திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வி ஐ பியுடன் நான். ...

ஒருநாள் முகப்புத்தகத்தில் ஒரு நண்பரை சேர்த்தேன். அது சேரன்பாண்டியன் என்ற டைரக்டர் சேரன். ஒரு முறை என்னோட ப்லாக் ஐடியை அவருக்கு அனுப்பினேன். உடனே அடுத்த நாள் ஆச்சியின் தீபாவளி பலகாரங்கள் அட்டகாசம் என்ற ஒரு பதில் வந்தது. ஒரே சந்தோஷம்தான். அதன் பின் அவர் ஸ்டேடசுக்கு பதில் போடுவதும்., படங்களுக்கு கவிதை எழுதுவதுமே எங்களைப் போன்ற ரசிகர்களின் பொழுதுபோக்கு. பலர் சென்று பார்த்துவிட்டு வந்து அது பற்றி ஃபோட்டோ போடுவார்கள்.


அவரது தவமாய் தவமிருந்து., ஆட்டோகிராஃப்., பொற்காலம்., பிரிவோம் சந்திப்போம்., மற்றும் அவரது எல்லாப் படங்களுக்குமே ரசிகை நான். அப்புறம் ஒரு நாள் அவரை சில முகப்புத்தக நண்பர்களோடு சென்று அபிபுல்லா சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ஒரு பெரிய செலிபிரட்டிக்கு உரிய பந்தா ஏதுமில்லாமல் தன்னுடைய ஷூட்டிங் வேலைகளுக்கு நடுவில் அவர் எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார். உலகறிந்த ஒரு பெரிய நடிகரைப் பார்க்கப்போகிறோம் என்ற பதட்டம் இருந்தது. அவரோடு பழகிய சில மணித்துளிகளில் மிக நெருக்கமான நண்பராகிவிட்டார். புன்னகை தவழும் முகத்தோடு எங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி காஃபி வாங்கிவரச் செய்து அனைவருக்கும் தன் கையாலேயே கொடுத்தார். நட்புக்கு மரியாதை..!!!

அப்போது எடுத்த ஃபோட்டோதான் இது. அதோடு மட்டும் முடியவில்லை. இன்னும் அவர் யுத்தம் செய் படத்தை எங்களுக்காக ஸ்பான்சர் செய்து எங்களோடு ஒரே தியேட்டரில் பார்த்தார். அதன் மூலம் வந்த வருமானத்தையும் ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்துக்குக் கொடுத்தார். அந்தக் குழந்தைகளையும் மகிழ்விக்க அவர்கள் இல்லம் சென்று அவர்களோடு அளவளாவி பக்கத்தில் அமர்ந்து உணவு உண்டு அந்தக் குழந்தைகளை மகிழ்வித்துத் திரும்பியுள்ளார். அப்போதுதான் உணர்ந்தேன் அந்த நடிகருக்குள் ஒரு உயர்ந்த மனிதன் இருப்பதை. ஒரு நடிகர் நண்பராவதில் உள்ள பெருமையைவிட மனிதநேயமிக்க அந்த மனிதனின் தோழியாக அறியப்படுவதில் பெருமையுறுகிறேன் நான்

டிஸ்கி :- இது 2011 ஜூலை இவள் புதியவளில் வெளிவந்த பகிர்வு. :-))

29 கருத்துகள்:

  1. சூப்பர், எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். நடிகராகவும் பிரிவோம் சந்தித்தோமில் கலக்கிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  2. தேனக்கா,

    அவரின் படைப்புகளிலேயே உணர்ந்துகொள்ள முடிந்தது, அவர் மனிதநேயமிக்க நபர் என்று. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அசத்தல் அக்காவுக்கு, அன்பின் வாழ்த்துக்கள்! I am back....

    பதிலளிநீக்கு
  4. இயக்குனர் சேரனுடன் மதுரை பெல் உணவகத்தில் சந்தித்த அனுபவம் எனக்கு உண்டு. பந்தா ஏதுமில்லாத மிக எளிமையான மனிதர் தான். ஒரு சின்ன வேண்டுகோள் முகபுத்தகத்தை முக நூல் என்றே குறிப்பிடலாம்

    பதிலளிநீக்கு
  5. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இயக்குனர் திரு சேரன். அவருடைய படங்கள் அனைத்திலும் ஒரு எதார்த்தம் இருக்கும். நானும் ஆவலுடன் இருக்கிறேன் ஒருமுறையாவது அவரை சந்திக்க.

    பதிலளிநீக்கு
  6. உண்மையிலேயே அவர் ஒரு உயர்ந்த மனிதர் தான்.

    அவருடன் அறிமுகமும், நட்பும், அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதும் பாராட்டத்தக்கதே.

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. ம்ம் பயங்கரமா ஃபேமஸ் ஆகிட்டேயிரூக்கீங்க!வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. ”.....ஒரு நடிகர் நண்பராவதில் உள்ள பெருமையைவிட மனிதநேயமிக்க அந்த மனிதனின் தோழியாக அறியப்படுவதில் பெருமையுறுகிறேன் நான்!”
    -- ரொம்ப ஸத்யமான வார்த்தை!!!

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. எனக்கு கூட அவரது படங்கள் பிடிக்கும் .

    தவமாய் தவமிருந்து ,ஆட்டோ கிராஃப்

    பொற்காலம் மனதில் பதிந்த காவியங்கள் சகோ ...

    பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  11. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் வருமானத்திற்க்காக கேட்டரிங் வேலைக்கு செல்வேன்.. அபோழுது ஒருமுறை நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீ தேவியின் கல்யாணத்தில் அவருக்கு சாப்பாடு பரிமாரும்போது அதில் உள்ள சுவீட் பற்றி விளையாட்டாக அதிக நேரம் பேசினார்... பல இடங்களில் பார்த்திருந்தாலும் இன்றும் அந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது... அவரது படங்கள் எல்லாம் தரமானதாக இருக்கும் அதிலும் தவமாய் தவமிருந்து ஹைலைட்... அவரது புகழ் மேலும் வளரட்டும்.. தங்களின் இந்த பகிர்வுக்கு நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஸாதிகா.,சாந்தி., தென்றல்., கோபால்., சித்து., விடிவெள்ளி., சௌந்தர்., ஆயிரத்தில் ஒருவன்., காந்தி., கருன்., சசி., ரத்னவேல் ஐயா., கோபால் சார்., முனியப்பன் சார்., ராம்., அருணா., ராஜி., ஆர் ஆர் ஆர் ., மாய உலகம்., எம் ஆர்., கவிதை., டி வி ஆர்., குமார்., மாய உலகம்., ஹேமா

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)