வெள்ளி, 11 செப்டம்பர், 2009

குடி மகன்கள்

தினமும் கேட்கும் பதட்டமான சப்தங்கள் இன்றும்..
எங்கள் அவென்யுவின் எதிர்வரிசை காரை வீட்டை
ஒட்டிய ஒலைக்குடிசையிலிருந்து....

வாழ்வோடும்., வியாதியுற்ற குழந்தையோடும்.,
போராடும் அவள் வாழ்க்கைப்பட்டவனோடும்
போராடிக்கொண்டு...

ஆணாதிக்கக்கொம்புகள் முளைத்த மூர்க்கமிருகமாய்
அருந்திய சாராயம் தந்த அசுர பலத்தில் அவன்...
கொண்டையிட்ட பெண்புலியாய் அவள்...

ஒழுக்கம் சார்ந்த வசவுகள்.,
காற்றில் பரவிய விஷவாயுவாய்.,
நாற்றம் இன்று சகிக்க இயலாததாய்...

பங்குச் சந்தை சரிந்து லாபமோ நட்டமோ.,
எதைக்கொண்டாடவும் ஸ்டார் ஓட்டல்களில்
நண்பர்களுடன் அருந்திய விஸ்கி வாசனையுடன்
வரும் கணவர்களை வரவேற்கும் மேன்மக்கள்...
குழந்தைகளை காதுபொத்தி அழைத்துச்சென்றனர்..
தங்கள் ஒலி வெளியிடாத இறுகிய கதவுகளுக்குள்..

கதவைத் திறக்கும் போது வெளிப்படும்
சென்ட் வாசத்தில் சண்டையிட்ட வார்த்தைகளும்
கலந்து வருவதாய்...

நாளையும் இதெல்லாம் நடக்கலாம்...
ஆனாலும் சிறிது நேரத்தில் வாலறுந்த நரி போல்
கிடந்த அவனுக்குச் சட்டியில் சோறு தருகிறாள்...

ஆலைவாய்க் கரும்பாய்க் கிடந்தாலும்
அவனும் திருந்தப்போவது இல்லை...
அவளும் மாறப்போவது இல்லை....

4 கருத்துகள்:

  1. சிறிது நேரத்தில் வாலறுந்த நரி போல்”
    எப்படி இப்படியெல்லாம்? அனுபவமோ?

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் எதிர்த்தாப்புல நடக்குறதப்பார்த்தே எழுதுறமாக்கும் அண்ணாமலையானே

    பதிலளிநீக்கு
  3. //குழந்தைகளை காதுபொத்தி அழைத்துச்சென்றனர்..
    தங்கள் ஒலி வெளியிடாத இறுகிய கதவுகளுக்குள்..//

    அம்ம்ம்ம்மா.... எத்தனை அர்த்தம் இந்த வரிகளுக்குள்

    வலிமையான படைப்பு..

    அனுபவித்து வாசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி கதிர் உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)