புதன், 20 ஏப்ரல், 2011

இவள் புதியவளில் உன்னோடு ஒரு நாளாவது மற்றும் மௌனக்கல்..




உன்னோடு ஒரு நாளாவது ...
***************************************
ஏதேனும் ஒரு கடற்கரையோ.,
பூந்தோட்டமோ.,
இருளும்., குளிரும்
கதகதப்பாய்ப் பூக்கத்
தொடங்கும் அதிகாலை...


மகிழம்பூக்களோ.,
குல்மோஹரோ கொட்டிக்
கிடக்கும் மரத்தடியில்..
அல்லது அலைகளும்
தென்னையும் விசிறி அடிக்கும்
கட்டுமரங்களுக்கிடையில்

பாதம் புதைய கைகோர்த்து.,
தோளணைத்து செல்கையில்.,
உன் கையில் தாவரமாகவோ
கொடியாகவோ.,



உன் முகம் பார்த்துப்
பூக்கத்தொடங்கும்
தாமரையாகவோ..
சூரியகாந்தியாகவோ.


நிறைய பறவைகளும்
தட்டாரப் பூச்சிகளும்.,
சில பட்டாம் பூச்சிகளும்
நம்மைச் சுற்றி
சிறகடித்து ரீங்கரிக்க

அலைகளும் நுரைகளும்
ஆள்நனைத்து கூதலடிக்க
பேச ஏதுமில்லை
உன்னுடன் நான்..
என்னுடன் நீ

பசியில்லை., தாகமில்லை..
தூக்கமில்லை.,ஏக்கமில்லை.,
முகம் பார்த்து பசியாறி
புன்னகையில் தாகமடங்கி


ஒருவர் விழியில் ஒருவர்
இளைப்பாறிக் களைப்பாறி
பறவைகளுடனும்.,
பூக்களுக்குள்ளும்.,
அலைகளுக்குள்ளும்..

இருளும் குளிரும்
கதகதக்கும் மாலை
வெயிலில் கைகோர்த்து
உன்னோடு ஒரே ஒருநாளாவது..
*********************************************

12. மௌனக்கல்:-
******************
மௌனம் ஒரு கல்லாய்
விழுகிறது என்னுள்...
விரிவலைகள் கிளப்பி..


சிற்பமாய் செதுக்கிக்
கொண்டிருக்கிறேன் அதைப்
பலகாலமாய்..


சிலசமயம் தெய்வமாயும்.,
பலசமயம் குரங்காயும்
அரட்டுகிறது அது..

மௌனக் கல்லும்
வார்த்தைக் கல்லும்
மோதி மோதி
நதியைப் போல நெளிந்து நான்..

கடலிலிருந்து மேகமாகித்
தரையிரங்கும் வரை
கற்களற்றது என் வாழ்வு..

கற்களோடான பயணத்தில்
களைத்துக் களைத்துக்
கடல் தட்டி நான்..

டிஸ்கி :- இந்த இரண்டு கவிதைகளும் ஏப்ரல் 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.. நன்றி இவள் புதியவள்..:))

16 கருத்துகள்:

  1. பாதம் புதைய கைகோர்த்து.,
    தோளணைத்து செல்கையில்.,
    உன் கையில் தாவரமாகவோ
    கொடியாகவோ.,

    சிலசமயம் தெய்வமாயும்.,
    பலசமயம் குரங்காயும்
    அரட்டுகிறது அது..

    இவை சட்டன முகத்தை மறுபடியும்
    உன்னிக்க வைக்கும் தேடல்


    ஆழத்தின் அதிக பயணங்களின்
    தனிமையான நிழல் சுவாச நேசிப்புக்கள் மறு படியும் இழந்து போகும் கோபங்களின் புன்னகை மாறிவிடுகின்றது .

    யாவும் தனித்துவ புகழ்ச்சி அடைகின்றது அம்மா
    மிக அருமை.

    வாழ்க தமிழின் புன்னகை.

    பதிலளிநீக்கு
  2. சிலசமயம் தெய்வமாயும்.,
    பலசமயம் குரங்காயும்
    அரட்டுகிறது அது..

    கவிஞனின் மனம்..
    மிக அருமை அத்தனையும் அம்மா..

    வாழிய தமிழின் புன்னகை.

    பதிலளிநீக்கு
  3. இரண்டும் நன்று.

    //மௌனம் ஒரு கல்லாய்
    விழுகிறது என்னுள்...
    விரிவலைகள் கிளப்பி..


    சிற்பமாய் செதுக்கிக்
    கொண்டிருக்கிறேன் அதைப்
    பலகாலமாய்..//

    அருமையான வரிகள்!

    பதிலளிநீக்கு
  4. சிலசமயம் தெய்வமாயும்.,
    பலசமயம் குரங்காயும்
    அரட்டுகிறது அது..

    கவிஞனின் மனம்..
    மிக அருமை அத்தனையும் அம்மா..

    வாழிய தமிழின் புன்னகை.

    பதிலளிநீக்கு
  5. இனிய பாராட்டுகள்.

    சூர்யக் கதிரிலும் உங்கள் படைப்பு வந்துள்ளதே!!!!

    பதிலளிநீக்கு
  6. நல்ல கவிதைகள்.
    வாழ்த்துக்கள்.
    விவரித்து புகழும் அளவுக்கு எனக்கு மொழி இல்லை. தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
    நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  7. மகிழம்பூக்களோ.,
    குல்மோஹரோ கொட்டிக்
    கிடக்கும் மரத்தடியில்..//
    மனதில் மண்ம் பரப்பும் இனிய கவிதைகளுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கவிதைகள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. கவிதைகள் அருமை.

    நல் முயற்சிக்கு வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  10. நன்றி அகிலா

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி விழி வானலை

    நன்றி துளசி

    நன்றி ரத்னவேல்

    நன்றி சித்து

    நன்றி ராஜி

    நன்றி சிநேகிதி

    நன்றி சசி

    நன்றி சாந்தி

    நன்றி செந்தில்

    நன்றி அக்பர்

    நன்றி மாதவி

    பதிலளிநீக்கு
  11. இரண்டும் நன்று ,வாழ்த்துக்கள் ---சரஸ்வதிராஜேந்திரன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)