வெள்ளி, 1 ஏப்ரல், 2011

பங்குச் சந்தையும்., மற்ற முதலீடுகளும் (4).

கே . 1 . போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் குறைந்த பட்ச தொகை எவ்வளவு ? அதிக பட்ச தொகை எவ்வளவு போடலாம்..?

பதில்:- மினிமம் 50 ரூபாயில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் ஆரம்பிக்கலாம். மாதா மாதம் 10 ரூபாய் போடலாம்.அதிக பட்ச தொகையாக சிங்கிள் ஹோல்டரா இருந்தா சுமார் ஒரு லட்சம் வரை போடலாம் .. ஜாயிண்ட் ஹோல்டரா இருந்தா இரண்டு லட்சம் வரை போடலாம் .. ஒரு வருடத்துக்கு..

கே 2. TDS பிடித்தவர்கள் Form 16 ஐ நாம் ரிடர்ன் ஃபைல் செய்த பிறகு அனுப்புகிறார்கள். அதை அடுத்த வருடக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாமா..?


பதில் :- அது முடியாது . அந்தந்த வருடம் TDS பிடித்தது அந்தந்த வருடத்துக்குத்தான் யூஸ்ஆகும். அடுத்த வருடம் யூஸ் ஆகாது.அதாவது மார்ச் 31 ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதி வரை டைம் கொடுக்கிறார்கள் . யூஷுவலா கம்பெனிகளில் ஜூனில் கொடுத்து விடுவார்கள் .அது அந்தந்த மாசசம்பளக் கணக்கில் பிடித்து இருந்தால் அந்த வருட கணக்கில் சேர்த்துக்கலாம். உதாரணமா நாம் 75000 கட்டி அதில் 50000 தான் வரி என்றால் 25000 ரீஃபண்ட் கிடைக்கும் . அதை அந்த வருடக்கணக்கில் சேர்த்து ரீஃபண்ட் பெற்றுக்கலாமே தவிர அடுத்த வருடக் கணக்கில் சேர்த்துக்க முடியாது .

கே 3 .ஆரோக்கியத்துக்காக என்னென்ன பாலிஸி எடுக்கலாம்..?

பதில்:- ஆரோக்கியத்துக்காக என்றால் மெடிக்ளைம் பாலிசி எடுக்கலாம். LIC யின் ஹெல்த் ப்ரொடக்‌ஷன் ப்ளஸ் என்று இருக்கிறது . மற்ற பொதுக்காப்பீட்டு ( general Insurance ) நிறுவனங்களில் மெடிக்ளைம் வேறு பெயர்களில் தரப் படுகிறது .

கே 4. மருத்துவ செலவுக்கு வேண்டுமென்று இன்ஸூரன்ஸ் எடுத்து இருந்தேன் .. பெரிய ஆப்ரேஷன் செய்தால்தான் க்ளைம் கிடைக்குமென்று நண்பர்கள் சொல்கிறர்கள்..

பதில் :- பொதுவாக மிகச் சிறிய க்ளைம் என்றால் கிடைக்காது.. ஒரு நாளைக்கு மேல் ஹாஸ்பிடலில் இருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் கிடைக்கும். அவுட் பேஷண்டா இருந்தா கிடைக்காது, less seriousness க்கு ஹோல்ட் ஆகாது. எமர்ஜென்சி., ரெஸ்பிரேட்டரி ப்ராப்ளம் போன்ற பிரச்சனைகளுக்கு கிடைக்கும். பேசிக் நார்ம் ஹாஸ்பிடலைஷேஷன்தான். அவுட் பேஷண்ட்டுக்கு இல்லை. நண்பர்கள் சொன்னது உண்மைதான்.

கே. 5. பேப்பர் கோல்ட்என்றால் என்ன? அதை விளக்கவும்.?

பதில் :- நெட்டில் வாங்கி விற்பது ., MCSE ல் ஃப்யூச்சர்ஸாக வாங்குவது. ETF ( EXCHANGE TRADED FUND ) MUTUAL FUND ஐப் போல் குறிப்பிட்ட காலத்துக்குள் ஷேர்ஸ் ஆ மாற்றி --- அதாவது ரிலையன்ஸ் அல்லது கால்கேட் ஆ வாங்கப்படும். மார்க்கெட் ஏறும் போது விற்கப்படும்.. இதில் சேஃப்டியும் இருக்கும் . டெலிவரி எடுக்க வேண்டாம். தங்கம் என்றால் வாங்க முடியும் விற்க முடி்யாது. சில சமயம் கம்மி விலைக்குப் போகும். இதில் அந்தப் பிரச்சனை இல்லை. இது ட்ரான்ஸ்பரண்ட். ரெண்டு நாளில் திரும்பப் பணமாக்கலாம்..

டிஸ்கி:- திருமதி சித்ரா நாகப்பன் நமது லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக அளித்த முதலீட்டு ஆலோசனைகள் ஆகஸ்ட் 2010 இதழில் வெளிவந்து இருக்கு .

10 கருத்துகள்:

  1. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்..நன்றி

    பதிலளிநீக்கு
  2. >>நன்றியை நாங்க தான் சொல்லனும் மேடம்.. நம்ம பதிவர்களை பெருமைப்படுத்தீட்டீங்க.. குமுதத்துல சாதனை பண்ணி

    பதிலளிநீக்கு
  3. நன்றி சித்து

    நன்றி ப்ரகாஷ்

    நன்றி இராஜி

    நன்றீ சசி

    நன்றீ செந்தில்..:))


    நன்றி மாதவி

    நன்றி ராஜாமணி..

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)