சனி, 18 செப்டம்பர், 2010

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்., ஹேமா மற்றும் நான்..

பண்டிகைகள் விநாயகர் சதுர்த்தியுடன் ஆரம்பிக்கின்றன..
எனவே அடுத்து அடுத்து விஷேச சிறப்பிதழ்கள்தான்..
அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் என்னுடைய பகிர்வு வந்து இருக்கு. சகோதரிகள் தங்கள் அம்மாவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்க .. சிறப்பானது அடுத்த அடுத்த இதழ்களில் வெளிவரும்.



சித்ரா நாகப்பனின் முதலீட்டுத் தொடர் காசுமழை மிகச் சிறப்பா வந்துகிட்டு இருக்கு.. அடுத்த மாதத்துக்கான உங்க முதலீடு சம்பந்தமான கேள்விகளை அனுப்புங்க
ருக்மணி அம்மாவின் திருக்குறள் கதைகளும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுக்கிட்டு இருக்கு.. சின்னக் குழந்தைகளுக்கு படிச்சுக் காண்பிங்க.. நல்ல அறிவுரைகள் இருக்கு..

இந்த மாதம் நம்ம ப்லாக்கர் துளசி கோபால் அறிமுகம் ஆகி இருக்காங்க.. சில பல நூறு .. ஏன் ஆயிரம் இடுகைகளுக்குச் சொந்தக்காரர்.. இவரோட இரண்டு நூல்கள் வெளிவந்து இருக்கு ..என் செல்லச் செல்வங்கள்.. நியுசிலாந்து அதுக்கு நம்ம ஜோதிஜி தன்னோட ப்லாக்கில விமர்சனம் எழுதி இருக்கார்..
இந்த மாதம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான் மக்காஸ் முயற்சி திருவினையாக்கும்.. எனவே முயற்சி செய்துக்கிட்டே இருங்க..

34 கருத்துகள்:

  1. துளசி மேடம், ருக்மிணியம்மா மற்றும் இதழில் இடம்பிடித்த அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. அம்மா என்றால் அன்பு,பிரசாதமும் அமிர்தமும் சிறிது கிடைத்தாலும் பிறவிப்பயன் தான் என்ற உங்கள் வரிகள் என்னை பாதித்தது,மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நாம தான் வெளியில அதிகம் சுத்தாத ஆளுன்னு தெரிஞ்சவங்க தானே. நமக்கு ஒரு கடுதாசி போட்டுருககலாமே. பாலபாரதி தளத்தில் துளசி கோபால் விசயத்தை பார்த்து விட்டு உள்ளே வந்தேன். அட நியூசிலாந்து நீங்களும் படிச்சுருப்பீங்க போலிருக்கு. அதென்ன நூறு ஆயிரம்ன்னு. அவங்க விட்டா லட்சம் தலைப்புகளை தொட்டவர் ன்னு ஒரு தனி இதழே நீங்க கொண்டு வர்ற மாதிரி அடிச்சு போய்க்கிட்டே இருக்காங்க. இதைப்பற்றி இந்த இதழ்பற்றி மேலோட்டமா சொன்னாங்க.

    அணைவருக்கும் வாழ்த்துகள். நீங்களும் ஒவ்வொருமுறையும் உயர உயர பறந்துக்கிட்டேயிருக்கீங்க.

    ஏன் லேடீஸ் பெசல் ஆண்கள் பெசலுக்கு வாய்ப்பில்லையா தேனம்மை.

    அப்புறம் 27ந்தேதி பங்காளிங்க மாமன் மச்சான் அக்காமாருங்களோட அவஸ்யம் வாங்க.
    இல்லத்தில் விசேடம்.

    இதுவரை தொடாத ஒரு விசயத்தை நாம் இருவருக்கும் பொதுவான ஒன்றை நட்சத்திரவாரத்தில் தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  6. ஹேமா பற்றி ஒன்றும் காணவில்லையே

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அக்கா...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    லேடீஸ் ஸ்பெஷலில் பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பா?
    சகோதரி ஹேமாவின் பெயர் தலைப்பில் இருக்கு. ஆனால் பகிர்வுக்குள் இல்லை என்று நினைக்கிறேன். சரி பாருங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வலையை தாண்டி, அடுத்த கட்டமாக லேடீஸ் ஸ்பெஷல் பேப்பர் பதிப்புகளில் (புத்தகங்களில்) உங்களின் படைப்புகள் வெளிவருவது கண்டு சந்தோஷமாய் இருக்கிறது....

