செவ்வாய், 1 டிசம்பர், 2009

நீர் தேங்கிக் கிடக்கிறது

நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்...

இலைச் சருகுகளால்
வசந்தகாலப் பூக்களால்
அர்ச்சிக்கப்பட்டு...

தென்றலில் குளித்துக்
குளிர்ந்து போன
நீர் தேங்கிக் கிடக்கிறது....

வழிப்போக்கருக்கு என்ன தெரியும்..?
வேர்களுக்குத்தான் தெரியும் ....
வாய்க்கால் சுனையென்று...

சுரந்து சுரந்து சுமந்து
சலித்துப் போய்
வாய்மூடிக்கொண்ட
நீர் தேங்கிக் கிடக்கிறது....

அட... அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
கொஞ்சம் கால் நனைத்தாவது
கலக்கிச் சென்றாலென்ன....?

சருகுகளின் தடவல்களில்
பூக்களின் முத்தங்களில்
சமனப்பட்டுக் கிடந்த அது
சத்தங்களை விரும்புகிறது ....

குதிரைகளின் குளம்படிகளுக்கு.... ..
மாடுகளின் கூர்வாய்களுக்கு.....
மான்களின் முகங்களுக்கு....
முயல்களின் உறிஞ்சல்களுக்கு...
ஏங்கிக் கொண்டே....

அந்த நீர் தேங்கிக் கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்....

வேர்களின் விசாரிப்புகளுக்கு ...
மானுடத்தின் இறைச்சலுக்கு.....

கரங்களின் வருடல்களுக்காய்க்
காத்துப் பசலை பூத்துக் கிடக்கிறது...

மயில் தோகையாய் விரிந்து
ஒரு தொடுதலுக்குக் காத்திருக்கிறது...

அந்த நீர் இன்னும்
தேங்கிப் போய்க் கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்....

செத்த இலைகளுடனும்
பூக்களுடனும் பாசிகளுடனும்
உறவாடிக்கொண்டு ....

23 கருத்துகள்:

  1. இதுவும் ஒரு 27.9. 1984 ஆம் வருட வியாழக்கிழமை டைரிக்குறிப்பு ....

    என் பயணம் சிறக்க வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அருமை!!!!!!!!!!!!!!

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்
    உங்க‌ள் பூக்க‌ள் க‌விதைக‌ளை விட‌ ம‌ற்ற‌
    க‌விதைக‌ள் மிக‌ அழ‌கு!!!

    பதிலளிநீக்கு
  3. :)

    ரொம்ப நல்லா எழுதி இருகீங்க அப்பவே

    எவ்வளவு பரிணாமஙகளுடன் தேங்கி கிடக்கிறது உங்களுக்கு மட்டும் நீர்

    பதிலளிநீக்கு
  4. நன்றி தினேஷ் பாபு உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  5. 25 வருடங்களுக்கு முன்பே இவ்வளவு கலக்கலா எழுதியிருக்கீங்களே

    ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சகோதரி

    நீங்கள் இன்னும் உயர செல்ல வேண்டும்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. நீர் தேங்கிக்கிடக்கின்றது
    ஆம்
    அள்ளிப் பருகாவிட்டாலும்
    கால் நனைத்தாவது...
    அருமை

    பதிலளிநீக்கு
  7. 25 வருஷங்களுக்கு முன்பே இந்த மாதிரி கலக்கலா எழுதியிருகீங்களே

    ரொம்ப ஆச்சரியமா இருக்கு

    நீங்கள் செல்ல வேண்டிய உயரம் அதிகம்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. மயில் தோகையாய் விரிந்து
    ஒரு தொடுதலுக்குக் காத்திருக்கிறது

    ரெம்ப நல்லா இருக்கு கவிதை!!!

    பதிலளிநீக்கு
  9. உங்க இந்த கவிதைக்கு வயசு கிட்டத்தட்ட என்னோட வயசு...நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  10. நீர் போலவே கவிதைகளும் தேங்கிக் கிடக்கிறதே தேனு !

    பதிலளிநீக்கு
  11. நன்றி ஹேமா

    உங்களைக் காணவில்லையேன்னு நினைத்தேன் வந்துட்டீங்க

    பதிலளிநீக்கு
  12. நன்றி பாலா உங்க வாழ்த்துக்கும் வரவுக்கும்

    பதிலளிநீக்கு
  13. நன்றி விஜய்

    உங்க தொடர்ந்த வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

    உங்கள் ஊக்கமூட்டுதலே எழுதத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  14. நன்றி சுவையான சுவை உங்க பாராட்டுக்கும் விருதுக்கும் உங்க அன்பு அலையில் என்னை அடிசுக்கிட்டுப் போயிட்டீங்க

    பதிலளிநீக்கு
  15. நன்றி புலவரே

    உங்க வயசு என்ன

    எந்த வருஷம் எந்த மாசம் பிறந்தீங்க

    பதிலளிநீக்கு
  16. அன்பின் தேனம்மை

    1984ல் எழுதப்பட்ட கவிதையா

    நன்று நன்று - நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. நன்றி சீனா சார்

    உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  18. இதை விட சிறப்பா "தேங்கலை" கவிதைப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை.. இந்த கவிதை எழுதத் தூண்டியது எதுவாக இருக்கும் என யோசிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  19. நன்றி பட்டியன்

    உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    மனசும் இது போல சில சமயம் தேங்கிப்போகுதே அதுதான் எழுதத் தூண்டியது

    பதிலளிநீக்கு
  20. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)