வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனகாம்பரம்

ஊர்த்திருவிழா...
கிலுகிலுப்பை, ஊதல்
சின்னவனுக்கு...
பலூனும், பஞ்சு மிட்டாயும்
பெரியவளுக்கு...

தேரில் வந்த சாமி பார்த்து
தேங்காயுடைச்சு
முடிச்சாச்சு...

கியாஸ் லைட் வெளிச்சத்துல
நாயனமும் மோளமும்
ஒன்னுக்கொன்னு எசை பாட... .

கரகாட்டம் ஆடிவந்த
கறுத்த அழகி கூந்தலிலே
அம்பாரமாய் கனகாம்பரம்...

மெலிஞ்சிருந்த அவள்
கரகம் எடுத்துச்
சுற்றிச் சுற்றி ஆடயிலே
கனகாம்பரம் சுத்துனதுபோல்
ராட்டினமாய் எம்மனசும்...

14 கருத்துகள்:

  1. கடைசி வரிகள் தான் அட்டகாசம்..
    நல்லா அழகா எழுதுறிங்க.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி வினோத்

    ஜூலைக்காற்றில் புது இடுகை போடுங்க வினோத்

    யெங்ஸ்டர்ஸின் குரலா உங்க இடுகைகள் எனக்குப் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  3. // மெலிஞ்சிருந்த அவள்
    கரகம் எடுத்துச்
    சுற்றிச் சுற்றி ஆடயிலே
    கனகாம்பரம் சுத்துனதுபோல்
    ராட்டினமாய் எம்மனசும்... //

    யம்மாடி... கலக்கல் வரிகள்

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்டம் எழுதிக்கிட்டே நல்ல இடுகையும் எழுதுவது எப்படின்னு உங்ககிட்ட ஒரு பயிற்சி வகுப்புக்கு வரணும் ராகவன்

    சத்தமில்லாம எழுதி கலக்குறீங்க உங்க பதிவுல

    எல்லாரையும் இணைத்து எடுத்துச் செல்லும் நல்ல உள்ளம் உங்களுக்கு வாய்த்து இருக்கிறது

    வாழ்த்துக்கள் ராகவன்

    பதிலளிநீக்கு
  5. // thenammailakshmanan சொன்னது…
    பின்னூட்டம் எழுதிக்கிட்டே நல்ல இடுகையும் எழுதுவது எப்படின்னு உங்ககிட்ட ஒரு பயிற்சி வகுப்புக்கு வரணும் ராகவன்

    சத்தமில்லாம எழுதி கலக்குறீங்க உங்க பதிவுல

    எல்லாரையும் இணைத்து எடுத்துச் செல்லும் நல்ல உள்ளம் உங்களுக்கு வாய்த்து இருக்கிறது

    வாழ்த்துக்கள் ராகவன் //

    யக்கோவ்... ரொம்ப புகழறீங்க..

    நான் எழுதுவது எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றீங்க... சும்மா கிறுக்கிகிட்டு இருக்கோம்.

    நீங்க எழுதறீங்களே இது எழுத்து.
    ஹேமா அவர்கள் கவிதை, நேசமித்ரன் அவர்களின் கவிதைகள்... அதுதாங்க எழுத்துகளின் உயிர் நாடி. நான் எல்லாம் சும்மா.

    பின்னூட்டம் போடுவது நமக்கு இஷ்டமான ஒன்று. அதனால் அதை செய்து கொண்டு இருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கு நீண்ட ஒரு பின்னூட்டம் தந்திருந்தேன்.ஏன் வரவில்லையா ?இல்லை உங்கள் மனம் நோக எதையாவது எழுதிவிடேனா ?இது பின்னூட்டதிற்கு அல்ல தோழி.அறியத்தருவீர்களா.

    பதிலளிநீக்கு
  7. //யக்கோவ்... ரொம்ப புகழறீங்க..//

    எல்லாத் தம்பிங்களையும் அண்ணனாக்கிட்ட மாதிரி சந்தடி சாக்குல தங்கச்சியான என்னையும் அக்காவாக்கீட்டாரே இந்த ராகவன் ....தம்பிங்களா கொஞ்சம் அவருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா

    பதிலளிநீக்கு
  8. "மெலிஞ்சிருந்த அவள்
    கரகம் எடுத்துச்
    சுற்றிச் சுற்றி ஆடயிலே
    கனகாம்பரம் சுத்துனதுபோல்
    ராட்டினமாய் எம்மனசும்... "


    mm... kalakkureenga sister!

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு கவிதையிலும் பூக்கள் மணக்கின்றன..வார்த்தைகளும்..

    பதிலளிநீக்கு
  10. நன்றி ரிஷபன் மீட்டெடுப்போம் எல்லாவற்றையும்

    பதிலளிநீக்கு
  11. கனகாம்பரம் மணம் ரொம்ப தூக்கல் ...

    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)