செவ்வாய், 9 ஜனவரி, 2024

வெளிநாட்டு நாணயங்கள். காயின் கலெக்‌ஷன் - 2

 

காயின் கலெக்‌ஷன் - 1. 1 பைசா முதல் 25 பைசா ( நாலணா) வரை.


பஹ்ரைன்  மற்றும் மொரீஷியஸ் நாணயங்கள். 
பஹ்ரைன் தினார்.


மொரீஷியஸின் நாணயத்தில் இடம் பெற்றிருப்பவர் டாக்டர் தி ரைட் ஹானரபிள் ஸீவூசகுர் ராம்கூலம். மொரீஷியஸின் ஆட்சியாளர். சீப் மினிஸ்டர், ப்ரைம் மினிஸ்டராக இருந்தவர். இந்த நாணயம் 10 ரூபாய். 

அமெரிக்க ஐக்கியக் குடியரசின் நாணயங்கள். டாலர். IN GOD WE TRUST என்று பொரிக்கப்பட்டவை.

கென்னடி, பாராளுமன்றம், கழுகுச் சின்னம், குழந்தையைச் சுமக்கும் ஆதிவாசித் தாய் உருவம். லிபர்ட்டி சிலை ஆகியன இடம் பெற்றுள்ளன. 

ஒரு டைம், ஒரு செண்ட், கால் டாலர், ஒரு டாலர், ஆகிய நாணயங்கள் உள்ளன. 


சிங்கப்பூர் நாணயங்கள். சிங்கப்பூரா என்ற பெயருக்கு ஏற்ப சிங்கம் பொறித்த நாணயங்கள் இங்கே பிரசித்தம். 

ஒரு செண்ட், பத்து செண்ட், இருபது செண்ட் , ஒரு டாலர் நாணயங்கள். செம்பு, பித்தளை ஆகியவற்றிலும் வார்க்கப்பட்டுள்ளன.  ஒன்றில் டால்பினும் காட்சி அளிக்கின்றது. 

ஸ்ரீ லங்கா நாணயங்கள்

இலங்கை என்று எழுதப்பட்ட நாணயங்கள். 

ஐந்து சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், 

இலங்கை நாணயத்திலும் ஒற்றைச் சிங்கங்கள் காட்சி அளிக்கின்றன. 


கனடா, பூட்டான், அமெரிக்கா மற்றும் மற்ற வெளிநாட்டு நாணயங்கள். 



பல்வேறு மதிப்புக் கொண்டவை இந்நாணயங்கள். அன்றன்றைய ஃபாரக்ஸ்  (ஃபாரின் எக்சேஞ்ச் )நிலவரப்படி இவற்றின் மதிப்பு மாறும். 

இன்னும் சில வெளிநாட்டு நாணயங்களையும், ரூபாய் நோட்டுக்களையும் அடுத்த இடுகைகளில் பார்ப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)