதும் ஸ்கிப் செய்யக்கூடாது. அதுபோல் பார்ட்டிகளிலும் பாஸ்டா, ஐஸ்க்ரீம், கேக், கீர் வகைகளுக்குப் பதிலாக சாலட்கள் ப்ரோட்டீன்கள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.



4. ஆறு மாதத்துக்குமேல் உபயோகப்படுத்தாமல் ஒரு பொருள் வீட்டில் இருந்தால் அதை உபயோகப்படுத்தும் யாருக்காவது கொடுத்து விடலாம். அவ்வப்போது வீட்டில் தண்ணீர் பாட்டில், பேப்பர், புத்தகம், போன்ற வேண்டாத குப்பை சேர்க்காமல் விலைக்குப் போட்டுவிடுவது கரப்பு பூச்சிகள் அடையாமல் தடுக்கும்.



5. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் தினமும் வீட்டில் செய்த ஸ்நாக்ஸ் சிறிது கொடுத்தனுப்பலாம். இதற்கு உருளை, சேனை, வாழைக்காய் போன்ற சிப்ஸ்கள் செய்து வைக்கலாம்.

6. சாலட்கள் செய்யும்போது எலுமிச்சைஜூசும் மிளகுப் பொடியும் போட்டு செய்தால் சுவையாக இருக்கும்.



7. நவராத்திரி, பர்த்டே போன்ற விஷேஷங்களில் பையில் கிஃப்டுக்கு பதிலாக புத்தகங்களை போட்டுத்தரலாம். சின்னக் குழந்தைகளிடையே படிக்கும் பழக்கத்தை இது ஊக்குவிக்கும். குழந்தைகளுக்கு கதை சொல்லும் டிவிடிக்கள் விற்கின்றன. இவற்றை பரிசளிக்கலாம்.

டிஸ்கி:- இந்த டிப்ஸ் நவம்பர் 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளன.

4 கருத்துகள்:

  1. மிகமிகப் பயனுள்ள யோசனைகள். அதிலும் கடைசி யோசனை டாப்க்கா... நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. நல்லாருக்கே..ஐடியாக்கள் சூப்பர்..நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)