ஞாயிறு, 27 ஜூன், 2010

நெட் போதை

விடிந்ததும் எழுந்ததும்
லாப்டாப்பின் சுவிட்சை
சொடுக்குவதுதான் சுப்ரபாதம்...
தூக்கம் கண்ணை கழட்டும் வரை..

பல்தேய்த்துக் கொண்டே
ஜிமெயில்., யாஹூ., வலைத்தளம்
மேய்ந்தது போக இப்போது
அதிபோதை உச்சமாக முகப்புத்தகம்...

காபியோடு ஒரு குட்மார்னிங் டாகிங்.,
டிபனோடு ஒரு வியூ நோட்.,
லஞ்சோடு ஒரு போட்டோ டாகிங்..,
டின்னரோடு ஒரு குட்நைட் டாகிங்..


யாராவது எதிலாவது
டாக் செய்யாவிட்டால்
இருக்கிறோமோ என்ற சந்தேகம்..

வாரம் ஒரு முறையேனும்
ப்ரொஃபைல் பிக்சர் மேனியாவில்
புகைப்படம் மாற்றி..,

பாத்ரூமில்தான் எடுப்பதில்லை..
காபி குடிப்பதும்., குழுவாய் சந்திப்பதும்.,
ஃபோட்டோ கமெண்ட்ஸ் போடுவதுவும்..,
பாட்டுக்கள் கேட்பதுவும்..,

நோட்டிஃபிகேஷன் வைரஸில்
பாராட்டித் தீர்ப்பதும்.,
ஹோமில் நுழைந்து
எல்லாவற்றையும் விரும்புவதும்...,

கமெண்ட் போடுவதும்.,
ஸ்மைலி போடுவதும்...,
போட்ட கமெண்ட்ஸை லைக்பண்ணுவதும்..,
டவுன்லோடு செய்வதுவும்.,

லிங்குகளை அடுக்குவதும்..,
மெயிலில் டாக் செய்து படுத்துவதும்..,
குருப்பிலோ., ஃபான் க்ளப்பிலோ
சேரச்சொல்லி அழைப்பதுவும்..,

யம்மா யம்மா யம்மம்மா.,
புசிப்பவை ருசிப்பவை
(கஞ்சா.,பீடி., சிகரெட்., சுருட்டு.,
பான்., ப்ரவுன் சுகர்., ஹஷீஷ்.,
ஹெரோயின்., பெத்தடின்.,
பாக்கெட் சாராயம்., மது., கள்ளு.,
சொண்டிச் சோறு., போதை ஊசி.,)
மட்டும் போதையில்லை..

அதிதீவிரமாகக் களைய...
திருத்த வேண்டிய போதை இது..
இதில் ஆழ்ந்து முயங்கி
நேரம் காலம் இல்லாமல்..,

உணவு உண்ணாமல்.,
ஒழுங்காக உறங்காமல்.,
கழுத்தெலும்பும் கண்ணும் பழுதாகி.,
மனிதன் தின்னும் வலையில்
வலை தின்னும் மனிதனாகி..,

வருங்கால நோவு இதுதான்..
வரையறுத்துக் கொள்ளுங்கள் நேரத்தை..
வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷனில்
வீணாகி விடாமல்..

டிஸ்கி 1:- சர்வதேச போதை ஒழிப்பு தினக் கவிதையாக 26. 6 2010 யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது..

டிஸ்கி 2:- அன்பு நண்பர் அஜயன் பாலாவின் 115 தமிழ் அறிஞர்களின் வாழ்வியல் குறிப்பு கொண்ட நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது.. வாழ்த்துக்கள் அஜயன்.. பகிர்வுக்கு நன்றி மணிவண்ணன்..

டிஸ்கி 3 :- செம்மொழி மாநாட்டுப் பட்டிமன்றத்தில்
பங்கேற்ற அன்பு நண்பர் S.Ve. சேகருக்கு
வாழ்த்துக்கள்.