    தொடர்ந்து மென்மேலும் இது போல் பல படைப்புகளை படைக்க வாழ்த்துகிறேன்..

    புத்தகங்களில் படைப்புகள் வெளிவரும் போது, அது வெகுவான வாசகர்களை சென்றடைகிறது...

    பதிலளிநீக்கு
  10. நன்றி தேனே.

    அடுத்த ஜென்மத்தில் என் புருஷன் கோபாலகிருஷ்ணனாவே இருக்கட்டும்:-))))

    லேடீஸ் ஸ்பெஷலில் இந்தவருட ஜூலை இதழிலும் என்னப்பற்றி ஒரு 'அரி'முகம் வந்ததென்று சொல்லிக்கொள்ள என் தன்னடக்கம்(?!!!) தடுக்குதேப்பா:-)))))

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. உயர பறக்கும் ராஜாளிக்கு வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. டீச்சர் அநியாயத்திற்கு இந்த தன்னடக்கம். கோபமா வருதுங்க.

    பதிலளிநீக்கு
  14. ஸ்பெஷல் லேடீஸ் அனைவருக்கும் வாழ்த்துகள் மா. தேனம்மா.
    @பட்டம் ஏதாவது ரெடி செய்யுங்கஜோதிஜி,டீச்சர் அடக்கம் அளவிட முடியாது.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  16. எல்லாரோடு சேர்த்து உங்களுக்கும் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள்!அம்மா கட்டுரையில் உருகிப்போனேன் சகோ தேனம்மை.கூடவே "என் இனிய இல்லம்" வலைப்பூவின் ஸ்நேகிதி(பாயிஷா காதர்)யின் முப்பதுவித சுவர் அலங்காரங்கள் இம்மாத் லேடீஸ் ஸ்பெஷல் இலவச இணைப்பில் வெளி வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் பூங்கொத்து வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. ஆகா, வாழ்த்துகள் எல்லாருககும்.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
    உங்களது பதிவுகள் வலைபக்கத்திற்கு புதியவளான எனக்கும் இதுபோல
    எழுதுவதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
    அதற்கு உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.நன்றி அம்மா..

    பதிலளிநீக்கு
  22. சிறப்புப் பெற்ற பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. லேடீஸ்... ஸ்பெஸல் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  25. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தேனக்கா

    பதிலளிநீக்கு
  26. //அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் என்னுடைய பகிர்வு வந்து இருக்கு. சகோதரிகள் தங்கள் அம்மாவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்க .. சிறப்பானது அடுத்த அடுத்த இதழ்களில் வெளிவரும்//

    வாழ்த்துக்கள் அக்கா...உங்க அம்மா பற்றிய படைப்பு படிச்சேன்... ரெம்ப நல்லா இருக்கு

    இந்த இதழுக்கு அனுப்ப மின்னஞ்சல் முகவரி தர இயலுமா? மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  27. எல்லாரோடு சேர்த்து உங்களுக்கும் வாழ்த்துகள் அக்கா..

    இதில் நாங்களும் கலந்துகலாமாக்கா அப்படின்ன எப்படி படைப்புகளை அனுப்புவது..

    பதிலளிநீக்கு
  28. நன்றி வசந்த்., மேனகா., வேல்ஜி., ஆசியா., வினோ., ஸ்ரீராம்., ஜோதிஜி., ( கட்டாயம் வந்துருவோம்..!) அது என்ன விஷயம்..??)., (ஹேமாமாலினி என்ற கவிஞர் ஜோதிஜி..)., கோபால்., சை கொ ப.,ரூஃபினா., குமார் ( அது ப்லாகர் சகோ ஹேமா இல்லைபா)., கோபி., துளசி கோபால்., விஜய்., வல்லிசிம்ஹன்., அஹமத்., ஹுசைனம்மா.,ஸாதிகா., ( ஆம் ஸாதிகா.. நான் என் மூலமாக வருவதை மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்.. சகோ பாயிஷாவுக்கும் வாழ்த்துக்கள்) ., அருணா., சின்ன அம்மிணி., ஜிஜி., கோகிலவாணி., நானானி., ராம்லெக்ஷ்மி., மாதேவி., தியா., சசி.,தங்கமணி., மலிக்கா..( மலிக்கா thenulakshman@gmail.com)என்ற ஐ டிக்கு அனுப்புங்கப்பா..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)