திங்கள், 20 செப்டம்பர், 2010

நீ என்பதான ஒன்று..

எங்கு சென்றாலும் உன்னையும்
ஏந்திச் செல்கிறேன்..
இன்பச் சுமையாய் இருப்பதால்
இலகுவாய் இருக்கிறாய்...

எப்போது புகுந்தாய்..
எங்கிருந்து வந்தாய் ..
மஹிமா ., லகிமா.,
அணிமா அறியாமலே..

நினைவு விளக்கில்
அலாவுதீன் பூதமாய்
அவ்வப்போது எழுந்து ...


ஏஏஏய்ய்ய்ய் சொல் சொல்.
நீ ஏவலாளியா..
நான் ஏவலாளியா..

குழந்தையின்
பொம்மைத்தேராய்
இழுத்துச் செல்கிறேன்
உன் நினைவுகளை ...

இடறும் சமயம்
நடைவண்டியாய்
அவை என்னை
முன்னிழுத்துச் செல்கின்றன..

இரவு நேரக் குல்ஃபியைப் போல்
ஜில்லென்றும் ருசியாயும்
உறைந்து கிடக்கிறது
உனக்கான அன்பால்
என் இதயக் கோப்பை..

விரும்பியோ
விரும்பாமலோ கிடைத்த
விபரீத ராஜயோகம் நீ...

எழுந்தவுடன்.,
சாப்பிடும் முன்.,
சாப்பிட்ட பின்...
இரவுத் தூக்கத்துக்கு முன்
கனவுக்குள் என
மருந்துச் சிட்டையாய்
நினைவுறுத்திக் கிடக்கிறது
நீ என்பதான ஒன்று..

33 கருத்துகள்:

  1. குழந்தையின்
    பொம்மைத்தேராய்
    இழுத்துச் செல்கிறேன்
    உன் நினவுகளை ...

    இடறும் சமயம்
    நடைவண்டியாய்
    அவை என்னை
    முன்னிழுத்துச் செல்கின்றன..


    .....அக்கா, கவிதை ரொம்ப அழகாக இருக்குதுங்க.

    பதிலளிநீக்கு
  2. ////எழுந்தவுடன்.,
    சாப்பிடும் முன்.,
    சாப்பிட்ட பின்...
    இரவுத் தூக்கத்துக்கு முன்
    கனவுக்குள் என
    மருந்துச் சிட்டையாய்//

    உங்கள் உவமைகள் என்னை அசர வைக்கின்றன.காணும்,கைப்படும் பொருள் எல்லாம் உவமைகளாக மாற்றும் திறன்..அசர வைக்கிறீர்கள்

    மற்றுமொரு அருமையான கவிதை தேனம்மை..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. / விரும்பியோ
    விரும்பாமலோ கிடைத்த
    விபரீத ராஜயோகம் நீ... /

    உண்மை பல பேருக்கு.. எனக்கும்...

    பதிலளிநீக்கு
  4. //குழந்தையின்
    பொம்மைத்தேராய்
    இழுத்துச் செல்கிறேன்
    உன் நினவுகளை ...
    //

    akka super.

    பதிலளிநீக்கு
  5. இனிமையாகவும் எளிமையாகவும் அசத்தல் அக்கா.

    பதிலளிநீக்கு
  6. ஏஏஏய்ய்ய்ய் சொல் சொல்.
    நீ ஏவலாளியா..
    நான் ஏவலாளியா..
    -mmmm ,asathungaa

    பதிலளிநீக்கு
  7. சில நினைவுகள் எப்போதும் இனிமையாய் :)

    பதிலளிநீக்கு
  8. எந்த ‘பத்தி’யை பத்தி சொல்றது

    அருமைங்க ...

    பதிலளிநீக்கு
  9. இரவு நேரக் குல்ஃபியைப் போல்
    ஜில்லென்றும் ருசியாயும்
    உறைந்து கிடக்கிறது
    உனக்கான அன்பால்
    என் இதயக் கோப்பை..//

    ரசித்தது மத்த வரிகளைவிட..

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொரு வரியையும் ரசித்து வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. மிக ரசிக்கவைத கவிதை. இரவுநேர குல்ஃபியை போல், குறுநகையுடன் ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  12. விபரீத ராஜா யோகமா ? ம்ம்ம்

    எப்போதிலிருந்து ஜோதிடர் ஆனீர்கள் ?

    ஹா ஹா ஹா !!!

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. வசீகரிக்கும் கவிதை
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வசீகரிக்கும் கவிதை
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அனுபவித்து எழுதினதுபோலவே வரிகளும் இணைந்து நிற்கின்றன.. நல்லாயிருக்குங்க மேடம்...

    பதிலளிநீக்கு
  16. //எழுந்தவுடன்.,
    சாப்பிடும் முன்.,
    சாப்பிட்ட பின்...
    இரவுத் தூக்கத்துக்கு முன்
    கனவுக்குள் என
    மருந்துச் சிட்டையாய்
    நினைவுறுத்திக் கிடக்கிறது
    நீ என்பதான ஒன்று...//

    என்ன தேனக்கா இப்பவே இப்டித்தான் கனவு வருதா?..கவிதையும் உவமைகளும் அழகு...ரசித்தேன் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  17. தேனக்கா அது //அல்லாவுதீன்// அல்ல அலாவுதீன்...

    பதிலளிநீக்கு
  18. //நினைவு விளக்கில்
    அலாவுதீன் பூதமாய்
    அவ்வப்போது எழுந்து ...//
    இது நல்லா இருக்கு .!!
    கவிதை உண்மைலேயே அருமையா இருக்கு அக்கா ..!!

    பதிலளிநீக்கு
  19. அருமையான படைப்பு பின்னி பெடல் எடுதிடிங்க

    பதிலளிநீக்கு
  20. அருமையான படைப்பு பின்னி பெடல் எடுதிடிங்க

    பதிலளிநீக்கு
  21. தேனிடமிருந்து இன்னும் சில தேன்துளிகள்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  22. நல்ல வரிகள் தெனம்மை...
    ...அடடா இதுவும் அப்படித்தானா..?
    ...பாவம்... யாரொ...!!!!

    பதிலளிநீக்கு
  23. நன்றி சித்து., வெற்றி., வினோ., அமைதிச்சாரல்., சை கொ ப., குமார்., அக்பர்., ரோஹிணிசிவா., பாலாஜி., ஜமால்., அஹமத்., ரமேஷ்., அம்பிகா., விஜய்., வெறும்பய., ஆசியா., மேனகா., கார்த்திக்., தெருப்பாடகன்., சசி., பாலாசி., கனி., ஜிஜி., செல்வகுமார்., யாதவன்., வல்லி சிம்ஹன்., ஹரி..(என்னா ஒரு பொறாமை..!!!)

    பதிலளிநீக்கு
  24. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)