54 கருத்துகள்:

  1. இடுகை இட்டது ஞாயிறு காலை 5.30 .
    சரியான போதை தான் தேனம்மை .
    என்னையும் சேர்த்து சொல்கிறேன்
    மீள்வோம்

    பதிலளிநீக்கு
  2. \\உணவு உண்ணாமல்.,
    ஒழுங்காக உறங்காமல்.,
    கழுத்தெலும்பும் கண்ணும் பழுதாகி.,
    மனிதன் தின்னும் வலையில்
    வலை தின்னும் மனிதனாகி..,\\
    மீள்வதற்கு வழி தெரியாத போதை..
    பாராட்டுக்கள்தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. பாத்ரூமில்தான் எடுப்பதில்லை..
    உச்ச பட்ச நையாண்டி!
    எனக்கு 3 நாட்களாக மொடெம் அவுட்!
    நிஜமாகவே ஒரு ரிலிஃப்! இப்போது மீண்டும் கணினி முன் மந்திரித்து விட்ட கோழி மாதிரி...
    ஆனாலும் முகம் தெரியாத நண்பர்களுடன் அளவளாவும் சுகம் தனிதான்.. எதுவும் அளவோடு இருந்தால் நலமே..

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப சரியாக சொன்னீர்கள் தேனம்மை, வளர்ந்த பிள்ளைகளைக்
    கொண்டவர்கள் இப்படி இருந்தாள் பரவா இல்லை, வாழ்வின் தொடக்கத்தில் இருந்தால் வாழ்வைத் தொலைத்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  5. வலையுலகில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கவிதை.நல்ல இடுகை.

    பதிலளிநீக்கு
  6. ///வருங்கால நோவு இதுதான்..
    வரையறுத்துக் கொள்ளுங்கள் நேரத்தை..
    வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷனில்
    வீணாகி விடாமல்..////

    அருமை அருமை.... அத்தனையும் முத்தான வரிகள்...!!
    பகிர்வுக்கு நன்றி அக்கா :-)))
    வாழ்த்துக்கள்...!!

    பதிலளிநீக்கு
  7. மீள்க விரைவாய்

    உங்களுக்கு எனது தளத்தில் விருது தந்துள்ளேன்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. சரியா சொன்னீங்க இது சாதாரண் போதையில்லை மகாஆஆஆஆ போதை.

    பதிலளிநீக்கு
  9. நானும் வெகு போதையில்

    மீளும் எண்ணம் கூட இல்லாமல்

    சிறப்பான கவிதை.

    பதிலளிநீக்கு
  10. பாத்ரூமில்தான் எடுப்பதில்லை..
    ஹஹ்ஹா.. ஆமாங்க.. ஆமாங்க..

    பதிலளிநீக்கு
  11. என்னத்த சொல்ல அக்கா, மெஷின் மாதிரி ஆயிட்டோம்.

    பதிலளிநீக்கு
  12. மீள முடியாத கட்டுபடுத்தவும் கூடாத நோய் ஆகி விட்டது . good post

    பதிலளிநீக்கு
  13. எனக்கு இந்த பிரச்சனை அந்த அளவுக்கு முற்றி போகவில்லை, காரணம் நான் இல்லை, என் புறச்சூழல் !!

    பதிலளிநீக்கு
  14. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த போதை மாறி விடும் நமக்கு,

    வேறு எதும் போதை வந்து விடும். அமெரிக்க சந்தையாளர்கள் வேறு ஒரு போதையை கண்டு பிடித்து விடுவாரகள் அதற்குள்

    பதிவு மிக அருமை.

    எஸ் ராமகிருஷ்ணன் மிக அழகாய் எழுதி உள்ளார், கணினி போதை குறித்து (திரை பார்த்தல்).
    http://www.sramakrishnan.com/view.asp?id=418&PS=1

    பதிலளிநீக்கு
  15. எல்லாவற்றயும் விட வீட்டில் உள்ள குழந்தகள்,மனைவி இவர்களின் வருத்தம்,திட்டு,ஆதங்கம்.என்நேரமும்
    கம்பியுட்டரிலே...அப்படி என்னதான்.இருக்கோ..அதையே..கட்டிகிட்டு அழுவுங்க...இந்த வசையை தாங்கும் மன பக்குவமும் வேண்டும்

    பதிலளிநீக்கு
  16. இதே கருத்தைத்தான் வலைச்சரத்திலும் எழுதியிருந்தேன்.

