வியாழன், 31 மார்ச், 2011

பங்குச் சந்தையும் மற்ற முதலீடுகளும்.. (3)..

1. நான் சில பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வைத்து இருந்தேன்..அது தற்போது விலை இறக்கமாக உள்ளது .. இன்னும் விலை இறங்கி விடலாம் என நினைப்பதால் வைத்துக் கொள்ளலாமா, அல்லது விற்றுவிடலாமா..?

பதில்:- இது வாங்கியதைப் பொறுத்தது.. 15 இல் இருந்து 20 பர்செண்ட் ரிடர்ன் வருதுன்னா விக்கலாம்.. இப்ப மார்க்கெட் ஏற்ற இறக்கம் ரொம்ப இல்லாம இருக்கு.. நாம எப்ப எண்டர் பண்ணி இருக்கோம் என்றும் பார்க்கணும்.. (PPF என்றால் 8 % வங்கி என்றால் 5 - 6 % .. இது சேஃப் இன்வெஸ்ட்மெண்ட்..) . எனவே ரிடர்ன்ஸ் இருந்துச்சுன்னா விக்கலாம்.. பொதுவா ஏற்ற இறக்கம் இல்லாத சூழலில் விக்கக் கூடாது.. ட்ரேடிங்க் ரேஞ்ச் .. ரிடர்ன்ஸ் இருந்தா விக்கலாம்..



2. ப்ரோக்கர்ஸ் மூலமா ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அவங்க மூலமா நமக்கு ஷேர் ட்ரேடிங்க செய்ய சொல்லலாமா..?

பதில்..:- செய்யலாம்.. நிறைய ரிஸ்க் இருக்கு அட்வாண்டேஜஸை விட.. சைன் மட்டும் பண்ணிட்டு ட்ரேடிங்க செய்யச் சொல்லாம.. ஃபாலோ பண்ணியும் பார்க்கணும்.. என்ன வாங்கி வித்து இருக்காங்க நம்ம அக்கவுண்ட்லன்னு...வாங்கின பங்குகள் ஏறி இருக்கா இறங்கி இருக்கான்னு சூப்பர்விஷன் பண்ணிக்கிட்டே இருக்கணும்..

3. எந்த வயது வரைக்கும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்..?

பதில்:- அதிக பட்சம் 65 வயது வரைக்கும் எடுக்கலாம்.. அதுவும் எல்லா பாலிசியும் எடுக்க முடியாது..குறிப்பா 2 .,3 பாலிசிதான் எடுக்க அனுமதிக்கப் பட்டு இருக்கு.. பென்ஷன் பாலிசி தான் எடுக்கலாம்.. மேலும் 40 வயதுக்கு மேல பாலிசியில் கட்ட வேண்டிய ப்ரிமியம் தொகை கூடுது,,

4. பெரிய தொகையில் வீட்டுக் கடன் ( 50 லட்சம் 70 லட்சம் ) வாங்கும் போது அந்தத் தொகைக்கு ஈடா காப்பீடு எடுக்கச் சொல்றாங்க.. அதுக்கு ப்ரிமியம் தொகை வேற அதிகமாகுது.. அதற்கு மாட்டேன்னு சொல்லலாமா?

பதில்:- எடுக்கணும்னு அவசியம் இல்லை.. இதுல இரண்டு வகை இருக்கு ..தீ அல்லது பூகம்பம் மாதிரி இருக்கு.. பிஸிகலா பாதிப்பு.. மேலும் இன்சூரன்ஸ் எடுத்து அந்த வீடு கட்டியவர் இறந்து போகும் பட்சத்தில் குடும்ப உறுப்பினர்களால் அடுத்த ப்ரிமியம் கட்ட முடியமல் போகலாம்.. எனவே இன்ஸூரன்ஸ் எடுக்கணும்னு அவசியமில்லை.. அது அவரவர் விருப்பம்..

5. போஸ்ட் ஆஃபீஸில் ஏஜண்ட் தவிர்த்து நாமே பணம் போடலாமா..? அதற்கு மெயின் போஸ்ட் ஆஃபீஸ் போகணுமா அல்லது அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸிலேயே போடலாமா?

பதில்:- டைரக்டாவே நாமளே ஓபன் பண்ணலாம்.. போஸ்ட் ஆபிஸில் மற்றும் அருகில் உள்ள வங்கியில் (ஸ்டேட் பாங்க்) போய் PPS அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம். ஏஜண்ட் மூலமா போக வேண்டிய அவசியம் கிடையாது..வங்கி மூலமாவே பணம் செலுத்தலாம் .. மெயின் போஸ்ட் ஆஃபீஸ் போகணும்னு கிடையாது பக்கத்தில் உள்ள வங்கியில் கூட செலுத்தலாம்..

டிஸ்கி:- திருமதி சித்ரா நாகப்பன் நமது லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக அளித்த முதலீட்டு ஆலோசனைகள்.. ஜூலை 2010 இதழில் வெளிவந்து இருக்கு ..

9 கருத்துகள்:

  1. பங்குசந்தை முதலிட்டாளர்களுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
  2. நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல... எனக்கும் பங்கு சந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... எஸ்கேப்...

    பதிலளிநீக்கு
  3. குமுதத்தில் கவிதைகள் இன்னைக்கு தான் பார்த்தேன்.
    மழலைகளின் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  4. 1. நான் சில பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வைத்து இருந்தேன்..அது தற்போது விலை இறக்கமாக உள்ளது .. இன்னும் விலை இறங்கி விடலாம் என நினைப்பதால் வைத்துக் கொள்ளலாமா, அல்லது விற்றுவிடலாமா..?

    பதில்:- இது வாங்கியதைப் பொறுத்தது.. 15 இல் இருந்து 20 பர்செண்ட் ரிடர்ன் வருதுன்னா விக்கலாம்.. இப்ப மார்க்கெட் ஏற்ற இறக்கம் ரொம்ப இல்லாம இருக்கு.. நாம எப்ப எண்டர் பண்ணி இருக்கோம் என்றும் பார்க்கணும்.. (PPF என்றால் 8 % வங்கி என்றால் 5 - 6 % .. இது சேஃப் இன்வெஸ்ட்மெண்ட்..) . எனவே ரிடர்ன்ஸ் இருந்துச்சுன்னா விக்கலாம்.. பொதுவா ஏற்ற இறக்கம் இல்லாத சூழலில் விக்கக் கூடாது.. ட்ரேடிங்க் ரேஞ்ச் .. ரிடர்ன்ஸ் இருந்தா விக்கலாம்..

    ----

    கேள்வி நஷ்டத்தில் விற்கலாமான்னு தானே? அதற்கு இந்த பதில் எதற்கு ((:

    பதிலளிநீக்கு
  5. நன்றி ரமேஷ்

    நன்றி சித்து

    நன்றி பிரபாகரன்

    நன்றி ரூஃபினா

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி கதிர்.. அட்வைஸுக்கு நன்றி..

    நன்றி ராஜேஸ்வரி..

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)