செவ்வாய், 29 ஜூன், 2010

பிடிவாதமும் பிடிமானமும்

சாயங்காலங்களில் சம்புடங்கள் திறந்து
அம்மா தரும் இனிப்பாய்..
தினம் உன் குரலை எதிர்பார்த்து..

பேதையை மயக்கும்
போதையாய் உன் குரல்..

திறந்திடு சீசேம் என
காட்டிவிட்டு மறைந்தாய்...
அற்புதக் குகையே என்னை
உள்வைத்து மூடிவிடு..
கடவுச்சொல் மறந்து கிடக்க..


பாகாய்க் கொதித்துப்
பக்கமெல்லாம் வழிந்து
உருக்கி விட்டாய்..
உருகிக் கிடக்கிறேன்..
வெள்ளைச் சதுரத்தில்..

பொங்கலாய் மனம் பொங்கிவர
அரிசியோடு கொஞ்சம்
அள்ளிப் போடு ஆசையையும்..
வெல்லத்தோடு உன் உள்ளத்தையும்..

பிடிமானம் ஏதுமில்லை.
பிடிவாதம் விட்டுவிடு..

நேரமற்ற நேரங்களில்
நினைவுகள் அறுந்தறுந்து
நினைப்பாகக் கிடக்கிறேனே..
நினைவிருக்கா உனக்கு என்னை..

37 கருத்துகள்:

  1. பொங்கலாய் மனம் பொங்கிவர
    அரிசியோடு கொஞ்சம்
    அள்ளிப் போடு ஆசையையும்..
    வெல்லத்தோடு உன் உள்ளத்தையும்..

    ..... அக்காவின் அன்பின் முன் , பிடிவாதம் எப்படி வேகும் ? அருமையான கவிதை , அக்கா.

    பதிலளிநீக்கு
  2. வார்த்தைகள் அருவிகளாய் கொட்டுகின்றன. புதிது புதிதாய் வார்த்தை பிரயோகங்கள். மனதை கொள்ளை அடிக்காமல் போகுமா.

    பதிலளிநீக்கு
  3. உள்ளத்தை உருக்கும் கவிதை.

    பதிலளிநீக்கு
  4. "பிடிமானம் ஏதுமில்லை.
    பிடிவாதம் விட்டுவிடு"

    (பிடிவாதமெ
    பிடிமானம்தானெ...
    சில நேரங்களில்....
    இல்லையா தேனம்மை..?)

    இந்தக்கவிதையில் வார்த்தைச்
    சுழற்சிகளை மீறி ஒரு வலி
    தெரிகிறது....
    காலச்சூழலில் சிக்கித்தவிக்கும்
    ஒரு இயலாமை தெரிகிறது...

    உங்கள் கவிதைகளில்
    இது ஒரு தனி....
    உண்மையும் எதார்த்தமும்,
    தமிழும் சேரும்போது
    தனி அழகுதான்...
    அதுவும் அது
    தேனம்மையிடமிருந்து எனும்போது.......
    சொல்லவே வேண்டாம்.....

    பதிலளிநீக்கு
  5. //அற்புதக் குகையே என்னை
    உள்வைத்து மூடிவிடு..
    கடவுச்சொல் மறந்து கிடக்க..//
    Then unda vandaai neenga kirangiyiruppathu theriyuthakkaa... Aaanal kalayil suriyan uthikkum bothu thaamari thiranthu vidum athu thaan yathaarththam... Inthaanga enga veettu anbu inippu pongal ungalukku.

    பதிலளிநீக்கு
  6. எப்பவும் புதுமைப் படைப்பு தேனக்கா !

    பதிலளிநீக்கு
  7. இதுவும் ஃபேஸ்புக் ஃபார்ம்வில்லே பத்தியா அக்கா? ஹி.ஹி..

    பதிலளிநீக்கு
  8. //பொங்கலாய் மனம் பொங்கிவர
    அரிசியோடு கொஞ்சம்
    அள்ளிப் போடு ஆசையையும்..
    வெல்லத்தோடு உன் உள்ளத்தையும்..//

    அழகான வார்த்தை நடை

    பதிலளிநீக்கு
  9. கவிதை நல்லா இருக்கு அக்கா, அசத்துங்க

    பதிலளிநீக்கு
  10. நேரமற்ற நேரங்களில்
    நினைவுகள் அறுந்தறுந்து
    நினைப்பாகக் கிடக்கிறேனே..
    நினைவிருக்கா உனக்கு என்னை..///

    ரசித்த வரி... தேனக்கா அருமையான கவிதை...

    பதிலளிநீக்கு
  11. அக்கா அருமை

    தம்பியை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. //அற்புதக் குகையே என்னை
    உள்வைத்து மூடிவிடு..
    கடவுச்சொல் மறந்து கிடக்க..//

    என்னமோ ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரி :)

    பதிலளிநீக்கு
  13. \\ஹுஸைனம்மா சொன்னது…

    இதுவும் ஃபேஸ்புக் ஃபார்ம்வில்லே பத்தியா அக்கா? ஹி.ஹி.. \\

    சுத்தம்!!! ஹுசைன் அம்மா!பாவம் கஷ்ட்டப்பட்டு கவிதை எழுதின உங்க தேனக்கா;-))

    பதிலளிநீக்கு
  14. என்னமாய் வார்த்தைகள் அதனதன் பீடத்தில் அமர்ந்து தம்மைத் தாமே அலங்கரித்துக் கொள்கின்றன, ஒரு கவிதையாய்?