    கண்ணுக்கு தெரியாத மனிதர்களை நம்பும் அளவுக்கு அருகில் இருப்பவர்களை நம்புவதில்லை.

    அருமையான கவிதை நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  17. ஆங்கிலத்தமிழில் சொடுக்கிய சவுக்கடி.

    ரத்தம் வழிந்தாலும் துடைத்து விட்டு அனுபவிக்கும் ராஜபோதையிது.

    அடுத்தவரை அழிக்க அனானி
    சொறிவதை வேடிக்கை பார்க்க கும்மி
    கூவியழைக்க மின் அஞ்சல்
    மாட்டியதை ரசிக்க்கவும் ஒரு கூட்டம் ஆனால் மாட்டும் வரை நிற்காது இந்த ஆட்டம்.

    பதிலளிநீக்கு
  18. பயமா இருக்குங்க அக்கா !
    ஆமா என்ன பண்றதுன்னு தெரியலையே !!!!@@#%^%

    பதிலளிநீக்கு
  19. வலை போதையிலிருந்து
    விடுபட நீங்கள் காட்டிய பாதை,
    இந்தக் கவிதை!
    ந்ன்றே சொன்னீர்கள்
    நன்றியக்கா!

    பதிலளிநீக்கு
  20. அருமையாக அலசி பின்னிட்டீர்கள் சகோதரி.பிடியுங்கள் பூங்கொத்தை.

    பதிலளிநீக்கு
  21. இதுக்கு மலேரியா மாதிரி நெட்டேரியான்னு பேர் வைச்சாசு எப்பவோ!

    பதிலளிநீக்கு
  22. அதிதீவிரமாகக் களைய...
    திருத்த வேண்டிய போதை இது..
    இதில் ஆழ்ந்து முயங்கி
    நேரம் காலம் இல்லாமல்..,//

    மிக சரிதான்.

    பதிலளிநீக்கு
  23. //விடிந்ததும் எழுந்ததும்
    லாப்டாப்பின் சுவிட்சை
    சொடுக்குவதுதான் சுப்ரபாதம்...
    தூக்கம் கண்ணை கழட்டும் வரை..

    பல்தேய்த்துக் கொண்டே
    ஜிமெயில்., யாஹூ., வலைத்தளம்
    மேய்ந்தது போக இப்போது// ஹி..ஹி. இங்கயும் அதே தான் நடக்குது...இதனால் காலையிலயே வீட்டுக்காரர்கிட்ட அர்ச்சனை வாங்குறேன்..இதெல்லாம் நம்ம காதுல ஏறுமா...ஹா...ஹா..

    சும்மா அன்னிக்கு மட்டும் ஏதோ கம்ப்யூட்டர் பார்க்காத மாதிரி இருப்பேன் அப்புறம் வழக்கமா நம்ம வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்...ஏதோ நீங்க என் செய்கையை கவனித்த எழுதியது மாதிரி இருக்குக்கா....

    பதிலளிநீக்கு
  24. சரியாகச் சொன்னீர்கள்!
    இது ஒரு சிலந்தி வலை!
    இந்த வலையில்,
    சிலந்தி,
    பூச்சிகளின் உயிரை
    எடுப்பதில்லை..
    வலையே எடுக்கிறது,
    கொஞ்சம் கொஞ்சமாக..
    கழுத்து வலி,
    முதல் பலி!!

    பதிலளிநீக்கு
  25. எல்லாருக்கும் இந்தக் குழப்பம் இருக்குக்கா..!

    பதிலளிநீக்கு
  26. எப்பிடித் தேனக்கா அப்பிடியே சொல்றீங்க.ஓ....எல்லோரும் நீங்களும்கூட அப்பிடித்தானோ !

    பதிலளிநீக்கு
  27. ///இடுகை இட்டது ஞாயிறு காலை 5.30 .
    சரியான போதை தான் தேனம்மை .
    என்னையும் சேர்த்து சொல்கிறேன்
    மீள்வோம் //

    அவ்வவ்வ்வ்வ்.......ஆமா..ஆமா...
    வாழ்துகள் தேனக்கா,...

