திங்கள், 6 செப்டம்பர், 2010

நதியலையில் ஆடும் நிலவு....

ஒளிந்தும் கரைவதுமான
விளையாட்டில் நீ....

நான் நீராய் உன்னைக் கையில் ஏந்தி..
பிம்பமென அறியாமல்...

நீ நிஜம் போலிருக்கிறாய்..
காலை வரை..

பின் பகல் முழுதும் தேடுகிறேன்..
மழுங்கின இதயத்தோடு..

மாலைப் பொழுதின் மயக்கத்தில்
பின்னும் உண்மை உணராத உள்ளத்தோடு..

உணர்வுப் பெருக்கில்
உன் வரவுக்காகக் காத்து நான்..


உன் பால் கரம் பட்ட பரவசத்தில்
சிற்றலையால் உள்ளம் துடிக்க.,

உள் உன்மத்தத்தோடும்..
ஒப்புமையில்லா உவப்போடும்...
உய்யமுடியாமல் அலைகிறேன்..

உணர்கிறோம் எந்த யுகத்திலும்..
நீ உயரே நிலவாகவும்..
நான் உன்னை ஏந்தும் நதியாகவும்..

21 கருத்துகள்:

  1. வழக்கம் போல் இன்னுமொரு அற்புதமான கவிதை வாழ்த்துகள் தேனம்மை!!!

    பதிலளிநீக்கு
  2. //உணர்கிறோம் எந்த யுகத்திலும்..
    நீ உயரே நிலவாகவும்..
    நான் உன்னை ஏந்தும் நதியாகவும்.//
    ஆழ்ந்த ஏக்கம் கொண்ட வரிகள் இவை.

    நிலவு எல்லா காலத்திலும் பரவசமான நினைவுகளை தரவல்லது,

    பதிலளிநீக்கு
  3. பின் பகல் முழுதும் தேடுகிறேன்..
    மழுங்கின இதயத்தோடு..

    மாலைப் பொழுதின் மயக்கத்தில்
    பின்னும் உண்மை உணராத உள்ளத்தோடு..

    அழகியதொரு தேடல்
    இலக்கிய செறிவு மிக்க வார்த்தைகள்
    கோர்க்கப்பட்ட கவிதை
    படிக்க சுகம்!!!

    பதிலளிநீக்கு
  4. உள் உன்மத்தத்தோடும்..
    ஒப்புமையில்லா உவப்போடும்...
    உய்யமுடியாமல் அலைகிறேன்.. அருமையான வரிகள்..........வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. உணர்கிறோம் எந்த யுகத்திலும்..
    நீ உயரே நிலவாகவும்..
    நான் உன்னை ஏந்தும் நதியாகவும்..///

    ஏக்கத்தை இதை விட அழகாக சொல்ல முடியாதே.

    பதிலளிநீக்கு
  6. நான் நீராய் உன்னைக் கையில் ஏந்தி..
    பிம்பமென அறியாமல்...
    ]]

    அழகாயிறுக்கு வாழ்க்கை பல நிலைகள் இவ்வாறு தான்

    நிலாவும் நீரும் போல் ...

    பதிலளிநீக்கு
  7. //நான் நீராய் உன்னைக் கையில் ஏந்தி..
    பிம்பமென அறியாமல்...
    //

    varikal ovvonrum arumai akka.

    பதிலளிநீக்கு
  8. நதியில் குளிர்ச்சியா

    நிலவில் குளிர்ச்சியா
    ...
    நதியியலையில் ஆடுவதால்

    நிலவும் நதியும் சேர்ந்த குளிர்ச்சியா

    எதில் குளிர்ச்சி எதனால்

    எதற்கு குளிர்ச்சி என்றே

    புதிர் போட்ட வண்ணம்

    புலம்பியது எண்ணம்

    எதிரில் கண்டேன் தேவதைப் பெண்ணை


    இவளின் வட்ட முகம் பொலிவா
    இவளை வர்ணிக்கும் தமிழ்க் கவிதைப் பொலிவா
    இவளால் கவிதைக்கு அழகா
    கவிதையால் இவளுக்கு அழகா
    நதியலையில் ஆடும் நிலவால்
    நதியும் நிலவும் குளிர்ச்சிதனைக் கூட்டிடும்;
    கவிதைமுகத்தில் பெண்ணும்

    பெண்முகத்தில் கவிதையும் அழகைக் காட்டிடும்

    "கவியன்பன்" கலாம்

    பதிலளிநீக்கு
  9. //உணர்வுப் பெருக்கில்
    உன் வரவுக்காகக் காத்து நான்..

    உன் பால் கரம் பட்ட பரவசத்தில்
    சிற்றலையால் உள்ளம் துடிக்க.,//

    நதியிலாடும் நிலா...நான் நிலா ரசிகன் இது நட்சத்திர கவிதை வாழ்த்துகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  10. மிக அருமை தேனக்கா. நதியில் காயும் நிலவு நினைக்கவே அற்புதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. கவிதை நல்லா இருக்கு.

    இந்த மாத தேவதை இதழில் உங்கள் பதிவு வந்துள்ளது .

    வாழ்த்துக்கள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  12. கவிதை நன்று தேனக்கா.நானும் எனது வலைப்பூவில் கவிதைகள் எழுதி
    வருகிறேன்.எனக்கு அவற்றை நீங்கள் விமர்சிக்க வேண்டும் என ஆவலாய்
    உள்ளது.(உங்களை தொடர்ந்து வாசிக்கிறேன் என்று பொய் சொல்ல மாட்டேன்.
    ஆனால் அடிக்கடி வாசிப்பதுண்டு).அது என் எழுத்துக்கள் மேலும் செம்மைப்பட உதவும்.
    மேலும் எனது வலைப்பூவை எப்படி பிரபலப்படுத்துவது என தெரியவில்லை.
    நீங்க உதவி செய்விங்களா அக்கா?

    பதிலளிநீக்கு
  13. அருமையான தலைப்புங்க...

    தலைப்பை கற்பனை பண்ணும் போதே ஒரு கவிதையாகி vidukirathu.

    பதிலளிநீக்கு
  14. உணர்கிறோம் எந்த யுகத்திலும்..
    நீ உயரே நிலவாகவும்..
    நான் உன்னை ஏந்தும் நதியாகவும்..

    ம்ம்ம்... என்ன வரிகள் தேனக்கா ...

    பதிலளிநீக்கு
  15. நன்றி சை கொ ப., வெற்றி., வேடியப்பன்., சக்தி., நித்திலம்., ரமேஷ்., ஜமால்., குமார்., கலாம்., கனி., அக்பர்,., கலாநேசன்., கோமதிஅரசு., வருணன்., முனியப்பன் சார்., பிரபு., கமலேஷ்., செந்தில்

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)