வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

உன்னுடையது எது,,?

ஜடாமுடியாயோ.,
குறுந்தாடியாயோ
இருப்பது குறித்து
உலகுக்கு கவலையில்லை..

க்ரீடமாகவோ ஹாரமாகவோ
அழகுபடுத்திக் கொள்வதும்.,
அசிங்கப்படுத்திக் கொள்வதும்,
அதைப் பெருமையாய் எண்ணுவதும்
ஒற்றைக் கண்ணோட்டமே..


குற்றச்சாட்டோ.,
அதிருப்தியோ.,
குலைத்துவிடப் போவதில்லை..
வெற்று அலங்காரங்களை..

கனத்த சிரசை
சுமந்து அலைந்து
கழட்ட முடியாத
கனவுகளில் புதைந்து
கழுவிலோ.. சிலுவையிலோ.

எதையோ கொடுத்து
எதையோ பெறுகின்றீர்கள்..
முடிவான காலத்துக்குள்
விட்டுச் செல்லுங்கள்
பயனான ஒன்றை...

டிஸ்கி:-இந்தக் கவிதை ஏப்ரல் 10,2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

.

7 கருத்துகள்:

  1. சிறப்பான எழுத்துக்கள் சகோ..வரிகள் அத்தனையும் அருமை..தொடரட்டும் தங்கள் பணி.என் நன்றிகள்.

    சைக்கோ திரை விமர்சனம்

    பதிலளிநீக்கு
  2. நல்லாச் சொன்னீங்கக்கா... ஏதாவது விட்டுப் போகணும்னுதான் எனக்கும் ஆசை. வாழ்நாள்ல அதுநிறைவேறுவதற்கான முயற்சிகளை செய்துட்டே இருப்போம்னு நினைக்கிறேன். அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  3. அட..தேனம்மை கவிதையையே காணவில்லையே என்று நேற்று கேட்டேன்.இன்று ஒரு அருமையான கவிதை பிறந்து விட்டதே!நன்றி தேனு!

    பதிலளிநீக்கு
  4. இறந்தபின்னும் வாழும் வழியை தேடிக்கொள்ளுங்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் தேனக்கா.
    //எதையோ கொடுத்து
    எதையோ பெறுகின்றீர்கள்..
    முடிவான காலத்துக்குள்
    விட்டுச் செல்லுங்கள்
    பயனான ஒன்றை..//
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  6. நன்றி குமரன்

    நன்றி கணேஷ்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ஸாதிகா

    நன்றி அம்பலத்தார்

    நன்றி ஆசியா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)