    பதிலளிநீக்கு
  28. வருங்கால நோவு இதுதான்..
    வரையறுத்துக் கொள்ளுங்கள் நேரத்தை..
    வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷனில்
    வீணாகி விடாமல்..


    .....அக்கா....... பிடிங்க பூங்கொத்து! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  29. தன்னை அறிதல் ஞானம்
    அறிந்தது உரைத்தல் மேன்மை

    நன்மையே விளைக

    பதிலளிநீக்கு
  30. meetimer add on for firefox will track the browsing habits. useful to measure the net addiction.

    பதிலளிநீக்கு
  31. Laptop, on செய்யும்போது இருக்கிற வேகம், மணித்துளிகளை விரயம் செய்து கடியாரத்தை நோக்கும்போது வெருப்பாக மாறி என்னையே நோகடிக்கிறது சந்தேகமில்லாமல் இது போதைதான்... நன்றாகசொன்நீர்கள்..தேனம்மை..

    பதிலளிநீக்கு
  32. //மனிதன் தின்னும் வலையில்
    வலை தின்னும் மனிதனாகி..,//

    :)

    பதிலளிநீக்கு
  33. இப்போதைய வாழ்வை அப்படியே கவிதையில் பிரதிபலித்து விட்டீர்கள்.அருமை

    பதிலளிநீக்கு
  34. கவிதை நல்லாயிருக்கு அக்கா, நம்மளுக்கு ஏற்ற பதிவு. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. "அங்கயே” படிச்சுட்டேன்!! சூப்பர். இதுக்குப் பயந்துதான், நான் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் வரதில்லை!! ரியல் வேர்ல்ட் உறவு/நட்புகளை ’தொடர்ந்து’ வரவே நாள் போதமாட்டேன்கீறது.

    பதிலளிநீக்கு
  36. தங்க,கதிரவன்30 ஜூன், 2010 அன்று 3:08 PM

    அனுபவித்து எழுதப் பட்ட கவிதை.

    பதிலளிநீக்கு
  37. ஆம் பத்மா.,அம்பிகா.,ரிஷபன்.. ராஜ்

    பதிலளிநீக்கு
  38. ஆம் பத்மா.,அம்பிகா.,ரிஷபன்.. ராஜ்

    பதிலளிநீக்கு
  39. ஆம் பத்மா.,அம்பிகா.,ரிஷபன்.. ராஜ்

    பதிலளிநீக்கு
  40. ஆம் பத்மா.,அம்பிகா.,ரிஷபன்.. ராஜ்

    பதிலளிநீக்கு
  41. நன்றி ஆசியா., ஆனந்தி., விஜய்., ஜமால்., ஜெய்

    பதிலளிநீக்கு
  42. நன்றி ஆசியா., ஆனந்தி., விஜய்., ஜமால்., ஜெய்

    பதிலளிநீக்கு
  43. நன்றி முத்துலெச்சுமி., எறும்பு., ஷஃபி., மாகி, ஷர்புதீன்.,ராம்ஜி., தமிழ்வெங்கட்.,அஹமத்., அக்பர்., ஜோதிஜி.,பாலா., பாசமலர்., ஸாதிகா.,நிஜாம்., அருணா., கருணாகரசு.,கலாநேசன்., மேனகா.,ராமமூர்த்தி., கண்ணகி., உண்மைத்தமிழன்.,ஹேமா., முனியப்பன் சார்., கனி.,சித்ரா., நேசன்., ராமலெக்ஷ்மி.,பெயரில்லா., சிங்கம்., LK., அஷோக்., வழிப்போக்கன்., சசி., ஹுசைனம்மா

    பதிலளிநீக்கு
  44. உணவு உண்ணாமல்.,
    ஒழுங்காக உறங்காமல்.,
    கழுத்தெலும்பும் கண்ணும் பழுதாகி.,
    மனிதன் தின்னும் வலையில்
    வலை தின்னும் மனிதனாகி..,\\
    மீள்வதற்கு வழி தெரியாத போதை..

    சத்தியமான வார்த்தை

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)