சனி, 26 செப்டம்பர், 2009

நீலச்சங்குப்பூ

கறுப்பு வெதை போட்டு
சிறு வயசுப்பசங்க நாம
தினம் தண்ணீ
ஊத்திவந்தோம்...

பச்சையாய்
எலை வந்து
ஆகாயம் போல்
பூப்பூத்துச்சு...

பூத்த சங்கு
எல்லாத்துலயும்
அழகோட
ஓசை கேட்டுச்சு..

ஒத்த இதழால
புன்சிரிக்கும் சங்குப்பூ
உன் சிரிப்பைப்போல...

சங்குப் பூவெடுத்து
சங்குக்கழுத்தழகி
சனீஸ்வரனைச்
சுத்தி வந்த...

ஈஸ்வரன் சன்னதியில்
கண்மூடி ஸ்லோகம் சொல்லி
போட்ட பூ ஒவ்வொண்னும்
பவித்திரமாய் எம் மனசில்...

13 கருத்துகள்:

  1. இன்றுதான் உங்கள் வலைப்பூவை பார்த்தேன். கவிதைகள் அருமை.

    //இரவுப்பூச்சிகளின் நன்றி கானம்...
    இசைக்கு அடங்கா, காதுகொள்ளா,
    இரும்பூதெய்திய நவீன கானா...!!!
    //

    சின்ன வயதில் தோட்டத்து வீட்டில் கழித்த இரவுகள் நினைவில் மோதுகின்றது.

    பதிலளிநீக்கு
  2. // சங்குப் பூவெடுத்து
    சங்குக்கழுத்தழகி
    சனீஸ்வரனைச்
    சுத்தி வந்த...//

    ஆஹா... சங்குக் கழுத்தழகி... என்னே ஒரு உருவகம்.

    பதிலளிநீக்கு
  3. தேனு கவிதை காதலோடும் பக்தியோடும் கலந்து கலக்குது.உண்மை சொல்லுங்க பக்தியா காதலா நீலச்சங்குப்பூ !

    பதிலளிநீக்கு
  4. திரு எம். எம். அப்துல்லா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    //ஒரு இலட்சம் ஹிட்ஸ்களையும்,
    100 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்
    தடுமாறி,முட்டிமோதிக் குட்டிக்கரணம்
    அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர்
    வலைப்பூவை மேய்ந்து
    கொண்டிருக்கின்றீர்கள்.//

    followers 130 ikku mela exceed agittanga pola... ur blog is nice

    தன் மகளைச் சான்றோள் எனக் கேட்ட தந்தை.

    u r a true father indeed.
    visit imsai arasi too ...
    good humour sense of her

    பதிலளிநீக்கு
  5. ராகவன் அண்ணா

    ஹா ஹா ஹா

    உங்க பதிவுல பின்னூட்டம் கின்னஸ் ரேஞ்சுக்கு இருக்கு

    விமர்சனத்துக்கு நன்றீங்கன்னா

    பதிலளிநீக்கு
  6. பயபக்திங்க ஹேமா !!!
    சாமியப் பத்தி எழுதும்போதுஅவ்வளவுதான் எழுதமுடியுது...
    அதுதான் பயபக்திக் காதல்>>!!!

    பதிலளிநீக்கு
  7. இது உங்களின் 50 வது இடுகை. வாழ்த்த வயதில்லை.. அதனால் வணங்குகின்றேன்.

    3 மாதங்களில் 50 இடுகை என்பது மிகப் பெரிய விசயம்.

    பதிலளிநீக்கு
  8. எல்லாத்தையும் மிக நுணுக்கமாக
    கவனிக்கிறீர்கள் ராகவன்....
    கணக்கியல் மேலாளர் அல்லவா.......நன்றி

    யூத் ராகவன் அண்ணா வாழ்த்துங்கண்ணா போதும்... சின்னப் பிள்ளயவா வணங்குறது???

    பதிலளிநீக்கு
  9. கஷ்டம்தான்.. என்னை போல சின்ன பசங்களுக்கு எதாவது கவிதை எழுதுங்க மேடம்!!

    பதிலளிநீக்கு
  10. இது உங்களின் 50 வது இடுகை..வாவ்..
    பவித்திரமான எழுத்துக்கள் 5000 சீக்கிரமே தொட என் வாழ்த்துகள் (வாழ்த்த மனசிருந்தா போதும்தானே?!)

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)