வியாழன், 3 மார்ச், 2011

கணவன் மனைவி கிரிக்கெட்.. சிக்ஸர்...

கொஞ்சம் விடுமுறையும்.,
கட்டிக்கொள்ள (கத்தாத) கறுப்பியும்
கிரிக்கெட்டும் சுகமே சுகம்..


உன் கருவிழிப் பந்தடித்து
க்ளீன் போல்டாகினேன்
எச்சரிக்கை இல்லாத நான்..

ரன் அவுட்., விக்கெட் தப்பி.,
காலில் அடிபட்டு (LBW)
அவுட்டான நான்..
முதுகுத்தண்டு மட்டை
வயிற்றுப்பந்தை
அடித்துக் கொண்டிருந்தது
உன் பார்வை பட்டு....
ஆறதெற்கு ஒரேயொரு
பார்வைப்பந்து போதும்
என் ஹாங்க் ஓவருக்கு
மட்டையாயும்., விக்கெட்டாயும்.,
க்ளவுசாயும்., ஃபீல்டாயும் நீயிருக்க..
எல்லா இடத்திலும் உருளும் பந்தாய் நான்..
நோ பால்:-
காட்ச் பிடித்து பிடித்து
ஃபீல்டுக்கே அனுப்புகிறாய்..
அடுத்தும் என்னை கொத்தோடு காட்ச் பிடிக்க..
மெய்டன் ஓவர்.:-
எத்தனை வருடம் மெய் வருந்த வருந்த
ஓடினேன் ஓடினேன் உலகத்தின் ஓரத்துக்கே
ஒரு ரன்னாவது விடு ..
மொத்தமாய் ஓட..

19 கருத்துகள்:

  1. படங்களும், கவிதைகளும் யதார்த்தமாய்... அருமை...

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

    பதிலளிநீக்கு
  2. அட இப்பிடியும் கவிதை எழுதலாமா சூப்பர்....

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் பார்க்கின்ற எல்லாமே கவிதையாகிறது. தப்பி விடுமா கிரிக்கெட் மட்டும். கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை அம்மா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை ரொம்ப நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  6. அட,கிரிக்கெட் சீசன் கவிதையா?இரண்டு மூன்று தடவை வாசித்தால் புரிகிறது,அது தானே தேனக்கா கவிதை.

    பதிலளிநீக்கு
  7. நன்றி கருன்

    நன்றி மனோ..:)

    நன்றி மாணவன்

    நன்றி ரமேஷ்

    நன்றி ரத்னவேல்

    நன்றி கார்த்திகேயன்

    நன்றி ஆசியா

    நன்றி கதிர்.. சும்மா..:))

    பதிலளிநீக்கு
  8. எத்தனை வருடம் மெய் வருந்த வருந்த
    ஓடினேன் ஓடினேன் உலகத்தின் ஓரத்துக்கே
    haa ...haa..

    பதிலளிநீக்கு
  9. காதல் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாச்சே தேனம்மை இடை இடையே எழுதலாமே ?

    பதிலளிநீக்கு
  10. சீசனுக்கேற்ற அருமையான கவிதைகள்!

    பதிலளிநீக்கு
  11. அட...இவ்ளோ காலத்துக்கு ஒரு ரன்கூட இல்லையா...அட என்னக்கா !

    பதிலளிநீக்கு
  12. எப்படில்லாம் எழுதுறாங்கப்பா

    பதிலளிநீக்கு
  13. நன்றி ராஜி.:))

    உங்களுக்காக பூவாய் நீ ரூஃபினா..:))

    நன்றி மாதவி..

    நன்றி சித்து..

    ஆமாம் சாந்தி..

    ஹேமா ..:))

    எப்பூடி சசி..:))

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)