    பதிலளிநீக்கு
  15. நல்ல ரசனை அக்கா...


    திறந்திடு சீசேம் என
    காட்டிவிட்டு மறைந்தாய்...
    அற்புதக் குகையே என்னை
    உள்வைத்து மூடிவிடு..
    கடவுச்சொல் மறந்து கிடக்க..

    சாம்புடங்கள் நான் அறிந்தவரையில் புதிய வார்த்தை அக்கா நன்றிகள் பல

    சாயங்காலங்களில் சம்புடங்கள் திறந்து
    அம்மா தரும் இனிப்பாய்..

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை தேனக்கா.. நல்லாருக்கு.. பிடிவாதம் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. அருமையான கவிதை
    ரொம்ப நல்லாயிருக்கு, தேனம்மை.

    பதிலளிநீக்கு
  18. //திறந்திடு சீசேம் என
    காட்டிவிட்டு மறைந்தாய்...
    அற்புதக் குகையே என்னை
    உள்வைத்து மூடிவிடு..
    கடவுச்சொல் மறந்து கிடக்க..//

    ரெம்ப ரசித்தவரிகள் தேனக்கா அருமை...ஆனா ஆருக்கோ ஏதோ சொல்றாப்பல இருக்கே...சரியா??

    பதிலளிநீக்கு
  19. //நேரமற்ற நேரங்களில்
    நினைவுகள் அறுந்தறுந்து
    நினைப்பாகக் கிடக்கிறேனே..
    நினைவிருக்கா உனக்கு என்னை..//
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. கிச்சனில் பொங்கல் வைச்சுக்கிட்டே இந்த கவிதையை எழுதினீங்களா?

    பதிலளிநீக்கு
  21. கவிஞர் தேனம்மை அவர்களே!

    மிக அழகான தங்கள் கவிதை வரிசையில் இதுவும் ஒன்று
    //நேரமற்ற நேரங்களில்
    நினைவுகள் அறுந்தறுந்து
    நினைப்பாகக் கிடக்கிறேனே..
    நினைவிருக்கா உனக்கு என்னை..//

    வார்த்தைகளும் வலிகளும் சேர்ந்து வாசகனை ஒரு அற்புதமான அனுபவத் தளத்திற்கு இககவிதை அழைத்துச் செல்கிறது

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    பதிலளிநீக்கு
  22. ஆஹா..! என்னே இனிப்பு வரிகள்..//பொங்கலாய் மனம் பொங்கிவர
    அரிசியோடு கொஞ்சம்
    அள்ளிப் போடு ஆசையையும்..
    வெல்லத்தோடு உன் உள்ளத்தையும்..
    //

    பதிலளிநீக்கு
  23. //அற்புதக் குகையே என்னை
    உள்வைத்து மூடிவிடு..
    கடவுச்சொல் மறந்து கிடக்க.//

    அசத்தல் வரிகள்....

    பதிலளிநீக்கு
  24. அசத்தல் வரிகள்..!
    அருமையான கவிதை அக்கா.

    பதிலளிநீக்கு
  25. அசத்தல் வரிகள்..!
    அருமையான கவிதை அக்கா.

    பதிலளிநீக்கு
  26. எனக்கு ஒண்ணுமில்லே.. நான் நல்லாத்தான் இருக்கேன் என ஒரு பெண் சொன்னால் அது பொய்யாம்! இப்படி ஒரு சமீபத்திய புள்ளிவிவர அடிப்படையிலான ஆராய்ச்சி சொன்னது. அதுதான் உங்கள் கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வந்தது!

    நன்றாக எழுதுகிறீர்கள்.. செட்டிநாட்டு தமிழென்றால் சும்மாவா?!

    வலைப்பூ உட்பட எதிலுமே பிரசுரம் ஆகியிராத கவிதையோ கட்டுரையோ அனுபிவைத்தால் ‘இவள் புதியவள்’ பெண்கள் மாத இதழில் வெளியிட உடனடி பரிசீலணைக்கு ஸ்பெஷல் டிக்கெட் வாங்கித் தருகிறேன்..

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. The poem brings out
    Unspoken pains
    And
    Hideen tears

    Out of many suffering hearts

    பதிலளிநீக்கு
  28. பொங்கலாய் மனம் பொங்கிவர
    அரிசியோடு கொஞ்சம்
    அள்ளிப் போடு ஆசையையும்..
    வெல்லத்தோடு உன் உள்ளத்தையும்..

    superb lines

    பதிலளிநீக்கு
  29. கவிதையாக தீட்டப்பட்ட காவிய வரிகள்.
    தேனாய்,தேனமுதமாய் கவிதை வரிகள்.
    அழகு.

    பதிலளிநீக்கு
  30. நன்றி சித்து., ரமேஷ்.,ஆசியா உமர்., அரவிந்த் யுவராஜ்.,மயிலு., ஹேமா., ஹுஸைனம்மா.., வழிப்போக்கன்., சசிக்குமார்.,இர்ஷாத் விஜய்., முனியப்பன் சார்.,நேசன்., அபி அப்பா., ராமமூர்த்தி.,ராம்ஜி., மேனகா., செந்தில்குமார்.,ஸ்டார்ஜன்., அருணா., அம்பிகா.,ஸ்ரீராம்., அக்பர்., கனி.,சரவணன்., ப்ரேமா மகள் ., வெற்றி.,ஸாதிகா., ஜெய்., குமார்.,கௌதம்., ஜெயராஜ்., சக்தி,., அபுல்பசர்.

    பதிலளிநீக்கு
  31. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)